சபாவித்து வம்சம்

From Wikipedia, the free encyclopedia

சபாவித்து வம்சம்

சபாவித்து வம்சம் (Safavid dynasty) நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாம் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.[6]

விரைவான உண்மைகள் சபாவித்து வம்சம்دودمان صفویDudmān e Safavi, நிலை ...
சபாவித்து வம்சம்
دودمان صفوی
Dudmān e Safavi
1501–1736
Thumb
கொடி[1]
Thumb
சின்னம்[3]
Thumb
பேரரசர் முதலாம் அப்பாஸ் ஆட்சியில் சபாவித்துப் பேரரசின் வரைபடம்
நிலைபேரரசு
தலைநகரம்தப்ரிஸ்
(1501–1555)
குவாஸ்வின்
(1555–1598)
ஸ்பாஹன்
(1598–1736)
பேசப்படும் மொழிகள்அலுவல் மொழி பாரசீகம். பிற மொழிகள் அரபு, அஜர்பைஜானி மொழி, ஜார்ஜியா மொழி மற்றும் துருக்கி மொழி
சமயம்
சியா இசுலாம், பன்னிருவர் பிரிவு
அரசாங்கம்இசுலாமிய முடியாட்சி
ஷாகான்ஷா 
 1501–1524
முதலாம் இசுமாயில்(துவக்கம்)
 1732–1736
மூன்றாம் அப்பாஸ் (முடிவு)
விசியர் 
 1501–?
முகமது ஜக்காரியா குஜுஜி (முதல்)
 1729–1736
நாதிர் குவாலி பெக் (இறுதி)
சட்டமன்றம்அரசவைக் குழு
வரலாறு 
 சபியத்தீன் அட்ராபிலி சபாவியா ஆட்சியை நிறுவுதல்
1301
 தொடக்கம்
1501
 ஹோத்தாகி பேரரசின் ஆக்கிரமிப்பு
1722
 சபாவித்து நாதிர் ஷா மீண்டும் கைப்பற்றுதல்
172629
 முடிவு
மார்ச் 1736
 நாதிர் ஷா முடிசூட்டிக்கொள்தல்
1 அக்டோபர் 1736
பரப்பு
2,850,000 km2 (1,100,000 sq mi)
நாணயம்துமான், அப்பாசி நாணயம், ஜார்ஜியன் அப்பாசி, ஷாகி[4]
  • 1 Tuman = 50 அப்பாசி
  • 1 Tuman = 50 பிராஞ்ச் லிவெரே
  • 1 Tuman = £3 6s 8d.
முந்தையது
பின்னையது
[[தைமூர் பேரரசு]]
அக் கோயுன்லு
சிரவன்ஷா
மரசியான்
பாதுஸ்பானித்துகள்
மிகிராபந்திகள்
அப்ராசியாப் வம்சம்
ஓர்மஸ் இராச்சியம்
ஹோத்தாகி வம்சம்
அப்சரித்து வம்சம்
உருசியப் பேரரசு
உதுமானியப் பேரரசு
தற்போதைய பகுதிகள்
a State religion.[5]
மூடு

சபாவித்து பேரரசு போர்க்களங்களில் வெடி மருந்துகளை பயன்படுத்தியதால், இதனை வெடிமருந்து பேரரசு என்றும் அழைப்பர்.[7]

சபாவித்து வம்சத்தின் ஆட்சி இரானிய அஜர்பைசான் பிரதேசத்தின் ஆர்டபில் நகரத்தில் முதலாம் ஷா இசுமாயில் (1501–24) என்பவரால் நிறுவப்பட்டது.

சபாவித்து வம்சத்தினர், இசுலாமிய சூபி - குர்திஷ் கலப்பினத்தவர் ஆவார். [8]சபாவித்து வம்சத்தினர் அசர்பைஜானியர்களுடனும், [9] ஜார்ஜியா நாட்டு மக்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். [10]

சபாவித்து வம்சத்தினர் 1501 முதல் 1722 முடிய தற்கால ஈரான், ஈராக், அசர்பைஜான், பாகாரேயின், ஆர்மீனியா, ஜார்ஜியா, குவைத், சிரியா, துருக்கியின் சில பகுதிகள், வடக்கு காகசஸ், உஸ்பெகிஸ்தான், ஆப்கானித்தான், பாகிஸ்தான், துருக்மெனிஸ்தான் பகுதிகளை ஆண்டனர்.

1736-இல் சபாவித்து பேரரசு சிதறுண்டாலும், ஈரானை சியா இசுலாம் பிரிவுக்கு மாற்றியதுடன், அனதோலியா, காக்கேசியா மற்றும் ஈராக்கிலும் சியா இசுலாம் பரவியது.

சபாவித்து வம்ச ஆட்சியாளர்கள்

  • முதலாம் இஸ்மாயில் 15011524
  • முதலாம் தமாஸ்ப் 15241576
  • இரண்டாம் இஸ்மாயில் 15761578
  • முகம்மது கொடபண்டா 15781587
  • முதலாம் அப்பாஸ் 15871629
  • சஃபி 16291642
  • இரண்டாம் சஃபி 16421666
  • முதலாம் சுலைமான் 16661694
  • சுல்தான் முதலாம் உசைன் 16941722
  • இரண்டாம் தமாஸ்ப் 17221732
  • மூன்றாம் அப்பாஸ் 17321736

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.