நினிவே போர் (கிமு 612)
From Wikipedia, the free encyclopedia
நினிவே போர் (Battle of Nineveh) கிமு 612-இல் புது அசிரியப் பேரரசிடமிருந்து நினிவே நகரத்தைக் கைப்பற்றுவதற்கு நடந்த போராகும். இப்போரின் முடிவில் மீடியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் 750 எக்டேர் பரப்பளவு கொண்ட உலகின் பெரும் நகரங்களில் ஒன்றான நினிவே நகரத்தை கைப்பற்றினர். இப்போரின் முடிவில் புது அசிரியப் பேரரசு நலிவுறத் தொடங்கியதுடன், புது பாபிலோனியப் பேரரசு எழுச்சியுறத் துவங்கியது.
நினிவே போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() நினிவே நகரத்தின் வீழ்ச்சி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
புது அசிரியப் பேரரசு | மீடியாப் பேரரசு பாபிலோனியர்கள் ]] சிதியர்கள் பாரசீகர்கள் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சின்ஷாரிஷ்குன் | சயாக்சரேஸ் நெபுலேசர் |
||||||
இழப்புகள் | |||||||
அறியப்படவில்லை | அறியப்படவில்லை | ||||||
பின்னணி
மெசொப்பொத்தேமியாவில் மத்திய கால அசிரியப் பேரரசுக்குப் (கிமு 1366–1074) பின்னர் நினிவே நகரத்தை தலைநகராகக் கொண்ட புது அசிரியப் பேரரசு கிமு 10-ஆம் நூற்றாண்டு முதல் எழுச்சியுறத் தொடங்கி, கிமு 8 மற்றும் 7-ஆம் நூற்றாண்டுகளில் பொலிவு பெறத் துவங்கியது. பேரரசர் அசூர்பனிபால் ஆட்சியின் போது பண்டைய அண்மை கிழக்கு மற்றும் நடு ஆசியாப் பகுதிகளை தனது புது அசிரியப் பேரரசுடன் இணைத்தார். கிமு 627-இல் பேரரசர் அசூர்பனிபால் இறப்பிற்குப் பின் புது அசிரியப் பேரரசுக்கு எதிராக தத்தமது பகுதிகளில் மீடியர்கள், பாபிலோனியர்கள், சிதியர்கள் மற்றும் பாரசீகர்கள் உள்நாட்டு கிளர்ச்சிகளை துவக்கினர். இதனால் கிமு 625 முதல் புது அசிரியப் பேரரசு நலிவுறத் துவங்கியது. கிமு 612-இல் எதிராளிகள் அசிரியாவின் செல்வாக்கு படைத்த நினிவே நகரத்தை போரில் கைப்பற்றி அழித்தனர்.
போருக்குப் பின்னர்
நலிவுற்ற புது அசிரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அசூர்-உபாலித்தை எதிர்த்து, புது பாபிலோனியப் பேரரசினர் கூட்டாளிகளுடன் இணைந்து பல முறை போரிட்டனர். போரில் 609-ல் ஹர்ரான் நகரம், 605-இல் சர்கெமிஷ் நகரம் வீழ்ந்தது. இத்துடன் புது அசியப் பேரரசின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.