புது அசிரியப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
புது அசிரியப் பேரரசு (Neo-Assyrian Empire) இரும்புக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை மையக் கொண்டு, கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த, [3][4][5] பண்டைய உலகின் பெரும் பேரரசுகளில் ஒன்றாகும்.[6] இது அசிரியாவின் இறுதிப் பேரரசாகும். இப்பேரரசின் புகழ்பெற்ற பேரரசர் அசூர்பனிபால் ஆவார்.
புது அசிரியப் பேரரசு | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 911–கிமு 609 | |||||||||||||||||||
![]() புதிய அசிரியப் பேரரசும் அதன் விரிவாக்கப் பகுதிகளும் | |||||||||||||||||||
தலைநகரம் | கிமு 911ல் அஸ்கூர் கிமு 879ல் நிம்ருத் கிமு 706ல் துர்ஷர்ருக்கின் கிமு 705ல் நினிவே கிமு 612ல் ஹர்ரன் | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | அக்காதியம் அரமேயம் சுமேரிய மொழி (புழக்கத்தில் மறைந்துவிட்டது) | ||||||||||||||||||
சமயம் | அசிரிய-பாபிலோனிய சமயம் | ||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||
அசிரியாவின் மன்னர் | |||||||||||||||||||
• கிமு 911–891 | இரண்டாம் ஆதாத் நிராரி (முதல்) | ||||||||||||||||||
• கிமு 612–609 | இரண்டாம் அசூர்-உப்பல்லித் (இறுதி) | ||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் | ||||||||||||||||||
• இரண்டாம் அதாத்-நிராரி | கிமு 911 | ||||||||||||||||||
• நினிவே போர் | கிமு 612 | ||||||||||||||||||
• ஹர்ரான் முற்றுகை | கிமு 609 | ||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||
கிமு 670[2] | 1,400,000 km2 (540,000 sq mi) | ||||||||||||||||||
| |||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | ஈராக் சிரியா இசுரேல் துருக்கி எகிப்து சூடான் சவூதி அரேபியா யோர்தான் ஈரான் குவைத் லெபனான் சைப்பிரசு பலத்தீன் |
பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி, உலக வரலாற்றில் முதல் உண்மையான பேரரசாக அசிரிய மக்களின் இப்புதிய பேரரசு விளங்கியது.[7] அசிரியர்கள், முதலில் இரும்பு ஆயுதங்களுடன், போரில் தந்திரோபாயங்களுடன் போரிட்டதால், அசிரியர்களை போரில் எளிதில் வெல்ல இயலவில்லை.[7]
கிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியா உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது.
புது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள், கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், அனத்தோலியா, காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, உரார்த்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர்.[8][9]
பழைய அசிரிய இராச்சியத்திற்குப் (கிமு 2025–1378) பின் தோன்றிய மத்திய அசிரியப் பேரரசுக் (கிமு 1365–1050) பின் புது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காடியன் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.[10]
நினிவே போர்
கிமு 612-இல் புது அசிரியப் பேரரசிடமிருந்து நினிவே நகரத்தைக் கைப்பற்றுவதற்கு நடந்த போராகும். இப்போரின் முடிவில் மீடியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் 750 எக்டேர் பரப்பளவு கொண்ட உலகின் பெரும் நகரங்களில் ஒன்றான நினிவே நகரத்தை கைப்பற்றினர். இப்போரின் முடிவில் புது அசிரியப் பேரரசு நலிவுறத் தொடங்கியதுடன், புது பாபிலோனியப் பேரரசு எழுச்சியுறத் துவங்கியது.
கிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னிபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது.
கிமு 616ல் பாரசீக மன்னர் பாபிலோன், சால்டியா மற்றும் சிதியர்களுடன் கூட்டு சேர்ந்து, புது அசிரியப் பேரரசு-எகிப்திய பேரரசுகளுடன் போரிட்டனர். ஹர்ரன் நகரத்தின் வீழ்ச்சிக்குப் பின், புது அசரியப் பேரரசு, தனது விரிவாக்கப் பகுதிகளை இழந்து, தனது இராச்சியத்தை அசிரியாவில் மட்டும் நிலைநாட்டிக் கொண்டனர்.
புது அசிரியப் பேரரசு வீழ்ச்சியுற்றாலும், அசிரியர்களில் வரலாறு தொடர்ந்தது. தற்காலத்திலும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் அசிரியா மக்கள் வாழ்கின்றனர்.[11]
அசிரியாவின் வீழ்ச்சிக்குப் பின்
கிமு 609ல் இறுதி அசிரியப் பேரரசரின் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், அசிரியப் பகுதிகளை புது பாபிலோனியப் பேரரசு, பண்டைய எகிப்து, மீடியா பேரரசும், கிமு 550ல் அகாமனிசியப் பேரரசும், பின்னர் சாசானியப் பேரரசும் கைப்பற்றி ஆண்டனர்.
புது அசிரியப் பேரரசின் முக்கிய ஆட்சியாளர்கள்


புது அசிரியப் பேரரசின் காலம் | |||||||||
பேரரசர் பெயர் | ஆட்சிக் காலம்[12][13][14] | குறிப்புகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் அதாத் நிராரி | கிமு 912–891 | இரண்டாம் அசூர்-தன்னின் மகன் | |||||||
இரண்டாம் துக்குல்தி-நினுர்தா | கிமு உ891–884 | இரண்டாம் அதாத்-நிராரியின் மகன் | |||||||
இரண்டாம் அசூர்-நசிர்-பால் | கிமு 884–859 | இரண்டாம் துக்குல்தி-நினுர்தாவின் மகன் | |||||||
மூன்றாம் சால்மனேசர் | கிமு 859–824 | இரண்டாம் அசூர்-நசிர்-பாலின் மகன் | |||||||
ஐந்தாம் சாம்ஷீ-அதாத் | கிமு 824–811 | மூன்றாம் சால்மனேசரின் மகன் | |||||||
சாம்மு-ரமத், அரசப் பிரதிநிதி கிமு 811–808 | |||||||||
மூன்றாம் அதாத்-நிராரி | கிமு 811–783 | ஐந்தாம் ஷாம்சி-அதாத்தின் மகன் | |||||||
நான்காம் சால்மனேசேர் | கிமு 783–773 | மூன்றாம் அதாத்-நிராரியின் மகன் | |||||||
மூன்றாம் அசூர்-தன் | கிமு 773–755 | நான்காம் சால்மனேசேரின் மகன்; சூரிய கிரகணம் கிமு 763 | |||||||
ஐந்தாம் அசூர்-நிராரி | கிமு 755–745 | மூன்றாம் அதாத்-நிராரியின் மகன் | |||||||
திக்லாத் - மூன்றாம் பைல்செர் | கிமு 745–727 | ஐந்தாம் அசூர்-நிராரி | |||||||
ஐந்தாம் ஷால்மனேசர் | கிமு 727–722 | திக்லாத் - மூன்றாம் பைல்செர் | |||||||
இரண்டாம் சர்கோன் | கிமு 722–705 | ||||||||
சென்னத்செரிப் | கிமு 705–681 | ||||||||
ஈசர்ஹத்தோன் | கிமு 681–669 | ||||||||
அசூர்பனிபால் | கிமு 669 – 631 & 627 | ||||||||
அசூர்- எடில்-இலானின் | கிமு 631–627 | ||||||||
சின் - சிமு - லிசிரி | கிமு 626 | ||||||||
சின் -சர் - இஷ்குன் | கிமு 627–612 | நினேவே போர் (கிமு612) (அசிரியத் தலைநகரம் நினிவே நகரம் வீழ்தல்) | |||||||
கிமு 612ல் மீடியர்கள், பாபிலோனியர்கள் மற்றும் சிதியர்கள், எகிப்தியர்களின் ஆதரவுடன் அசிரியாவின் தலைநகரமான நினாவே நகரைக் கைப்பற்றுதல். அசிரியப் போர்ப்படைத் தலைவன் ஹர்ரான் நகரைத் தலைநகராகக் கொண்டு குறுகிய அசிரிய இராச்சியத்தை சிறிது காலம் ஆண்டான். | |||||||||
இரண்டாம் அசூர் - உபாலித் | கிமு 612 - 608 | ஹர்ரான் நகரம் மீடியப் பேரரசு மற்றும் பாபிலோனியர்களால் வெல்லப்பட்டது. |

இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.