Remove ads
தேர்தல் From Wikipedia, the free encyclopedia
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கு நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2023 இந்திய சட்டமன்றத் தேர்தல்களின் போது ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கையின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் மொத்தமுள்ள 114 சட்டமன்றத் தொகுதிகளில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது.[1][2]நவம்பர் 2018ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு[3], 20 டிசம்பர் 2018 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது.
| |||||||||||||||||||||||||||||||||||
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் 114 இடங்கள் (90 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளன) அதிகபட்சமாக 46 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||
|
2014ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இறுதியாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு உரிமைகளைத் திரும்ப பெற்று[4]2019ல் மாநிலத் தகுதி இழந்த[5] பின்னர் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கு 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
நவம்பர் 2014ல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவில் முப்தி முகமது சயீத் தலைமையில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்து அரசு அமைத்தது. முப்தி முகமது சயீத் முதலமைச்சரானர்.[6][7]
7 சனவரி 2016 முப்தி முகமது சயீத் காலமானார்.[8] பின் மெகபூபா முப்தி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[9]
சூன் 2018ல் முதலமைச்சர் மெகபூபா முப்தி அரசுக்கு வழங்கியிருந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டது.[10]அதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[11]நவம்பர் 2018ல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.[3]20 டிசம்பர் 2018 அன்று மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. [12] இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் 2022ம் ஆண்டில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை நிறுவினார்.
2019ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகள் இந்திய நாடாளுமன்றத்தால் நீக்கப்பட்டது. மேலும்2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி 31 அக்டோபர் 2019 முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 2020ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கையின்படி, ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் 114 சட்டமன்றத் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டது. அதில் 24 சட்டமன்றத் தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளில் உள்ளது.[13]20 மே 2022 அன்று ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கை நடைமுறைக்கு வந்தது.[14]
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 114 ஆகும். அதில் 90 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. 9 அக்டோபர் 2024 அன்று வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளையும்; பாரதிய ஜனதா கட்சி 29 தொகுதிகளையும்; இந்திய தேசிய காங்கிரசு 6 தொகுதிகளையும்; சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி 3 தொகுதிகளையும்; இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 1 தொகுதியையும்; ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி 1 தொகுதியையும்; ஆம் ஆத்மி கட்சி 1 தொகுதியையும்; சுயேச்சைகள் 7 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.[15]ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 45 தொகுதிகளுக்கு மேல், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.