உருசிய அரசியல்வாதி, உருசியாவின் இரண்டாவது மற்றும் நான்காவது அதிபர் From Wikipedia, the free encyclopedia
விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின் (Vladimir Vladimirovich Putin, உருசியம்: Влади́мир Влади́мирович Пу́тин, ⓘ, பிறப்பு: அக்டோபர் 7, 1952) உருசியக் கூட்டமைப்பின் தற்போதையை அரசுத்தலைவர் ஆவார். டிசம்பர் 31, 1999 இல் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரசுத்தலைவரானார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் மே 7, 2008 இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4 இல் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3]. இவரது பதவிக்காலம் 2012 மே 7 இல் தொடங்கியது. பிறகு 2018ஆம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சியைத் தொடர்ந்து வருகிறார்.
விளாதிமிர் பூட்டின் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Владимир Путин | |||||||||||||||||||||||||||||
2024 இல் பூட்டின் | |||||||||||||||||||||||||||||
உருசியாவின் அரசுத்தலைவர் | |||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||
பதவியில் 7 மே 2012 | |||||||||||||||||||||||||||||
பிரதமர் | விக்டர் சுப்கோவ் (பொறுப்பு) திமீத்ரி மெத்வேதெவ் | ||||||||||||||||||||||||||||
முன்னையவர் | திமீத்ரி மெத்வேதெவ் | ||||||||||||||||||||||||||||
பதவியில் 7 மே 2000 – 7 மே 2008 பொறுப்பு: 31 திசம்பர் 1999 – 7 மே 2000 | |||||||||||||||||||||||||||||
பிரதமர் | மிக்கைல் கசியானொவ் விக்டர் கிறித்தியென்கோ (பொறுப்பு) மிக்கைல் பிராத்கோவ் விக்டர் சுப்கோவ் | ||||||||||||||||||||||||||||
முன்னையவர் | போரிஸ் யெல்ட்சின் | ||||||||||||||||||||||||||||
பின்னவர் | திமீத்ரி மெத்வேதெவ் | ||||||||||||||||||||||||||||
உருசியாவின் தலைமை அமைச்சர் | |||||||||||||||||||||||||||||
பதவியில் 8 மே 2008 – 7 மே 2012 | |||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | திமீத்ரி மெத்வேதெவ் | ||||||||||||||||||||||||||||
முன்னையவர் | விக்டர் சுப்கோவ் | ||||||||||||||||||||||||||||
பின்னவர் | திமீத்ரி மெத்வேதெவ் | ||||||||||||||||||||||||||||
பதவியில் 16 ஆகத்து 1999 – 7 மே 2000 பொறுப்பு: 9 ஆகத்து 1999 – 16 ஆகத்து 1999 | |||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | போரிஸ் யெல்ட்சின் | ||||||||||||||||||||||||||||
முன்னையவர் | டெர்கேய் இசுடெப்பாசின் | ||||||||||||||||||||||||||||
பின்னவர் | மிக்கைல் கசியானொவ் | ||||||||||||||||||||||||||||
உருசியாவின் முதல் துணைத் தலைமை அமைச்சர் | |||||||||||||||||||||||||||||
பதவியில் 9 ஆகத்து 1999 – 16 ஆகத்து 1999 | |||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | போரிஸ் யெல்ட்சின் | ||||||||||||||||||||||||||||
முன்னையவர் | விக்டர் கிறித்தியென்கோ | ||||||||||||||||||||||||||||
பின்னவர் | மிக்கைல் கசியானொவ் | ||||||||||||||||||||||||||||
பாதுகாப்புப் பேரவைச் செயலாளர் | |||||||||||||||||||||||||||||
பதவியில் 9 மார்ச் 1999 – 9 ஆகத்து 1999 | |||||||||||||||||||||||||||||
முன்னையவர் | நிக்கலாய் பர்தியூசா | ||||||||||||||||||||||||||||
பின்னவர் | செர்கேய் இவனோவ் | ||||||||||||||||||||||||||||
கூட்டமைப்புப் பாதுகாப்பு சேவையின் பணிப்பாளர் | |||||||||||||||||||||||||||||
பதவியில் 25 சூலை 1998 – 29 மார்ச் 1999 | |||||||||||||||||||||||||||||
முன்னையவர் | நிக்கலாய் கவலியோவ் | ||||||||||||||||||||||||||||
பின்னவர் | நிக்கலாய் பத்ரூசெவ் | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||
பிறப்பு | விளாதிமிர் விளாதிமீரொவிச் பூட்டின் 7 அக்டோபர் 1952 லெனின்கிராது, உருசியா, சோவியத் ஒன்றியம் | ||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | மக்கள் முன்னணி (2011 தொடக்கம்) சுயேச்சை (1991–95; 2001–08; 2012 தொடக்கம்) | ||||||||||||||||||||||||||||
பிற அரசியல் தொடர்புகள் | பொதுவுடைமைக் கட்சி (1975–91) நமது வீடு – உருசியா (1995–99) ஒற்றுமை (1999–2001) ஐக்கிய உருசியா[1] (2008–12) | ||||||||||||||||||||||||||||
துணைவர்(கள்) | லியுத்மீலா பூட்டினா (1983 - 2014; மணமுறிவு) | ||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் |
| ||||||||||||||||||||||||||||
வாழிடம்(s) | நோவ-அகரியோவா, மாஸ்கோ, உருசியா | ||||||||||||||||||||||||||||
கல்வி | புனித பீட்டர்சுபர்கு அரசுப் பல்கலைக்கழகம் (சட்டம்) புனித பீட்டர்சுபர்கு சுரங்கவியல் கல்விக்கழகம் (முனைவர்) | ||||||||||||||||||||||||||||
விருதுகள் | உருசிய மேதகைமை விருது | ||||||||||||||||||||||||||||
கையெழுத்து | |||||||||||||||||||||||||||||
இணையத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் | ||||||||||||||||||||||||||||
Military service | |||||||||||||||||||||||||||||
பற்றிணைப்பு | சோவியத் ஒன்றியம் | ||||||||||||||||||||||||||||
கிளை/சேவை | கேஜிபி | ||||||||||||||||||||||||||||
சேவை ஆண்டுகள் | 1975–1991 | ||||||||||||||||||||||||||||
தரம் | கேஜிபி கேணல்[2] உருசியக் கூட்டமைப்பின் அரசு ஆலோசகர் தரம் 1 | ||||||||||||||||||||||||||||
உருசியா சோவியத் ஒன்றியமாக இருந்த போது அதன் உளவு அமைப்பான கேஜிபி-இல் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதறியதால், கொர்பசோவ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற போரிஸ் எல்ட்சினுடன் விளாதிமிர் பூட்டின் உறவு சரியாக அமையவில்லை. எனவே பணியிலிருந்து விலகி தனது உதவியாளரான மெட்வடேவ் உடன் இணைந்து புதிதாகக் கட்சி துவங்கினர். சையூச்னய ரஷ்யா என்று கட்சிக்கு பெயரிட்டார். ஆம் ஆண்டு இவரது கட்சி ரஷ்யாவில் ஆட்சியை பிடித்தது. மே 7, 2000 ஆம் ஆண்டிலிருந்து மே 7, 2008 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்தார். அதற்குமேல் அந்த பதவியை வசிக்க ரஷ்ய நாடாளும் மன்றமான தூமா அரசியல்சாசனப்படி வாய்ப்பில்லை. எனவே 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மெட்வடேவிற்கு அதிபர் பதவியைக் கொடுத்துவிட்டு பிரதமர் பதவியைப் பிடித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த விளாதிமிர் புடின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 64 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாம் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மே 1990 ல், புட்டின் சர்வதேச விவகாரங்கள் பற்றிய மேயர் சொப்சாக்கின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 28 ஜூன் 1991 இல், அவர் சர்வதேச உறவுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் பொறுப்புக்கான, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் அலுவலக வெளியுறவு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 1994 முதல் 1997 வரை, புடின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மற்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டார். மார்ச் 1994 இல், அவர் நகரம் நிர்வாகத்தின் முதல் துணை தலைவர் ஆனார்.1995 ஆம் ஆண்டு முதல் ஜூன் 1997 வரை அவர் JSC செய்தித்தாள் ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்தார்.
1996 இல், அனடோலி சொப்சாக்கின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் தேர்தலில் விளாதிமிர் யகொநோவிடம் தோற்றார். புட்டின் மாஸ்கோவில் ஜூன் 1996 இல் பவெல்போர்டின் தலைமையில் ஜனாதிபதி சொத்து மேலாண்மை துறை துணை முதல்வர் ஆனார். அவர் மார்ச் 1997 வரை இந்த நிலை இருந்தார். 25 ஜூலை 1998 அன்று, யெல்ட்சின் FSB தலைவராக விளாதிமிர் புட்டின்-ஐ (கேஜிபி வாரிசு முகவர் ஒன்று),நியமித்தார். அவர் 1 அக்டோபர் 1998 29 மார்ச் 1999 இல் அதன் ரஷியன் கூட்டமைப்பு பாதுகாப்பு சபையில் அதன் செயலாளராக நிரந்தர உறுப்பினர் ஆனார்.
1999 ஆகஸ்ட் 9, செர்ஜி ஸ்டேபசின் தலைமையிலான முந்தைய அரசு நீக்கப்பட்ட பின் என ரஷியன் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மூன்று பிரதம பிரதமர்களின் ஒருவராக ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் மூலம் நியமிக்கப்பட்டார்.
விளாதிமிர் புட்டின் 2000 மே 7ம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரின் பிரதம மந்திரியாக நிதி அமைச்சர் மிகைல் கசிநோவ் நியமிக்கப்பட்டார். மே 2000 ல் அவர் கூட்டாட்சி நிர்வாகத்தினை எளிதாக்கும் பொருட்டு தனது பிரதிநிதிகளின் மேற்பார்வையில் 7 கூட்டாட்சி மாவட்டங்களில் 89 கூட்டாட்சி பகுதியாகப் பிரித்து ஒரு ஆணையை வெளியிட்டார்.
14 மார்ச் 2004 அன்று, புட்டின் தேர்தலில் 71% வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் புட்டினால் ரஷ்யாவின் பொது சபை உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு, தேசிய முன்னுரிமை திட்டங்கள் மூலம் ரஷ்யாவின் சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, விவசாயம் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
புட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் மூன்றாம் அதிபராக பணியாற்ற தடை செய்யப்பட்டார்.முதன்மை துணை பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் அவரது வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 மே 8 ல்,மெட்வெடேவிடம் ஜனாதிபதி பொறுப்பை ஒப்படைத்தார் பின்னர், புட்டின் தனது அரசியல் ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ள ரஷ்ய பிரதமராக நியமிக்கப்பட்டார்.
2012 மார்ச் 4, புட்டின் முதல் சுற்றில் 63.6% வாக்குகள் உடன் 2012 ரஷியன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்.
2014 ரஷ்ய ஆதரவு உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுக்கோவிச் பதவி அகற்றலைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் கிரிமியாவை ஆக்கிரமித்தன. பின்னர் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்களிப்பில் 96% க்கும் கூடுதலான ஆதரவைப் பெற கிரிமியா ரஷ்யா உடன் இணைக்கப்பட்டது. எனினும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை உக்ரைன் மற்றும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகு சார்பு நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 76 % வாக்குகளைப் பெற்று புட்டின் நான்காவது முறையாக ரஷ்யாவின் ஜனாதிபதியானார். 7 மே 2018 அன்று பதவியேற்ற ஜனாதிபதி புட்டின் திமித்ரி மெத்வதேவ் புதிய அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.