From Wikipedia, the free encyclopedia
மல்தோவா குடியரசு (Republica Moldova) கிழக்கு ஐரோப்பாவில் நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே ருமேனியாவும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரேனும் அமைந்துள்ளன. 1812இல் இது உருசியப்ப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, உருசியாவின் வீழ்ச்சியின் பின்னர் 1918இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது. 1940 இல் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றின் பின்னர் இது சோவியத் ஒன்றியத்தின் கீழ் மல்தோவிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. பனிப்போர் முடிவில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது ஆகஸ்ட் 27, 1991 இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது.
மல்தோவா குடியரசு Republica Moldova | |
---|---|
குறிக்கோள்: Limba noastră-i o comoară எமது மொழி ஒரு பொக்கிஷம் | |
நாட்டுப்பண்: Limba noastră (ருமேனிய மொழி:) எமது மொழி | |
தலைநகரம் | சிஷினோ |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | மல்தோவிய மொழி1 (ருமேனியன்) |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | மையா சண்டு |
• தலைமை அமைச்சர் | வசிலி டார்லேவ் |
சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை | |
• தேதி | ஆகஸ்ட் 27, 1991 |
• முடிவு | டிசம்பர் 25, 1991 |
பரப்பு | |
• மொத்தம் | 33,843 km2 (13,067 sq mi) (139வது) |
• நீர் (%) | 1.4 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 4,320,490 (121வது3) |
3,383,3322 | |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $9,367 மில்லியன் (141வது) |
• தலைவிகிதம் | $2,962 (135வது) |
ஜினி (2003) | 33.2 மத்திமம் |
மமேசு (2006) | 0.694 மத்திமம் · 114வது |
நாணயம் | மல்டோவிய லியு (MDL) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (கிஐநே) |
ஒ.அ.நே+3 (கிஐகோநே) | |
அழைப்புக்குறி | 373 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | MD |
இணையக் குறி | .md |
|
மல்தோவா ஒரு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். நாட்டின் தலைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர். விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்தோவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வருகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.