பாசுபரசு
From Wikipedia, the free encyclopedia
பாசுபரசு (இலங்கை வழக்கு- பொஸ்பரஸ்) (Phosphorus, IPA:[ˈfɒsfərəs]) என்னும் வேதியியல் தனிமம் சில வகையான பாறைகளில் கிடைக்கும் ஒரு பொருள். இத் தனிமம் நைட்ரஜன் நெடுங்குழுவைச் சேர்ந்த மாழையிலி வகையைச் சேர்ந்தது. அணுவெண் 15 கொண்ட இத்தனிமத்தின் வேதியியல் குறி P ஆகும். இத் தனிமத்தின் வேதியியல் வினையில் பங்கு கொள்ளும் எதிர்மின்னிகளைக் கொண்டு இது பல் இயைனித் தனிமம் எனப்படுகின்றது.
பாசுபரசு | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
15P | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||
நிறமிலி, மெழுகு வெள்ளை, மஞ்சள், கருஞ்சிவப்பு, சிவப்பு, ஊதா, கருப்பு waxy white (yellow cut), red (granules centre left, chunk centre right), and violet phosphorus | |||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | பாசுபரசு, P, 15 | ||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈfɒsfərəs/ FOS-fər-əs | ||||||||||||||||||||||||
தனிம வகை | மாழையிலி | ||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 15, 3, p | ||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
30.973762(2) | ||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Ne] 3s2 3p3 2, 8, 5 | ||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | H. Brand (1669) | ||||||||||||||||||||||||
Recognized as an element by | அ. இலவாசியே[1] (1777) | ||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | (வெள்ளை) 1.823, (சிவப்பு) ≈ 2.2 – 2.34, (ஊதா) 2.36, (கருப்பு) 2.69 g·cm−3 | ||||||||||||||||||||||||
உருகுநிலை | (வெள்ளை) 44.2 °C, (கருப்பு) 610 °C | ||||||||||||||||||||||||
பதங்கமாகும் நிலை | (red) ≈ 416 – 590 °C, (ஊதா) 620 °C | ||||||||||||||||||||||||
கொதிநிலை | (வெள்ளை) 280.5 °C | ||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | (வெள்ளை) 0.66 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | (வெள்ளை) 12.4 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (வெள்ளை) 23.824 யூல்.மோல்−1·K−1 | ||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் (வெள்ளை) | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் (சிவப்பு, bp. 431 °C) | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 5, 4, 3, 2[2], 1[3], −1, −2, −3 (மிதமான காடிய ஆக்சைடு) | ||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 2.19 (பாலிங் அளவையில்) | ||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 1011.8 kJ·mol−1 | ||||||||||||||||||||||||
2வது: 1907 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
3வது: 2914.1 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 107±3 pm | ||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 180 பிமீ | ||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||
படிக அமைப்பு | triclinic | ||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | (வெள்ளை, சிவப்பு, ஊதா, கறுப்பு) diamagnetic[4] | ||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | (சிவப்பு) 0.236, (கறுப்பு) 12.1 W·m−1·K−1 | ||||||||||||||||||||||||
பரும தகைமை | (வெள்ளை) 5, (சிவப்பு) 11 GPa | ||||||||||||||||||||||||
CAS எண் | 7723-14-0 | ||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: பாசுபரசு இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
|
மிகுந்த விறுவிறுப்புடன் வேதியியல் வினைப் படுவதால், பாஸ்பரஸ் தூய, கலப்பில்லாத தனிமமாக இயற்கையில் கிடப்பதில்லை. வெண்மையான நிறம் கொண்ட ஒரு வகையான பாஸ்பரஸ் ஆக்ஸிஜனுடன் கலக்கும்பொழுது மங்கலாக வெண்னிற ஒளி உமிழ்கின்றது. இதனாலேயே இதன் கிரேக்க மொழிப் பெயர் "ஒளி பெற்றிருக்கும்" பொருள் என்பதாகும் பாஸ்பரஸ், வேளாண்மையில் பயிர்களுக்கு இடப்படும் உரத்தில் ஒரு முக்கிய ஊட்டம்தரும் பொருளாகப் பயன்படுகின்றது. உயிரினங்களில் டி.என்.ஏ என்னும் உயிர்ச்சுருளிழையில் உள்ள ஒரு முக்கியப் பொருளாகவும் செல்கள் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது.[5] தீக்குச்சிகளிலும், மத்தாப்பு வாணவேடிக்கை முதலியவற்றிலும், வெடிப்பொருள்களிலும் "மருந்தாகப்" பயன்படுகின்றது.[6] இது தவிர பூச்சிக் கொல்லிகளிலும், பற்பசை, மற்றும் அழுக்குநீக்கிப் படிகாரங்களிலும் பயன்படுகின்றது.[6]