தீபை
From Wikipedia, the free encyclopedia
தீபை (Θῆβαι, தீபை, அரபு மொழி: طيبة, தீபா) என்பது பண்டைய எகிப்து நாட்டில் நடுநிலக் கடலிலிருந்து 800 கிமீ தொலைவில் மேல் எகிப்துவில் பாயும் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் இன்றைய அல்-உக்சுர் நகரின் எல்லைக்குள் அமைந்திருந்த ஒரு பண்டைய நகரின் கிரேக்கப் பெயராகும். தீபையின் மயானம் அந்நகரின் அமைவுக்கு எதிர்ப் புறமாக நைல் ஆற்றுக்கு மேற்கே அமைந்திருந்தது.
தீபை Waset Θῆβαι | |
---|---|
![]() தீபை மண்டபத்தின் தூண்கள் | |
இருப்பிடம் | அல்-உக்சுர், லக்சர் ஆளுநனரகம், எகிப்து |
பகுதி | மேல் எகிப்து |
ஆயத்தொலைகள் | 25°43′14″N 32°36′37″E |
வகை | குடியிருப்பு |
அதிகாரபூர்வ பெயர்: பண்டைய தீபை நகரம் | |
வகை | பண்பாட்டுக் களம் |
அளவுகோல் | I, III, VI |
வரையறுப்பு | 1979 (3rd session) |
சுட்டெண் | 87 |
மண்டலம் | அரபு நாடுகள் |
பண்டைய தீபையும் அதன் மயானமும் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | i, iii, vi |
உசாத்துணை | 87 |
UNESCO region | அரபு நாடுகள் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1979 (3 ஆம் தொடர்) |
வரலாறு

தீபை நகரம் கிமு 3200 ஆம் ஆண்டளவிலிருந்தே மனிதக் குடியிருப்புக்களைக் கொண்டிருந்தது.[1] உயர்நில எகிப்தின் நான்காவது மாகாணத்தின் புகழ் மிக்க தலைநகரமாக விளங்கியது வாசித் நகரின் மற்றொரு பெயரே தீபை என்பதாகும். 11 ஆம் அரச மரபு (எகிப்தின் நடுவரசு) ஆட்சி செய்த காலம் முழுவதிலும் அதன் பின்னர் எகிப்தின் பதினெட்டாம் வம்ச (எகிப்தின் புத்தரசு]]) ஆட்சியில் வாசித் நகரமே தலைநகராக விளங்கியது. புத்தரசு காலப்பகுதியிலேயே ஃகத்சிபுசுத்து மன்னன் தீபையின் செங்கடற் துறைமுகமான இலிம், அதாவது இன்றைய காசிர் நகருக்கும் அகபா வளைகுடாவின் ஒரு முனையில் அமைந்திருந்த ஈலாம் நகருக்கும் இடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக செங்கடலில் கப்பற் தொகுதியொன்றை ஏற்படுத்தினான். இதன் மூலம் நறுமணப் பொருட்கள், கத்தூரி, மென் பட்டுக்கள், மணமான எண்ணெய்கள் மற்றும் ஈமச் சடங்குகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட செப்புத் தகடுகள் மற்றும் நூபியா தங்கம் போன்றவற்றை வணிகர்கள் கொண்டு வந்தனர். 19 ஆம் அரச மரபின் ஆட்சியில் எகிப்தின் தலைநகரம் நைல் ஆற்றின் முகத்துவாரப் பகுதிக்கு மாற்றப்பட்டது. எகிப்திய நாகரிகம் அதன் உயர் நிலையில் எவ்வாறிருந்தது என்பதை நன்கு புலப்படுத்துவனவாகவே தீபையில் காணப்படும் தொல்பொருள் எச்சங்கள் உள்ளன. கிரேக்கக் கவி ஹோமர் தம் காவியமான இலியட் இன் 9 ஆம் பகுதியில் (கிமு 8 ஆம் நூற்றாண்டு): "... எகிப்தின் தீபையில் குவியல்களாய் உள்ளனவே அரிய பல மணிகள், ஆயிரம் வாயில்களைக் கொண்ட தீபை நகரே" என்று தீபையின் செல்வச் செழிப்பை வெகுவாகப் புகழ்கிறார்.

தீபை என்பது பண்டைய எகிப்தின் கிப்திய மொழியில் "கர்னக் ஆலயத்தைக்" (குறிப்பதற்காக வழங்கப்பட்ட தாப்பே என்பதன் கிரேக்க மொழி வடிவமாகும். அமூன், மூத், குன்சு ஆகிய கடவுளர்களைக் கொண்ட தீபையின் தொன்மக் கதையில் அந்நகரம் பண்டைய எகிப்திய மொழியில் நிவுத்திமூன் அதாவது "அமூனின் நகரம்" என்றே அழைக்கப்பட்டது. இதுவே எபிரேய விவிலியத்தில் נא אמון (நோ ஆமொன்), அதாவது "ஆமொனின் நகரம்" என தீபை நகரம் அழைக்கப்படக் காரணமாயிற்று. பண்டைய எபிரேய மொழியில் נא "நோ" என்பதன் பொருள் நகரம் என்பதாகும். மேற்படி கடவுளே எகிப்திய மொழியில் ஆமொன்-ரா எனவும் வழங்கப்பட்டது.
தற்காலத்தில், நைல் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள கல்லறை ஆலயங்கள் மற்றும் கல்லறைகள் என்பனவும் தீபை நகரின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன.
1979 ஆம் ஆண்டு, பண்டைய தீபை நகரின் சிதைவுகள் உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டது. பண்டைய எகிப்தின் மிகப் பெரும் அடைவுகளில் இன்று அல்-உக்சுர் கோயில் (அரபு மொழியில்: الأقصر, அல்-உக்சுர், அதாவது "அரண்மனைகள்") எனப்படும் அரசர் பள்ளத்தாக்கு மற்றும் அல்-கர்னக் (الكرنك) எனப்படும் அரசியர் பள்ளத்தாக்கு என்பன அடங்கும்.
பண்டைய எகிப்திய நகரங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளித் தொடுப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.