From Wikipedia, the free encyclopedia
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் (Late Period of Egypt), எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் உள்ளூர் பார்வோன்கள் கிமு 664 முதல் கிமு 525 வரை ஆண்ட பண்டைய எகிப்தை தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் கிமு 525 முதல் கிமு 332 வரை பாரசீகத்தின் அகமானிசியப் பேரரசில் எகிப்து இராச்சியம் ஒரு சிற்றரசாக விளங்கியது.[1]
பிந்தைய கால எகிப்து இராச்சியம் கிமு 664 - கிமு 332 | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
664 கிமு – 332 கிமு | |||||||||||
தலைநகரம் | சாய்ஸ், மெண்டஸ், செபென்னிடோஸ் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | பண்டைய எகிப்திய மொழி | ||||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
பார்வோன் | |||||||||||
வரலாற்று சகாப்தம் | எகிப்தின் மூன்றாம் இடைநிலக் காலம் | ||||||||||
• தொடக்கம் | 664 கிமு | ||||||||||
• முடிவு | 332 கிமு | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து |
கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் எகிப்து இராச்சியத்தைப் போரில் வீழ்த்தினார். எகிப்தின் பிந்தைய கால எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்ச பார்வோன்கள் நூபியாவில் தங்கள் எகிப்திய இராச்சியத்தை நிறுவி கிமு 525 முதல் கிமு 332 வரை ஆண்டனர். புது அசிரியப் பேரரசின் கீழ் சில காலம் எகிப்திய இராச்சியம் சிற்றரசாக விளங்கியது. கிமு 329-இல் மாசிடோனியப் பேரரசர் அலெக்சாண்டர் எகிப்திய இராச்சியத்தை கைப்பற்றினார். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனியக் காலத்தின் போது அலெக்சாண்டரின் கிரேக்கப் படைத்தலைவர் தாலமி சோத்தர் பண்டைய எகிப்து இராச்சியத்திற்கு பேரரசர் ஆனார்.[2]
எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சத்தின் ஆறு பார்வோன்கள் சைஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு கிமு 672 முதல் கிமு 525 முடிய ஆண்டதால் இவ்வம்சத்தை சைத்தி வம்சம் என்றும் குறிப்பர். இவ்வம்ச ஆட்சிக் காலத்தின் மெசொப்பொத்தேமியாவின் புது அசிரியப் பேரரசுப் படைகள் கிமு 663-இல் பண்டைய எகிப்தின் தீபை நகரத்தை சூறையாடினர். நைல் ஆற்றிலிருந்து கால்வாய்களை செங்கடல் வரை அமைக்கும் பணிகள் துவங்கியது. பிந்தைய கால எகிப்து இராச்சிய ஆட்சியின் போது பாம்பின் நஞ்சை முறிக்கும் மூலிகை பாபிரஸ் மருந்துத் தயாரிப்பு புகழ்பெற்றதாகும்[3][4] இக்காலத்திய பண்டைய எகிப்தில் விலங்கு வழிபாடும், விலங்குகளை மம்மிபடுத்துவதே புகழ் பெற்றிருந்தது. படேகோஸ் கடவுள் தலையில் ஸ்கார்ப் வண்டு அணிந்து, மனித தலையுடன் கூடிய இரண்டு பறவைகளைத் தோள்களில் தாங்கியிருப்பதும், ஒவ்வொரு கையிலும் ஒரு பாம்பைப் பிடித்துக் கொண்டிருப்பதும், முதலைகளின் மேல் நிற்பதுமான சித்திரங்கள் காட்டுகிறது. [5]
இக்காலத்தின் வாழ்ந்த யூத இறை வாக்கினர் அழும் எரேமியாவின் கூற்றுப்படி, கிமு 586-இல் பாபிலோனியர்களால் எருசலேம் கோவில் அழிக்கப்பட்ட பின்னர் யூதர்கள் எகிப்து நாட்டில் குடியேறினர்.
எரேமியாவும் பிற யூதர்களும் கீழ் கீழ் எகிப்தின் அகதிகளாக மிக்தோல், தாபான்ஹெஸ் மற்றும் மெம்பிசு நகரங்களில் குடியேறினர். சில யூத அகதிகள் மேல் எகிப்தின் எலிபெண்டைன் மற்றும் பிற குடியிருப்புகளில் குடியேறி வாழ்ந்தனர்.[6][7] இறை வாக்கினர் எரெமியா எகிப்தை ஆண்ட பார்வோன் ஆப்பிரிசை ஹோப்ரா எனும் குறித்துள்ளார்.[8]ஹோப்ராவின் ஆட்சிக் காலம் கிமு 570-இல் வன்முறைகளுடன் முடிவுற்றது.
பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் ஆட்சிக் காலத்தில் கிமு 525-இல் பெலுசியம் போரில் பண்டைய எகிப்து இராச்சியத்தைக் கைப்பற்றினார். இதனால் அகானிசியப் பேரரசின் கீழ் எகிப்து ஒரு மாகாணமாக விளங்கியது. எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சத்தின் இராச்சியம், பாரசீக அகாமனிசியப் பேரரசர்களான இரண்டாம் காம்பிசெஸ், முதலாம் செர்கஸ் மற்றும் முதலாம் டேரியஸ் ஆட்சியின் கீழ் விளங்கியது.
எகிப்தின் இருபத்தெட்டாம் வம்ச பார்வோன் அமிர்தியுஸ் பாரசீக அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். இவ்வம்ச மன்னர்கள் எந்த ஒரு நினைவுச் சின்னங்களை எழுப்பவில்லை. இவ்வம்சம் கிமு 404 –398 வரை ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தது. எகிப்தின் இருபத்தொன்பதாம் வம்சத்தவர்கள் மென்டிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு கிமு 398 முதல் கிமு 380 வரை 18 ஆண்டுகள் எகிப்தை ஆண்டனர். எகிப்தின் முப்பதாவது வம்சத்தவர்கள், மெசொப்பொத்தேமியாவின் பாரசீகர்கள் எகிப்தை வெல்லும் வரை கிமு 380 முதல் 343 முடிய ஆண்டனர். இவ்வம்சத்தின் இறுதிப் பார்வோன் இரண்டாம் நெக்தனெபோ ஆவார்.
கிமு 343-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் படையினர்களுக்கும், பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 30-ஆம் வம்ச இறுதிப் பார்வோன் இரண்டாம் நெக்தனெபோ படையினர்களுக்கும் நைல் வடிநிலத்தின் கிழக்கில் அமைந்த பெலுசியம் எனுமிடத்தில் நடைபெற்ற போரில், [9][10] எகிப்தியர்கள் தோல்வியுற்றனர். இப்போரின் முடிவில் எகிப்தில் எகிப்தியர்களின் பிந்தைய கால இராச்சியத்தின் ஆட்சி முடிவுற்றது.
கிமு 343 - 332-இல் பண்டைய எகிப்து இராச்சியத்தை கைப்பற்றிய அகாமனிசியப் பேரரசர்கள் மூன்றாம் அர்தசெராக்சஸ் (கிமு 343–338 ), நான்காம் அர்தசெராக்சஸ் (கிமு 338–336) மற்றும் இரண்டாம் டேரியஸ் (கிமு 336–332) எகிப்திய பார்வோன்களாக ஆட்சி செய்தனர். இவர்களை எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சத்தவர் எனபர். கிமு 332-இல் எகிப்தின் பாரசீகர்களின் ஆட்சியை, பேரரசர் அலெக்சாண்டர் கைப்பற்றினார். அலெக்சாண்டரின் இறப்பிற்குப் பின்னர், அவரது படைத்தலைவர் தாலமி சோத்தர் மற்றும் அவரது தாலமி வம்சத்தினர் எகிப்தில் தாலமி பேரரசை நிறுவி கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆண்டனர்.
மே 2022-ஆம் ஆண்டில் பண்டைய சக்காரா நகரத்தின் கல்லறைகளில் பிந்தைய கால எகிப்திய இராச்சிய காலத்திய கிமு 500 ஆண்டுகளுக்கு முந்தைய வர்ணம் தீட்டப்பட்ட மம்மிகளுடஃன் கூடிய 250 மரச்சவப்பெட்டிகளும், 150 எகிப்தியக் வெண்கலக் கடவுட் சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளில் அமூன், அனுபிஸ், இசிசு, ஒசிரிசு, ஓரசு மற்றும் ஆத்தோர் கடவுள்களின் வெண்கலச் சிலைகள், வழிபாட்டிற்கு தேவையான வெண்கலப் பாத்திரங்கள் மற்றும் இசைக்கருவிகள் மற்றும் தாயத்துகள் அடக்கம். நெப்திஸ் மற்றும் இசிசு கடவுள்களின் முகம் தங்க முகமூடிகள் அணியப்பட்டிருந்தன.[11][12]
பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட எகிப்திய, பாரசீகத்தின் அகாமனிசியர்கள் மற்றும் கிரேக்க தாலமி வம்சத்தினர்களின் ஆட்சிக் காலம் மற்றும் பார்வோன்கள்.[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.