Remove ads

சாசானியப் பேரரசு என்பது பொ. ஊ. 7 - 8ஆம் நூற்றாண்டுகளின் தொடக்க கால முஸ்லிம் படையெடுப்புக்கு முன்னர் ஈரானில் கடைசியாக நிலைத்திருந்த பேரரசு ஆகும். அலுவல் ரீதியாக இது இரான்ஷார் ("ஈரானியர்களின் நிலம் அல்லது பேரரசு")[12][13] என்று அறியப்பட்டது. சாசான் குடும்பத்தின் பெயரை இப்பேரரசு பெற்றிருந்தது. இது நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்திருந்தது. பொ. ஊ. 224 முதல் பொ. ஊ. 651 வரை நீடித்திருந்தது. இதன் மூலமாக இது நீண்ட காலமாக நீடித்திருந்த பாரசீக ஏகாதிபத்திய அரசமரபாக திகழ்கிறது.[2][14] பார்த்தியப் பேரரசுக்கு பிறகு சாசானியப் பேரரசு உருவானது. பிந்தைய பண்டைக் காலத்தில் இதன் அண்டை நாட்டு எதிரியான உரோமைப் பேரரசுடன் (பொ. ஊ. 395க்கு பின்னர் பைசாந்தியப் பேரரசு) பாரசீகர்களை ஒரு முக்கியமான சக்தியாக இப்பேரரசு மீண்டும் நிறுவியது.[15][16][17]

விரைவான உண்மைகள் சாசானியப் பேரரசுஈரானியர்களின் பேரரசுஇரான்ஷார், தலைநகரம் ...
சாசானியப் பேரரசு
ஈரானியர்களின் பேரரசு
இரான்ஷார் [1][2]
224–651
கொடி of பாரசீகம்
தெராபசு கவியனி
(அரசின் கொடி)
சிமுர்க்(ஏகாதிபத்திய சின்னம்) of பாரசீகம்
சிமுர்க்
(ஏகாதிபத்திய சின்னம்)
இரண்டாம் கோசுரோவின் கீழ் அண். 620இல் அதன் உச்சபட்ச விரிவாக்கத்தில் சாசானியப் பேரரசு
இரண்டாம் கோசுரோவின் கீழ் அண்.620இல் அதன் உச்சபட்ச விரிவாக்கத்தில் சாசானியப் பேரரசு
தலைநகரம்
  • இசுதகர் (224–226)[3]
  • சிதேசிபோன் (226–637)
பேசப்படும் மொழிகள்
சமயம்
அரசாங்கம்நில மானிய முறைமை[7]
ஷாஹின்ஷா 
 224–241
முதலாம் அர்தசிர் (முதல்)
 632–651
மூன்றாம் யெஸ்டெகெடர்டு (கடைசி)
வரலாற்று சகாப்தம்பிந்தைய தொல்பழமைக் காலம்
 கோர்மோசுதகன் யுத்தம்
28 ஏப்ரல் 224
 ஐபீரியப் போர்
526–532
 கடைசி உரோமானிய-பாரசீகப் போர்
602-628
 சாசானிய உள்நாட்டுப் போர்[8]
628–632
633–651
651
பரப்பு
550[9][10]3,500,000 km2 (1,400,000 sq mi)
முந்தையது
பின்னையது
பார்த்தியப் பேரரசு
இந்தோ சிதியன் பேரரசு
ஐபீரிய இராச்சியம்
குசானப் பேரரசு
ஆர்மீனிய இராச்சியம்
பெர்சிசு மன்னர்கள்
ராசிதீன் கலீபாக்கள்
தபுயித் அரசமரபு
பவந்த் அரசமரபு
சர்மிகிரிதுகள்
தாமவந்தின் மஸ்குகான்கள்
கரின்வந்த் அரசமரபு
தோகரா யப்குகள்
தற்போதைய பகுதிகள்
மூடு
சசானிய அரச குலப் பெண்னின் உருவம் பதித்த கிண்ணம், காலம்; கி மு 3-4-ஆம் நாற்றாண்டு
632-இல் அரேபியர்கள் சசானியப் பேரரசை கைப்பற்றும் பொழுது சசானியப் பேரரசு

இப்பேரரசை முதலாம் அர்தசிர் தோற்றுவித்தார். உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் உரோமானியர்களுடனான போர்கள் ஆகியவற்றின் காரணமாக பலவீனமடைந்து இருந்த பார்த்திய பேரரசின் காலத்தில் ஆட்சிக்கு வந்த ஈரானிய ஆட்சியாளர் முதலாம் அர்தசிர் ஆவார். கடைசி பார்த்திய ஷாஹின்ஷா நான்காம் அர்தபனசை பொ. ஊ. 224இன் கோர்மோசுதகன் யுத்தத்தில் தோற்கடித்ததற்கு பிறகு இவர் சாசானிய அரசமரபை நிறுவினார். ஈரானின் நிலப்பரப்புக்களை விரிவாக்கியதன் மூலம் அகாமனிசியப் பேரரசின் மரபை மீண்டும் நிலை நாட்ட தொடங்கினார். அதன் உச்சபட்ச நிலப்பரப்பு விரிவாக்கத்தின் போது சாசானியப் பேரரசானது தற்கால ஈரான் மற்றும் ஈராக்கின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. அனத்தோலியா மற்றும் எகிப்து உள்ளிட்ட கிழக்கு நடு நிலத்தில் இருந்து தற்கால பாக்கித்தானின் பகுதிகள், மேலும் தெற்கு அரேபியாவின் பகுதிகள் முதல் காக்கேசியா மற்றும் நடு ஆசியா வரையும் பரவியிருந்தது. ஒரு புராணக் கதையின் படி, சாசானியப் பேரரசின் வெக்சில்லாயிதாக (சின்னம்)[a] தெராபசு கவியானி (மன்னர்களின் தரப் படி) இருந்தது.[18]

சாசானிய ஆட்சிக் காலமானது ஈரானிய வரலாற்றில் ஓர் உச்ச நிலையாக கருதப்படுகிறது.[19] ராசிதீன் கலீபாக்களின் கீழ் அரபு முஸ்லீம்களால் வெல்லப்பட்டு, இறுதியாக ஈரான் இஸ்லாமிய மயமாக்கப்பட்டதற்கு முன்னர் பண்டைக் கால ஈரானிய கலாச்சாரத்தின் உச்ச நிலையாக பல வழிகளில் இப்பேரரசு கருதப்படுகிறது. தங்களது குடி மக்களின் பல்வேறு வகை சமய நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களிடம் சாசானியர்கள் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டனர். ஒரு சிக்கலான மற்றும் மையப்படுத்தப்பட்ட அரசாங்க நிர்வாக அமைப்பை உருவாக்கினர். தங்களது ஆட்சியை முறைப்படுத்தும் மற்றும் ஒன்றிணைக்கும் சக்தியாக சரதுச சமயத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தனர்.[20] இவர்கள் மேலும் பிரமாண்டமான நினைவுச் சின்னங்கள், பொதுப் பணிகள், மற்றும் கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் புரவலர்களாக விளங்கினர். இந்த பேரரசின் கலாச்சார தாக்கமானது இதன் நிலப்பரப்பு எல்லைகளையும் தாண்டி விரிவடைந்திருந்தது. இதில் மேற்கு ஐரோப்பா,[21] ஆப்பிரிக்கா, [22]சீனா மற்றும் இந்தியா[23] ஆகியவையும் அடங்கும். ஐரோப்பிய மற்றும் ஆசிய நடுக் கால கலையை வடிவமைப்பதிலும் உதவி செய்தது.[24] பெரும்பாலான இஸ்லாமிய கலாச்சாரத்தின் அடிப்படையாக பாரசீக கலாச்சாரம் உருவானது. முஸ்லிம் உலகம் முழுவதும் கலை, கட்டடக் கலை, இசை, இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் மீது தாக்கத்தை இக்கலாச்சாரம் ஏற்படுத்தியது.[25]

Remove ads

பெயர்

அலுவல் பூர்வமாக இப்பேரரசானது ஈரானியர்களின் பேரரசு (நடுக் கால பாரசீகம்: இரான்ஷார், பார்த்தியம்: ஆர்யன்ஷார், கிரேக்கம்: ஆரியனோன் எத்னோசு) என்று அறியப்பட்டது. இப்பெயரானது முதன் முதலில் மன்னர் முதலாம் சாபுரின் பெரும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் மன்னர் கூறுகிறதாவது "ஈரானியர்களின் பேரரசின் பிரபு நான்" (நடுக் கால பாரசீகம்: இரான்ஷார் க்‌ஷ்வதய் ஹெம், பார்த்தியம்: ஆர்யன்ஷார் க்‌ஷ்வதய் அஹெம், கிரேக்கம்: எகோ... தோவு ஆரியனோன் எத்னோசு டெஸ்போடெஸ் எயிமி).[26]

மிகப் பொதுவாக ஆட்சி செய்யும் அரசமரபானது சாசானுக்குப் பிறகு பெயரிடப்பட்டு இருந்ததால் இந்த பேரரசானது சாசானியப் பேரரசு என வரலாற்று மற்றும் கல்வி ஆதாரங்களில் அறியப்படுகிறது. இப்பெயரானது ஆங்கிலத்தில் சாசானியப் பேரரசு, சாசானிது பேரரசு மற்றும் சாச்சானிது பேரரசு என்று பதிவிடப்பட்டுள்ளது. வரலாற்றாளர்கள் சாசானியப் பேரரசை புதிய பாரசீகப் பேரரசு என்று குறிப்பிடுகின்றனர். பார்சு (பெர்சிசு)[27] என்ற இடத்திலிருந்து தோன்றிய இரண்டாவது ஈரானியப் பேரரசு இதுவாக இருந்ததால் இப்பெயரை இது பெற்றது. அப்பகுதியிலிருந்து தோன்றிய முதல் ஈரானியப் பேரரசு அகாமனிசியப் பேரரசு ஆகும்.

Remove ads

சாசானிய பேரரசின் பகுதிகள்

சாசானியப் பேரரசில் மேற்காசியா, நடு ஆசியா, வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் உள்ள தற்கால பாகிஸ்தான், ஆப்கானித்தான், இரான், ஈராக் ஆர்மீனியா, ஜார்ஜியா, அசர்பைஜான், கசக்ஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான், பஹ்ரைன், குவைத், எகிப்து, லிபியா, பாலஸ்தீனம், இசுரேல், சிரியா, லெபனான், யோர்தான், ஓமான், யெமன், கத்தார் போன்ற நாடுகளை முழுமையாகவும் துருக்கியின் பெரும் பகுதிகளையும் உருசியா, இந்தியாவின் சில பகுதிகளையும் கொண்டிருந்தது. [18]

சமயம்

சசானியப் பேரரசில் பெரும்பாலான மக்கள் சரத்துஸ்திர சமயம், யூத சமயம், நெஸ்டோரியக் கிறித்தவம், மானி சமயங்கங்ளைப் பின்பற்றினர். சிறிதளவு மக்கள் இந்து சமயம், அஞ்ஞானம், பௌத்தம் பாபிலோனிய சமயங்களைப் பின்பற்றினர். அரபு முஸ்லிம்களின் தொடர் படையெடுப்புகளால் சாசானியப் பேரரசு வீழ்ந்த பின்பு பெரும்பாலான சாசானியப் பேரரசின் பாரசீக மக்கள் 652 ஆம் ஆண்டிற்கு பின்னர் இசுலாமிய சமயத்தை தழுவினர்.

மொழிகள்

சசானியப் பேரரசில் அலுவல் மொழியாக மத்திய கால பாரசீக மொழியும், அரமேயம், பார்த்திய மொழி, கிரோக்க மொழி என்பனவும் வட்டார மொழிகளும் பேசப்பட்டன.

நாகரிகமும் பண்பாடும்

சசானிய பேரரசின் காலம், ஈரானிய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. பாரசீகத்தின் சசானிய பேரரசு காலத்தில் இரானின் நாகரீகம் மற்றும் பண்பாடு உயர்ந்த இடத்தில் இருந்தது. சசானியப் பேரரசின் ஆட்சிக் காலம் பாரசீகத்தின் பொற்காலமாக விளங்கியது. சசானியப் பேரரசின் காலத்தில், பாரசீகர்களிடம் ரோமானியர்களின் கலாசார, நாகரீகத்தின் தாக்கம் ஏற்பட்டது. [28]p109 உரோமைப் பேரரசு, சசானியப் பேரரசை தனக்கு நிகராக கொண்டாடியது. இரு பேரரசுகளுக்கிடையே தொடர்ந்த கடிதத் தொடர்பும் இருந்தது. [29] Africa,[30]

ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் மத்திய கால கலை வளர்ச்சிக்கு சீனா மற்றும் இந்திய நாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. [31]

Remove ads

சாசானிய பேரரசின் வரலாற்றுக் கோடுகள்

224-271: முதலாம் அர்தசிர் ஆட்சிக் காலம்;
  • 229–232: ரோமப் பேரரசுடன் போர்

241–271: முதலாம் ஷபூரின் ஆட்சிக் காலம்;

  • 252–261:ரோமர்களுடனான போரில் ரோமைக் கைப்பற்றல்
  • 215–271: பாரசீகத்தில் தீர்க்கதரிசி மானி , மானி சமயத்தை நிறுவி பரப்புதல்

271–301: பேரரசின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சண்டைகள்

283: ரோமர்களுடனான போரில், சசாசனிய பேரரசின் தலைநகர் டெஸ்சிபானை ரோமானியர்கள் சூறையாடல்.

296-298: ரோமர்களுடனான போரில் தோற்ற சசானியர்கள், டைகிரீஸ் ஆற்றிக்கு கிழக்கின் ஐந்து மாகாணங்களை ரோமானியர்களுக்கு வழங்கினர்.

309–379: இரண்டாம் மகா ஷாப்பூரின் ஆட்சிக் காலம்:

  • 337–350: உரோமானியர்களுடனான முதல் போரில் சசானியர்கள் சிறிது வெற்று அடைதல்.
  • 359–363: இரண்டாம் போரில், ரோமானியர்களிடம் இழந்த டைகிரீஸ் ஆற்றின் கிழக்குப் பகுதிகளை சசானியர்கள் திரும்பப் பெறுதல்.
  • 387: ஆர்மினியாவை ரோமானியர்களும் பாரசீகர்களும் பிரித்துக் கொள்தல்.

399–420: முதலாம் யாஸ்தெகெர்ட் (Yazdegerd) ஆட்சிக் காலம்.

  • 409: கிறித்துவர்கள் பொது இடங்களில் தேவாலயங்களை எழுப்பவும், சமய வழிபாடுகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.
  • 416–420: கிறித்துவர்களைத் துன்புறுத்தும் முந்தையச் சட்டங்களை திரும்பப் பெறப்பட்டது.

420–438: ஐந்தாம் பக்ரம் ஆட்சிக் காலம்;

  • 420–422: ரோமானியர்களுடம் போர்
  • 428: பாரசீகத்தின் ஆர்மினியா மண்டலம், சசானியப் பேரரசுடன் இணைத்தல்.

438–457: இரண்டாம் யாஸ்தெகெர்ட் (Yazdegerd) ஆட்சிக் காலம்;

  • 441: ரோமானியர்களுடம் போர்
  • 449-451: ஆர்மீனியர்களின் கிளர்ச்சி

482-483: ஆரிமீனியர்கள் மற்றும் ஐபீரியர்களின் கிளர்ச்சி

483: பாரசீகர்கள், கிறித்துவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதற்கான அரசாணை வெளியிடல்.

484:சசானிய மன்னர் முதலாம் பெரோஸ் (Peroz I) ஹெப்தலைட்டுகளால் (Hephthalites) வெல்லப்பட்டு பின் கொல்லப்படல்.

491:ஆர்மீனியாவில் கிளர்ச்சி;

502-506: பைசாந்தியர்களுடன் போர்

526-532: மீண்டும் பைசாந்தியர்களுடன் போர்

531–579: முதலாம் கொஸ்ரோவ் மன்னரின் ஆட்சி;

540–562: பைசாந்தியர்களுடன் போர்

572-591: பைசாந்தியர்களுடன் நடந்த போரில் ஆர்மீனியாவை சசானியர்கள் இழந்தனர்.

590–628: இரண்டாம் கொஸ்ரோவ் மன்னரின் ஆட்சி;

603–628: பைசாந்தியர்களுடன் நடந்த போரில், சசானியர்கள் மெசொப்பொத்தேமியா, சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் காக்கேசியா ஆகிய நாடுகளை கைப்பற்றுதல்.

610: திக்காரில் நடைபெற்ற கலீபாவின் அரபு நாட்டுப் படைகள் சசானியப் படைகளை வெல்தல்.

626: போரில் பைசாந்தியம் சசானியர்களால் எளிதில் கைப்பற்ற இயலவில்லை.

627: பைசாந்தியப் பேரரசர் ஹெராகிலீஸ் அசிரியா மற்றும் மெசொப்பொத்தேமியாவை வெற்றி கொண்டதுடன், நினிவே நகரத்தில் நடந்த போரில் சசானியப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

628–632: குழப்பமான காலத்தில் பல மன்னர்கள் ஆண்டனர்.

632–642: மன்னர் மூன்றாம் யெஸ்டெகெர்ட் (Yazdegerd III) ஆட்சிக் காலம்;

636: அரபு இசுலாமியப் படைகள் சசானியப் பேரரசை தோற்கடித்தல்.

642: நஹாவந்துப் போரில் அரபு இசுலாமியர்கள் இறுதியாக பாரசீகப் படைகளை வெற்றிக் கொள்ளுதல்.

651: இறுதி சசானியப் பேரரசர் மூன்றாம் யெஸ்டெகெர்ட் , தற்கால துருக்மெனிஸ்தானில் வைத்து கொலை செய்யப்படல். சசானியப் பேரரசு முடிவுக்கு வருதல். பேரரசரின் மகன் பிரோஸ் மற்றும் பிறரும் சீனாவிற்கு நாடு கடத்தப்படல்.

Remove ads

இதனையும் காண்க

குறிப்புகள்

  1. An object which functions as a flag but differs from it in some respect, usually appearance. Vexilloids are characteristic of traditional societies and often consist of a staff with an emblem, such as a carved animal, at the top.

மேற்கோள்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads