சக்தி கிருஷ்ணசாமி

From Wikipedia, the free encyclopedia

சக்தி கிருஷ்ணசாமி

த. க. கிருஷ்ணசாமி என்று அறியப்படும் தஞ்சாவூர் கலியபெருமாள் கிருஷ்ணசாமி (மார்ச் 11, 1913 - நவம்பர் 8, 1987) தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் கலியபெருமாள்–வேதவள்ளி தம்பதியருக்கு மகனாக மார்ச் 11, 1913-ல் தஞ்சாவூரில் பிறந்தார். 1950களில் தொடங்கி 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழ்த் திரையுலகின் சிறந்த திரைக்கதையாசிரியர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார்.[1][2]

விரைவான உண்மைகள் சக்தி டி. கே. கிருஷ்ணசாமி, பிறப்பு ...
சக்தி டி. கே. கிருஷ்ணசாமி
Thumb
பிறப்புதஞ்சாவூர். கலியபெருமாள். கிருஷ்ணசாமி
(1913-03-11)11 மார்ச்சு 1913
தஞ்சாவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு8 நவம்பர் 1987(1987-11-08) (அகவை 74)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைக்கதை, உரையாடல் ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1950s–1970s
பெற்றோர்தந்தை : கலியபெருமாள்
தாய் : வேதவள்ளி
மூடு

வாழ்க்கைக் குறிப்பு

கிருஷ்ணசாமி தனது எழுத்துப் பணியை நாடக ஆசிரியராகத் தொடங்கினார். சக்தி நாடக சபா என்ற நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். இதனால் “சக்தி” கிருஷ்ணசாமி என்று அழைக்கப்பட்டார். அதில் நடிகர்களாகப் பணிபுரிந்த சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, எம். என். நம்பியார் போன்ற நடிகர்கள் பிறகாலத்தில் திரைபடங்களிலும் வெற்றி பெற்றனர்.[1] 1957ல் கிருஷ்ணசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாடகத்தை எழுதினார். சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அதனைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. ம. பொ. சிவஞானத்தின் ஆய்வின் அடிப்படையில் கிருஷ்ணசாமியே அதற்கும் கதை வசனம் எழுதினார். அவரது அனல் பறக்கும் வசனங்கள் அப்படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தன.[3] படத்தின் கதை-வசனம் தனியே புத்தகமாகவும், ஒலி நாடாவாகவும் விற்பனையாகுமளவுக்கு மக்களிடையே வரவேற்பைப்பெற்றது.[4][5][6][7] அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கிருஷ்ணசாமி. இதைத் தவிர பலத் திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

திரைப்பட வசனங்கள்

குறிப்பிடத்தக்க படங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.