சாவகச்சேரி

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia

சாவகச்சேரி

சாவகச்சேரி[1] இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள்
சாவகச்சேரி
Thumb
சாவகச்சேரி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.659547°N 80.161047°E / 9.659547; 80.161047
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மூடு

உள்நாட்டுப் போரில் சாவகச்சேரி

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது சாவகச்சேரி நகரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பல உக்கிர சண்டைகள் நடைபெற்றன. 1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது சாவகச்சேரியும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது புலிகள் சாவகச்சேரியைக் கைப்பற்றிய போதும் பின்னர் பின்வாங்கிச் சென்றனர்.

போக்குவரத்து

இலங்கை தொடருந்து வலையமைப்பில் நாவற்குழி, மீசாலை தொடருந்து நிலையங்களுக்கிடையில் சாவகச்சேரி அமைந்துள்ளது. எனினும் தொடருந்து போக்குவரத்து போரின் காரணமாக இடைநிறுத்தப்பட்டு 2014ம் ஆண்டிலிருந்து மீண்டும் இடம்பெறுகிறது,

கோயில்கள்

  • நுணாவில் கிழக்கு ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம்
  • கல்வயல் பெருங்குளம் வீரகத்தி விநாயகர் கோயில்
  • வாரிவனேஸ்வரர் ஆலயம் (சாவகச்சேரி சிவன் கோயில்)[2]
  • மீசாலை சோலை அம்மன் கோயில்
  • சாவகச்சேரி வாரிவனம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் கோயில்
  • செருக்கல்பதி சித்தி விநாயகர் ஆலயம்
  • சாவகச்சேரி பெரியமாவடி கந்தசுவாமி கோவில்

பாடசாலைகள்

புகழ்பெற்றவர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.