From Wikipedia, the free encyclopedia
ஓல்மியம் (Holmium, ஹோல்மியம்) அணுவெண் 67 கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 98 நொதுமிகள் உள்ளன. ஓல்மியத்தின் வேதியியல் குறியீடு Ho ஆகும். இத் தனிமம் லாந்த்தனைடுகள் வரிசையைச் சேர்ந்த மெதுமையான, வளைந்து ஒடுங்கக்கூடிய வெள்ளிபோன்ற வெண்மையான மாழை. காற்றில் ஆக்சைடாகி சிதைவடையாமல் இருக்கும் தன்மை கொண்டது. மோனாசைட் (monazite), கடோலினைட் (gadolinite) ஆகிய கனிமங்களில் இருந்து கிடைக்கின்றது.
| |||||||||||||||||||||||||||||||||||||
பொது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
ஓல்மியம், Ho, 67 | ||||||||||||||||||||||||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை | லாந்த்தனைடுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
இல்லை, 6, f | ||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | வெள்ளிபோல் வெண்மை | ||||||||||||||||||||||||||||||||||||
அணு நிறை (அணுத்திணிவு) | 164.93032(2) g/mol | ||||||||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு | [Xe] 4f11 6s2 | ||||||||||||||||||||||||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) | 2, 8, 18, 29, 8, 2 | ||||||||||||||||||||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
இயல் நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | 8.79 கி/செ.மி³ | ||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி | 8.34 g/cm³ | ||||||||||||||||||||||||||||||||||||
உருகு வெப்பநிலை | 1734 K (1461 °C, 2662 °F) | ||||||||||||||||||||||||||||||||||||
கொதி நிலை | 2993 K (2720 °C, 4928 °F) | ||||||||||||||||||||||||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் | 17.0 கி.ஜூ/மோல் (kJ/mol) | ||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் | 265 கி.ஜூ/மோல் | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (25 °C) 27.15 ஜூ/(மோல்·K) J/(mol·K) | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | hexagonal | ||||||||||||||||||||||||||||||||||||
ஆக்சைடு நிலைகள் | 3 (கார ஆக்ஸைடு) | ||||||||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னியீர்ப்பு | 1.23 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 581.0 kJ/(mol | ||||||||||||||||||||||||||||||||||||
2nd: 1140 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||
3rd: 2204 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 175 பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
காந்த வகை | paramagnetic | ||||||||||||||||||||||||||||||||||||
மின்தடைமை | (r.t.) (பல்படிகம்) 814 nΩ·m | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துமை | (300 K) 16.2 வாட்/(மீ·கெ) W/(m·K) | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப நீட்சிமை | (அறை வெ. நி.) (பல்படிகம்) 11.2 மைக்ரோ மீ/(மீ·K) µm/(m·K) | ||||||||||||||||||||||||||||||||||||
ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி வடிவில்) | (20 °C) 2760 மீ/நொடி | ||||||||||||||||||||||||||||||||||||
யங்கின் மட்டு | 64.8 GPa | ||||||||||||||||||||||||||||||||||||
Shear modulus | 26.3 GPa | ||||||||||||||||||||||||||||||||||||
அமுங்குமை | 40.2 GPa | ||||||||||||||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் | 0.231 | ||||||||||||||||||||||||||||||||||||
விக்கர் உறுதிஎண் Vickers hardness | 481 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||||||||||||||
பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] | 746 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||||||||||||||
CAS பதிவெண் | 7440-60-0 | ||||||||||||||||||||||||||||||||||||
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள் |
இந்த அரிதில் கிடைக்கும் தனிமம் மூன்று இயைனி (trivalent) மாழை. தனிமமாகக் கிடைக்கும் பொருட்கள் யாவற்றினும் அதிக காந்தத் திருப்புமை கொண்ட பொருள் ஓல்மியம். இதன் காந்தத் திருப்புமை (10.6µB). இயிற்றியம் என்னும் தனிமத்துடன் சேர்ந்து பலவகையான காந்தப் பண்புகள் கொண்ட கலவைகளில் பயன்படுகின்றது.
ஓல்மியம் மெதுமையான வளைந்து நெளிந்து ஒடுங்கக்கூடிய மாழை. இது காற்றில் நிலையாக இருக்கக்கூடிய அவ்வளவாக அரிப்பு அடையாப் பொருள். காற்றில் ஈரப்பதம் இருந்தால் உயர் வெப்ப நிலைகளில் ஆக்ஸைடாக மாறி விடுகின்றது.
இதன் காந்தப் பண்புகளால், மிகுவலிமை கொண்ட காந்தங்கள் செய்யப் பயன்படுகின்றது. அணு உலையிலும் அணுக்கரு பிளவில் தோன்றும் நொதுமிகளை பற்றுவதற்குப் பயன்படுகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.