இந்தோ சிதியன் பேரரசு

From Wikipedia, the free encyclopedia

இந்தோ சிதியன் பேரரசு

இந்தோ-சிதியர்கள் அல்லது இந்தோ-சகர்கள் (ஆட்சி காலம்: கி மு 200 முதல் கி பி 400 முடிய) (Indo-Scythian Kingdom) என்ற சொல் நடு ஆசியாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து, இந்திய துணை கண்டத்தின் கந்தகார், பாகிஸ்தான், காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பிகார் போன்ற இந்திய துணைக் கண்டப் பகுதிகளில் குடியேறிய சிதியர்கள் எனும் சகர்களையும் குறிக்கும். இந்தோ-சிதியர்கள் கி. மு இரண்டாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து, கி பி நான்காம் நூற்றாண்டு வரை இந்தியத் துணைக்கண்டத்தில் குடியேறினார்கள்.[4]

விரைவான உண்மைகள் இந்தோ-சிதிய இராச்சியம், தலைநகரம் ...
இந்தோ-சிதிய இராச்சியம்
அண்.கி. மு. 150–கி. பி .400
வடக்கு சத்திரப்புகள் மற்றும் மேற்கு சத்திரப்புகளின் நிலப்பரப்புகளையும் உள்ளடக்கிய இந்தோ-சிதியர்களின் நிலப்பரப்பு அதன் உச்ச பட்ச விரிவாக்கத்தின் போது.
வடக்கு சத்திரப்புகள் மற்றும் மேற்கு சத்திரப்புகளின் நிலப்பரப்புகளையும் உள்ளடக்கிய இந்தோ-சிதியர்களின் நிலப்பரப்பு அதன் உச்ச பட்ச விரிவாக்கத்தின் போது.
தலைநகரம்
பேசப்படும் மொழிகள்சகா,[1]
கொயினே கிரேக்கம்,
பாளி (கரோஷ்டி எழுத்துமுறை),
சமசுகிருதம்,
பிராகிருதம் (பிராமி எழுத்துமுறை)
சமயம்
அரசாங்கம்முடியரசு
மன்னர் 
 கி. மு. 85 – கி. மு. 60
மௌயேசு
 கி. பி. 10
ஹஜத்ரியா
வரலாற்று சகாப்தம்பண்டைக் காலம்
 தொடக்கம்
அண்.கி. மு. 150
 முடிவு
கி. பி .400
பரப்பு
கி. பி. 20ஆம் ஆண்டு மதிப்பீடு.[3]2,600,000 km2 (1,000,000 sq mi)
முந்தையது
பின்னையது
கிரேக்க பாக்திரியா பேரரசு
இந்தோ கிரேக்க நாடு
மௌரியப் பேரரசு
குசானப் பேரரசு
சாசானியப் பேரரசு
இந்தோ-பார்த்தியப் பேரரசு
பரதராஜர்கள்
குப்தப் பேரரசு
மூடு

தெற்காசியாவில் சகர்களின் குலத்தில் தோண்றிய முதல் அரசன் மொகா என்பவர், கி. பி முதல் நூற்றாண்டில் காந்தகாரில்அரசை தோற்றுவித்தான். பின் படிப்படியாக மேற்கு இந்தியாவின் பகுதிகளாக இருந்த தற்கால ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை கைப்பற்றி அரசாண்டார். இந்தோ-சிதியர்கள் குலத்தில் வந்த ஒன்பது அரசர்கள் சசானிஸ்ட் பேரரசை ஆண்டனர். குப்த பேரரசின் இரண்டாம் சந்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட, மேற்கு சத்திரபதி பேரரசர் மூன்றாம் ருத்திரசிம்மன், சகர் எனும் கிழக்கு சிதியர்களின் சசானிஸ்ட் பேரரசை கி பி 395இல் வென்றார்.[5] சிதியர்கள் எனும் சகர்களின் அரசு, இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய சாதவாகனப் பேரரசர் கௌதமிபுத்திர சதகர்னியால் வெற்றி கொள்ளப்பட்டது முதல், சிதியர்களின் அரசு படிப்படியாக வீழ்ச்சி அடையத் துவங்கியது.[6][7]

பிறகு நான்காம் நூற்றாண்டில் இரண்டாம் சந்திர குப்தரால் நான்காம் நூற்றாண்டில் சகர் எனும் சிதியர்களின் அரசு முழுமையாக வெற்றிக் கொள்ளப்பட்டது.[8]

மகாபாரதம் இதிகாசத்தில் பல இடங்களில், சகர்களை அல்லது சிதியர்களை, ஹூணர்கள், யவனர்கள் போன்று பண்டைய இந்திய இனக்குழுக்களுக்கு தொடர்பில்லாத மிலேச்சர்கள் எனக் குறிப்பிடுகிறது.

இதனையும் காண்க

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.