மார்ச்சு 11 (March 11) கிரிகோரியன் ஆண்டின் 70 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.
- 378 – முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை) (இ. 417)
- 1811 – உர்பைன் லெவெரியே, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1877)
- 1898 – சித்பவானந்தர், இராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி (இ. 1985)
- 1912 – என். ஜி. ராமசாமி, இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1943)
- 1913 – சக்தி கிருஷ்ணசாமி, தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் (இ. 1987)
- 1922 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் 2வது பிரதமர் (இ. 1976)
- 1927 – வி. சாந்தா, இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணர் (இ. 2021)
- 1931 – ரூப்பர்ட் மர்டாக், ஆத்திரேலிய-அமெரிக்கத் தொழிலதிபர்
- 1936 – ஹெரால்டு சூர் ஹாசென், நோபல் பரிசு பெற்ற செருமானிய நச்சுயிரியலாளர்
- 1952 – டக்ளஸ் ஆடம்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 2001)
- 1985 – அஜந்த மென்டிஸ், இலங்கைத் துடுப்பாளர்
- 1863 – ஜேம்சு ஓற்றம், ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1803)
- 1955 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய உயிரியலாளர் (பி. 1881)
- 1967 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (பி. 1896)
- 1971 – பைலோ பார்ன்சுவர்த், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. 1906)
- 1979 – ஆர். அனந்த கிருஷ்ணர், ஆந்திர கருநாடக இசைக் கலைஞர் (பி. 1893)
- 1997 – திக்குறிசி சுகுமாரன், மலையாள இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் (பி. 1916)
- 2002 – ருடால்ப் ஹெல், செருமானியக் கண்டுபிடிப்பாளர் (பி. 1901)
- 2012 – த. ஆனந்தமயில், ஈழத்து எழுத்தாளர் (பி. 1947)
- 2013 – சு. சபாரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1930)
- 2013 – ஸ்ரீபாத பினாகபாணி, இந்திய கருநாடக இசைப் பாடகர், மருத்துவர் (பி. 1913)
- 2013 – வே. தில்லைநாயகம், நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. 1925)
- விடுதலை நாள் (லித்துவேனியா, சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5