டக்ளஸ் ஆடம்ஸ்
ஆங்கில எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர் From Wikipedia, the free encyclopedia
டக்ளஸ் ஆடம்ஸ் (Douglas Adams, மார்ச் 11 1952 – மே 11 2001) ஒரு பிரிட்டானிய ஆங்கில எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர். அறிபுனை புதின வரிசையான தி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் டூ தி காலக்சி (The Hitchhiker's Guide to the Galaxy) இவரது குறிப்பிடத்தக்க படைப்பாகும். அறிபுனை, அங்கதம், நகைச்சுவை ஆகிய பாணிகளில் புத்தகங்களை எழுதியுள்ளார்.
டக்ளஸ் ஆடம்ஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | டக்ளஸ் ஆடம்ஸ் 11 மார்ச்சு 1952 கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து |
இறப்பு | 11 மே 2001 49) சான்டா பார்பரா, கலிபோர்னியா, அமெரிக்கா | (அகவை
அடக்கத்தலம் | ஹைகேட் இடுகாடு, லண்டன், இங்கிலாந்து |
தொழில் | எழுத்தாளர் |
கல்வி நிலையம் | St John's College, Cambridge |
வகை | அறிவியல் புனைவு, நகைச்சுவை, அங்கதம் |
இணையதளம் | |
http://douglasadams.com/ |
1974ல் தன் முதல் படைப்பை வெளியிட்ட ஆடம்ஸ் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் மாண்ட்டி பைத்தான் நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். 1977ல் அவரது தி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் டூ தி காலக்சி பிபிசி வானொலி சேவையில் ஒரு அறிபுனை நகைச்சுவை நிகழ்ச்சியாக அறிமுகமானது. அதன் பெரும் வெற்றிக்குப்பின்னர். புத்தக வடிவிலும் வெளியானது. மொத்தம் ஐந்து புத்தகங்களைக் கொண்ட இந்த வரிசை ஆடம்சுக்கு உலகப்புகழ் பெற்றுத்தந்தது. இதுவரை உலகெங்கும் ஒன்றரை கோடி படிகள் விற்பனையாகியுள்ள இந்த வரிசையின் அடிப்படையில் தொலைக்காட்சித் தொடர்கள், நாடகங்கள், நிகழ்பட ஆட்டங்கள், படக்கதைகள் மற்றும் ஒரு முழுநீளத் திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன. டிர்க் ஜெண்ட்லீஸ் ஹோலிஸ்டிக் டிடெக்டிவ் ஏஜென்சி மற்றும் தி லாங் டார் டீ டைம் ஆஃப் சோல் இவரது பிற குறிப்பிடத்தக்க படைப்புகள். ஆடம்ஸ் ஒரு இறை மறுப்பாளர். ரிச்சர்ட் டாக்கின்ஸ் தனது தி காட் டெலூஷன் புத்தகத்தை ஆடம்சுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
11 மார்ச், 2013 அன்று டக்ளஸ் ஆடம்ஸின் 61-வது பிறந்ததினத்தில் அவர் நினைவாக கூகுள் டூடுல் வெளியிட்டுக் கொண்டாடியது.[1]
வெளி இணைப்புகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.