சென் பீட்டர்சுபெர்கு
From Wikipedia, the free encyclopedia
சென் பீட்டர்சுபெர்கு (Saint Petersburg; உருசியம்: Санкт-Петербург, ஒ.பெ Sankt-Peterburg, பஒஅ: [ˈசாங்க்த் பித்தர்பூர்க்](
கேட்க)), முன்னர் பெத்ரோகிராது (Petrograd, Петроград) (1914–1924), பின்னர் இலெனின்கிராது (Leningrad, Ленинград) (1924–1991), என்பது உருசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது நீவா ஆற்றின் அருகே, பால்ட்டிக்கு கடலின் கரையோரப் பகுதியில், பின்லாந்து வளைகுடாவின் கிழக்கே அமைந்துள்ளது. 5.3 மில்லியன் மக்கள் (2018 தரவுகள்) வாழும் இந்நகர் ஐரோப்பாவின் நான்காவது செறிவு கூடிய நகரமாகும்.[7] பால்ட்டிக் கடலின் முக்கிய உருசியத் துறைமுகமாகவும் இது விளங்குகிறது. இது உருசியாவின் ஒரு நடுவண் அமைப்பாகும்.
சென் பீட்டர்சுபெர்கு | |
---|---|
Санкт-Петербург Saint Petersburg | |
![]() மேலிடது மூலையில் இருந்து மணிக்கூட்டுத் திசையில்: அரண்மனைப் பாலம், பீட்டர், பவுல் கோட்டை, செனெட் சதுக்கம், நேவா ஆறு, திரித்துவப் பேராலயம், பொது அதிகாரிகள் கட்டடம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 59°56′15″N 30°18′31″E | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வடமேற்கு[1] |
பொருளாதாரப் பகுதி | வடமேற்கு[2] |
அரசு | |
• நிர்வாகம் | சட்டமன்றம் |
• ஆளுநர் | அலெக்சாந்தர் பெக்லோவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,439 km2 (556 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 82-ஆவது |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2018)[4] | 53,51,935 |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [5]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-SPE |
அனுமதி இலக்கத்தகடு | 78, 98, 178, 198 |
OKTMO ஐடி | 40000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[6] |
இணையதளம் | http://gov.spb.ru |
இந்நகரம் உருசியாவின் முதலாம் பேதுரு மன்னரால் 27 மே [யூ.நா. 16 மே] 1703 இல் ஒரு கப்பற்றப்பட்ட சுவீடிய கோட்டையின் மீது நிறுவப்பட்டது. 1713 முதல் 1918 வரை உருசியாவின் சாராட்சியினதும், பின்னர் உருசியப் பேரரசினதும் தலைநகராக விளங்கியது. (1728 முதல் 1730 வரை இரண்டாண்டுகள் மாஸ்கோ தற்காலிகத் தலைநகராக இருந்தது). அக்டோபர் புரட்சியின் பின்னர், போல்செவிக் தமது அரசை மாஸ்கோவில் நிறுவினர்.[8]
இன்றைய நவீன காலத்தில், சென் பீட்டர்சுபெர்கு வடக்குத் தலைநகர் எனக் கருதப்படுகிறது. பல நடுவண் அரசு நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்குள்ளன. உருசியத் தேசிய நூலகம், உருசியக் கூட்டமைப்பின் மீயுயர் நீதிமன்றமும் அமைந்துள்ளது. சென் பீட்டர்சுபெர்கு நகரம் உருசியாவின் கலாசாரத் தலைநகராகவும் கருதப்படுகிறது.[9] உலகின் மிகப்பெரும் ஓவியக் காட்சியகங்களில் ஒன்றான ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் இங்குள்ளது.[10]
வரலாறு
ஸார் பீட்டர் பெருமகனரால் சுபானு ஆண்டு வைகாசி மாதம் 17ம் நாள் (27 மே 1703), திங்கட்கிழமையன்று சென் பீட்டர்ஸ்பேர்க் என்ற பெயரிட்டு நிறுவினார். மேலும் ருசியப் பேரரசின் தலைநகராக இருநூற்றாண்டுகளுக்கு மேலாக (1712–1728, 1732–1918) இருந்தது. 1917 ஆண்டில் நடந்த ருசியப் புரட்சிக்கு பின்னர், 1918ம் ஆண்டிலிருந்து தலைநகரை மாற்றியது ருசியப் பேரரசு.
மக்கள் தொகை
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உருசியாவின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. 2017 ஆம் ஆண்டின் ரோஸ்டாடின்படி சென் பீட்டர்ஸ்பேர்கின் மொத்த மக்கள்தொகை 5,281,579 அல்லது ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 3.6% ஆகும். இது 2010 கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 4,879,566 (3.4%) ஆகவும் மற்றும் 1989 கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 5,023,506 ஆகவும் இருந்தது. 2010 ஆம் ஆண்டு மக்கள்தொகை இன ரீதியான கணக்கெடுப்பு : ரஷ்யர்கள் 80.1%, உக்ரேனியர்கள் 1.3%, பெலாரியர்கள் 0.8%, தாடார் 0.6%, ஆர்மீனியர்கள் 0.6%, யூதர்கள் 0.5%, உஸ்பெகியர்கள் 0.4%, தாஜிக்கியர்கள் 0.3%, அஜெரியர்கள் 0.3%, ஜோர்ஜியர்கள் 0.2%, மோல்டோவியர்கள் 0.2%, ஃபின்ஸ் 0.1%, மற்றவை - 1.3%. மீதமுள்ள 13.4% இன மக்கள் குறிப்பிடப்படவில்லை.
20 ஆம் நூற்றாண்டின் போது, நகரம் வியத்தகு மக்கள் தொகை மாற்றங்களை அனுபவித்தது. 1916 இல் இருந்த 2.4 மில்லியன் மக்கள் தொகை 1917 ரஷ்ய புரட்சியாலும் ரஷ்ய உள்நாட்டு யுத்தத்தினாலும் 740,000 க்கும் குறைவாக குறைந்தது.
புவி அமைப்பு
நகரின் மொத்த பரப்பளவு, 605.8 சதுர கிலோமீட்டர்கள் (233.9 sq mi)வாக உள்ளது. ஒருங்கிணைந்த நகராக ஒன்பது நகராட்சி நகரங்கள் மற்றும் இருபத்தியொரு நகர குடியேற்றங்களை கொண்டு 1,439 சதுர கிலோமீட்டர்கள் (556 sq mi)வாக உள்ளது.
காலநிலை
சென் பீட்டர்ஸ்பேர்க்கின் காலநிலை, ஈரப்பத தட்பவெப்பத்தைக் கொண்டுள்ளது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் இங்குள்ள நேவா ஆறு, உறைபனியால் மூடியிருக்கும். நகரில் சராசரியாக 135 நாட்கள், உறைபனி இல்லாத காலமாக நீடிக்கிறது. நகரின் புறநகர் பகுதிகளைவிட சற்று வெப்பமான காலநிலையை கொண்டிருக்கிறது. வானிலையானது ஆண்டு முழுவதும் மாறி மாறி வரும்[11][12].
தட்பவெப்ப நிலைத் தகவல், சென் பீட்டர்ஸ்பேர்க் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 8.7 (47.7) |
10.2 (50.4) |
14.9 (58.8) |
25.3 (77.5) |
30.9 (87.6) |
34.6 (94.3) |
35.3 (95.5) |
37.1 (98.8) |
30.4 (86.7) |
21.0 (69.8) |
12.3 (54.1) |
10.9 (51.6) |
37.1 (98.8) |
உயர் சராசரி °C (°F) | -3.0 (26.6) |
-3.0 (26.6) |
2.0 (35.6) |
9.3 (48.7) |
16.0 (60.8) |
20.0 (68) |
23.0 (73.4) |
20.8 (69.4) |
15.0 (59) |
8.6 (47.5) |
2.0 (35.6) |
-1.5 (29.3) |
9.1 (48.4) |
தினசரி சராசரி °C (°F) | -5.5 (22.1) |
-5.8 (21.6) |
-1.3 (29.7) |
5.1 (41.2) |
11.3 (52.3) |
15.7 (60.3) |
18.8 (65.8) |
16.9 (62.4) |
11.6 (52.9) |
6.2 (43.2) |
0.1 (32.2) |
-3.7 (25.3) |
5.8 (42.4) |
தாழ் சராசரி °C (°F) | -8.0 (17.6) |
-8.5 (16.7) |
-4.2 (24.4) |
1.5 (34.7) |
7.0 (44.6) |
11.7 (53.1) |
15.0 (59) |
13.4 (56.1) |
8.8 (47.8) |
4.0 (39.2) |
-1.8 (28.8) |
-6.1 (21) |
2.7 (36.9) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -35.9 (-32.6) |
-35.2 (-31.4) |
-29.9 (-21.8) |
-21.8 (-7.2) |
-6.6 (20.1) |
0.1 (32.2) |
4.9 (40.8) |
1.3 (34.3) |
-3.1 (26.4) |
-12.9 (8.8) |
-22.2 (-8) |
-34.4 (-29.9) |
−35.9 (−32.6) |
பொழிவு mm (inches) | 44 (1.73) |
33 (1.3) |
37 (1.46) |
31 (1.22) |
46 (1.81) |
71 (2.8) |
79 (3.11) |
83 (3.27) |
64 (2.52) |
68 (2.68) |
55 (2.17) |
51 (2.01) |
661 (26.02) |
% ஈரப்பதம் | 86 | 84 | 79 | 69 | 65 | 69 | 71 | 76 | 80 | 83 | 86 | 87 | 78 |
சராசரி மழை நாட்கள் | 9 | 7 | 10 | 13 | 16 | 18 | 17 | 17 | 20 | 20 | 16 | 10 | 173 |
சராசரி பனிபொழி நாட்கள் | 25 | 23 | 16 | 8 | 1 | 0.1 | 0 | 0 | 0.1 | 5 | 16 | 23 | 117 |
சூரியஒளி நேரம் | 21.7 | 53.7 | 124.0 | 180.0 | 260.4 | 276.0 | 266.6 | 213.9 | 129.0 | 71.3 | 24.0 | 12.4 | 1,633.0 |
Source #1: Pogoda.ru.net[13] | |||||||||||||
Source #2: HKO (sunshine hours)[14] |
போக்குவரத்து
சென் பீட்டர்ஸ்பேர்க்கானது, போக்குவரத்தின் முனையமாக உள்ளது. ரஷ்ய தொடர்வண்டி நிலையமானது, 1837 முதன் முதலாக கட்டப்பட்டது. அதன் பின்னர் நகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பானது அசுர வேகத்துடன் வளர்ச்சி பெற்றது. டிராம், மெட்ரோ, உள்ளூர் மேம்பாட்டுச் சாலைகள் மற்றும் தொடருந்து சேவைகள் என பல போக்குவரத்து சாதனங்கள் தன்னகத்தே அடக்கியுள்ளது. நகரானது, தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய மற்றும் சர்வதேச தொடருந்துத் தடங்கள் மூலம் ரஷ்யா முழுவதும் பரந்த உலகுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தொடருந்து
1851ம் ஆண்டு மாஸ்கோவையும் சென் பீட்டர்ஸ்பேர்க்கையும் இணைக்கும் 651 கிலோமீட்டர்கள் (405 mi) நீளம் கொண்ட தெடருந்து தடத்தின் மூலம் பயணியர், மூன்றரை மணியிலிருந்து ஒன்பது மணி வரைக்குள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்றுவிடலாம்[15].
வானூர்தி
புல்கோவா பன்னாட்டு விமான நிலையமே பிரதான நிலையமாக அமைந்துள்ளது[16]. இதற்கு அடுத்த நிலையாக மூன்று விமான நிலையஙகள் வணிகத்திற்காக பயன்படுத்துகின்றனர். நகரிலிருந்து விமான நிலையத்திற்கு, 24 மணிநேரமும் பேருந்து சேவையுள்ளது.

நகரமைப்பு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மூன்று வானளாவியங்கள் உள்ளன: லீடர் டவர் (140 மீ), அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி (124 மீ) மற்றும் அட்லாண்டிக் சிட்டி (105 மீ). இம்மூன்று இடங்களும் வரலாற்று மையங்களில் இருந்து தொலைவில் உள்ளன.310 மீட்டர் (1,020 அடி) உயரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் டிவி கோபரம் நகரத்தில் மிக உயரமான கட்டடம் ஆகும். மாஸ்கோவிலுள்ளது போலல்லாமல், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பரோக் மற்றும் நியோகிளாசிக்கல் கட்டிடங்களை உள்ளடக்கிய நகர மையத்தின் வரலாற்று கட்டமைப்பு, பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது; எனினும் லெனின்கிராட் முற்றுகை மற்றும் போல்ஷிவிக்குகள் அதிகாரம் கைப்பற்றியபின்பும் பல கட்டிடங்கள் இடிந்துபோனது. பீட்டர் மற்றும் பால் கோட்டை, பீட்டர் மற்றும் பால் தேவாலயம் ஆகியவற்றுடன் இணைந்து நெவா ஆற்றின் வலது கரையிலுள்ள ஜயச்சி தீவில் அமைந்துள்ளது. 1913 இல் திறக்கப்பட்ட போது ஐரோப்பாவின் மிகப்பெரிய மசூதியாக இருந்த செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மசூதி அருகிலுள்ள வலதுபுற கரையில் அமைந்துள்ளது. டிரினிட்டி கதீட்ரல், மரின்ச்கி அரண்மனை, ஹோட்டல் அஸ்டோரியா, பிரபலமான மாரின்ஸ்கி நாடக அரங்கம், நியூ ஹாலந்து தீவு, செயிண்ட் இசாக்ஸ் கதீட்ரல் (நகரத்தின் மிகப்பெரியது) மற்றும் செனட் சதுக்கத்தில் அடங்கும் பல குறிப்பிடத்தக்க அடையாளங்கள் கடற்படை நிர்வாகக்குழு கட்டிடத்தின் மேற்கே மற்றும் தெற்கே அமைந்துள்ளது.
ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு
அனைத்து முக்கிய ரஷ்ய செய்தித்தாள்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செயலில் உள்ளன. இந்நகரம் தொலைத்தொடர்பு அமைப்பில் அதித வளர்ச்சி பெற்றுள்ளது . நகரத்தில் பெறக்கூடிய தொலைக்காட்சி நெட்வொர்க்குகள்:
- சேனல் ஒன்
- ரஷ்யா-1
- ரஷ்யா-2
- NTV,
- டிவி செந்தர்
- சேனல் 5
- ரஷ்யா-கே
- ரஷ்யா-24
- ரஷ்யாவின் பொது தொலைக்காட்சி
- ரென் டிவி
- எஸ்டிஎஸ்
- டிஎன்டி
- டிவி-3
- பெரட்சே
- ஈரோ நியூஸிற்கு
- 2x2
- டிஸ்னி சேனல்
மற்றும் பல.
கல்வி
2006/2007 வரை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 1024 மழலையர் பள்ளி, 716 பொதுப் பள்ளிகள் மற்றும் 80 தொழிற்கல்வி பள்ளிகள் இருந்தன. [பொது உயர் கல்வி நிறுவனங்களில் மிகப் பெரியது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி, ஏறத்தாழ 32,000 இளங்கலை மாணவர்களை சேர்ப்பது;மிகப்பெரிய அரசு சாராத உயர் கல்வி நிறுவனம் சர்வதேச பொருளாதார உறவுகள், பொருளாதாரம் மற்றும் சட்ட நிறுவனம் ஆகும். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம், ஹெர்ஜன் பல்கலைக்கழகம், பொருளியல் மற்றும் நிதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகம் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இராணுவ பொறியியல்-தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை பிற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் ஆகும்.
பிரபலமான மக்கள்
செயிண்ட் பீட்டர்சுபர்கில் பிறந்த அல்லது வாழ்ந்த பிரபலங்கள்:
- உருசியாவின் ஆறாம் இவான் (1740–1764), உருசியப் பேரரசர், 1740–1741.[17]
- உருசியாவின் முதலாம் நிக்கலாசு (1796–1855), உருசியப் பேரரசர், 1825–1855.[18]
- உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் (1845–1894), உருசியப் பேரரசர், 1881–1894.[19]
- கியார்கு கேன்ட்டர் (1845–1918), செருமானியக் கணிதவியலர்
- விளாதிமிர் கோப்பென் (1846–1940), செருமானிய அறிவியலாளர்
- விளாதிமிர் வெர்னாத்ஸ்கி (1863–1945), புவி வேதியியலாளர்
- உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (1868–1918), உருசியப் பேரரசர், 1894–1917.[20]
- அலெக்சாண்டிரா கொலோண்டை (1872–1952), புரட்சியாளர்
- அலெக்சாந்தர் பிரீடுமேன் (1888–1925), கணிதவியலாளர், இயற்பியலாளர்
- விளாதிமிர் நபோக்கோவ் (1899–1977), எழுத்தாளர்
- அய்ன் ரேண்ட் (1905–1982), புதின எழுத்தாளர்
- ஜோசப் பிராட்ஸ்கி (1940–1996), இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1987) பெற்றவர்
- விளாதிமிர் பூட்டின் (பிறப்பு: 1952), உருசிய அரசுத்தலைவர்
- கிரிகோரி பெரல்மான் (பிறப்பு 1966), கணிதவியலர்
- லியோனார்டு ஆய்லர் (1707–1783), சுவிசு கணிதவியலர், இயற்பியலாளர்[21]
- மிகைல் இலமனோசொவ் (1711–1765), அறிவியலாளர்
- அலெக்சாந்தர் பூஷ்கின் (1799–1837), உருசியக் கவிஞர்[22]
- நிக்கோலே சினின் (1812–1880), வேதியியலாளர்
- பியோதர் தஸ்தயெவ்ஸ்கி (1821–1881), எழுத்தாளர்[23]
- திமீத்ரி மெண்டெலீவ் (1834–1907), வேதியியலாளார்
- பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி (1840–1893), இசையமைப்பாளர்[24]
- இவான் பாவ்லோவ் (1849–1936), உடலியங்கியலாளர்
- கிரிகோரி ரஸ்புடின் (1869–1916)
- விளாதிமிர் லெனின் (1870–1924), புரட்சியாளர்[25]
- அலெக்சாண்டர் கெரென்சுகி (1881–1970), அரசியல்வாதி
- நிகோலாய் வவிலோவ் (1887–1943), உயிரியலாளர்
- அன்னா அக்மதோவா (1889–1966)
- விளாதிமிர் மயாகோவ்ஸ்கி (1893–1930), கவிஞர்
- ஜார்ஜ் காமாவ் (1904–1968), இயற்பியலாளர்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.