கமல்ஹாசன் (Kamal Haasan,[4] பிறப்பு:7 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.[5][6][7]

விரைவான உண்மைகள் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் ...
கமல்ஹாசன்
Thumb
மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 பிப்ரவரி 2018
முன்னையவர்புதியதாக உருவாக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 நவம்பர் 1954 (1954-11-07) (அகவை 70)[1][2]
பரமக்குடி, இராமநாதபுரம், மதராசு மாகாணம், இந்தியா
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிமக்கள் நீதி மய்யம் (2018–தற்போது வரை)
துணைவர்(கள்)
வாணி கணபதி (தி. 19781985)

சரிகா (தி. 19882004)
துணைகௌதமி (2004–2016)[3]
பிள்ளைகள்
பெற்றோர்
  • ஸ்ரீனிவாசன்
  • இராஜலட்சுமி
உறவினர்
  • சாருஹாசன் (சகோதரன்)
  • சந்திரஹாசன் (சகோதரன்)
  • நளினி (சகோதரி)
வாழிடம்சென்னை
வேலை
  • நடிகர்
  • திரைப்பட தயாரிப்பாளர்
  • திரைப்பட இயக்குநர்
  • திரைக்கதை
  • பின்னணிப் பாடகர்
  • பாடலாசிரியர்
  • தொலைக்காட்சி தொகுப்பாளர்
  • நடனமாடுபவர்
  • அரசியல்வாதி
விருதுகள்
மூடு

கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.[8] நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.[9] இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூசண், பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[10] அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.[11] 2019 இல் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.

இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக ஜனாதிபதி விருது பெற்றார். இவர் அடிக்கடி வாரணம் விஜய் எனும் இயக்குநரைச் சந்திப்பார். அவர் கமல்ஹாசனின் நடிப்பில் சில திருத்தங்களைச் செய்வார். குழந்தை நட்சத்திரமாக 6 திரைபடங்களில் நடித்துள்ளார். துணை நடண ஆசிரியராக தங்கப்பன் அவர்களிடம் சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1973 ஆம் ஆண்டில் கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் இவர் நடித்த முதல் வாலிப வயது திரைப்படம். கன்னியாகுமரி எனும் மலையாள படமே முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படமாகும், இத்திரைப்படதிற்காக முதல் பிலிம்பேர் விருது பெற்றார். தனது 25வது படமான அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கான முதல் பிலிம்பேர் விருது வென்றார்.

1983 ஆம் ஆண்டில் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது கிடைத்தது. 1987 இல் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்திலும், 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 1996 திரைப்படத்திலும் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக இவருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது இந்திய தேசிய விருது கிடைத்தது. இந்த இரு படங்களிலும் இவரின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. 1992 ஆண்டு சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை தேவர் மகன் படம் பெற்றது, தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். இதுவரை 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்திருந்தார்.

1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது. 1990 இல் இந்திய அரசு பத்மசிறீ விருதும், 2014 இல் பத்ம பூசண் விருதும் வழங்கியது. 2016 இல் செவாலியே விருது பெற்றார்.[12]

கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

கமல்ஹாசன் இராமநாதபுரம், பரமக்குடியில் சிறீவைணவ ஐயங்கார் தமிழ்ப் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.[13] தந்தை டி. சீனிவாசன் ஒரு வழக்கறிஞர். தாயார் ராஜலட்சுமி.[14] கமல் குடும்பத்தில் இளையவர். இவரது தமையன்மார்கள் சாருஹாசன் (பி: 1930), சந்திரஹாசன் (பி: 1936) இருவரும் வழக்கறிஞர்கள். சாருகாசன் 1980களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி (பி: 1946) ஒரு பரதநாட்டியக் கலைஞர். பரமக்குடியில் ஆரம்பக் கல்வி கற்றார். சகோதரர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு இவர்கள் சென்னைக்கு குடும்பத்துடன் குடியேறினர்.[14] கமல்ஹாசன் சென்னை சாந்தோமில் கல்வி கற்றார்.[14] தந்தையின் விருப்பப்படி, கமல்ஹாசன் திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டார்.[14] தாயாரின் மருத்துவர் ஒருவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரிடம் சென்ற போது கமலையும் தன்னுடன் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினார்.[15] ஏ. வி. மெய்யப்பனின் மகன் எம். சரவணனின் சிபாரிசில் ஏவிஎம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.[14]

அரசியல் பிரவேசம்

கமல், தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார். அதன்படி, பெப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். அதே கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளிட்டு அதனை ஏற்றி வைத்தார். அந்தக் கொடியில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தது. கொடியின் நடுவில் கருப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும்.[16] 13 டிசம்பர் 2020 அன்று, 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான மநீமயின் தேர்தல் பிரச்சாரத்தை கமல் தொடங்கினார், 142 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார் மற்றும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார்.மநீம தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை, கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் இவர் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

திரைப்படக் குறிப்பு

இவர் 2019 ஆம் ஆண்டுவரை 220 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  • 1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
  • 1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
  • 1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
  • 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
  • 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
  • 1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்

நடித்த திரைப்படங்கள்

Films that have not yet been released இன்னும் வெளியாகாத திரைப்படங்கள்
மேலதிகத் தகவல்கள் திரைப்படம், ஆண்டு ...
திரைப்படம் ஆண்டு ஏற்ற வேடம் மொழி இயக்குநர் குறிப்புகள் சான்று
களத்தூர் கண்ணம்மா 1960 செல்வம் தமிழ் ஏ. பீம்சிங் குழந்தை நட்சத்திரம் [17]
பார்த்தால் பசி தீரும் 1962 பாபு, குமார் தமிழ் ஏ. பீம்சிங் குழந்தை நட்சத்திரம் [18]
பாத காணிக்கை 1962 ரவி தமிழ் கே. சங்கர் குழந்தை நட்சத்திரம் [19]
கண்ணும் கரளும் 1962மலையாளம்கே. எஸ். சேதுமாதவன்குழந்தை நட்சத்திரம் [20]
வானம்பாடி 1963 தமிழ் ஜி. ஆர். நாதன் குழந்தை நட்சத்திரம் [21]
ஆனந்த ஜோதி 1963தமிழ்வி. என். ரெட்டிகுழந்தை நட்சத்திரம் [22]
மாணவன் 1970தமிழ்எம். ஏ. திருமுகம்குறிப்பிடப்படாத வேடம் [23]
அன்னை வேளாங்கண்ணி 1971 இயேசு தமிழ் தங்கப்பன் குறிப்பிடப்படாத வேடம் [24]
குறத்தி மகன் 1972தமிழ்கே. எஸ். கோபாலகிருஷ்ணன் [25]
அரங்கேற்றம் 1973தியாகுதமிழ்கே. பாலச்சந்தர் [26]
சொல்லத்தான் நினைக்கிறேன் 1973கமல்தமிழ்கே. பாலச்சந்தர் [27]
பருவ காலம் 1974சந்திரன்தமிழ்ஜாஸ். ஏ. என். பெர்னான்டோ [28]
குமாஸ்தாவின் மகள் 1974மணிதமிழ்ஏ. பி. நாகராசன் [29]
[30]
நான் அவனில்லை 1974தமிழ்கே. பாலச்சந்தர் [27]
கன்னியாகுமரி 1974சங்கரன்மலையாளம்கே. எஸ். சேதுமாதவன் [31]
அன்புத்தங்கை 1974தமிழ்எசு. பி. முத்துராமன்சிறப்புத் தோற்றம் [32]
[33]
விஷ்ணு விஜயம் 1974மலையாளம்என். சங்கரன் ஐயர் [34]
அவள் ஒரு தொடர்கதை 1974பிரசாத்தமிழ்கே. பாலச்சந்தர்
பணத்துக்காக 1974 குமார்தமிழ்எம். எஸ். செந்தில்
சினிமாப் பைத்தியம் 1975 நடராஜன்தமிழ்முக்தா சீனிவாசன்
பட்டாம்பூச்சி 1975 'சண்டியர்' சிவாதமிழ்பிரகாசம்
ஆயிரத்தில் ஒருத்தி 1975 கமல்தமிழ்அவினாசி மணி
தேன்சிந்துதே வானம் 1975 தமிழ்ஆர். ஏ. சங்கரன்
மேல்நாட்டு மருமகள் 1975 ராஜாதமிழ்ஏ. பி. நாகராஜன்
தங்கத்திலே வைரம் 1975 குமார்தமிழ்கே. சொர்ணம்
பட்டிக்காட்டு ராஜா 1975 மகேஷ்தமிழ்கே. சண்முகம்
ஞாண் நிந்நே பிரேமிக்குன்னு 1975 மலையாளம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
மாலை சூடவா 1975 தமிழ்சி. வி. இராசேந்திரன்
அபூர்வ ராகங்கள் 1975 பிரசன்னாதமிழ்கே. பாலச்சந்தர்
திருவோணம் 1975 மலையாளம்ஸ்ரீகுமரண் தம்பி
மாட்டொரு சீதா 1975 மலையாளம்பி. பாஸ்கரன்
ராசலீலா 1975 மலையாளம்என். சங்கரன் நாயர்
அந்தரங்கம் 1975 கந்தன்தமிழ்முக்தா சீனிவாசன்
அப்பூப்பன் 1976 பாபுமலையாளம்பி. பாஸ்கரன்
அக்னி புஷ்பம் 1976 மலையாளம்ஜெஸ்ஸி
மன்மத லீலை 1976 மதுதமிழ்கே. பாலச்சந்தர்
அந்துலேனி கதா 1976 அருண்தெலுங்குகே. பாலச்சந்தர்சிறப்புத் தோற்றம்
சமஸ்ஸியா 1976 மலையாளம்கே. தங்கப்பன்
ஸ்விம்மிங் பூல் 1976 மலையாளம்ஜெ. சசிகுமார்
அருத்து 1976 மலையாளம்ரவி
சத்யம் 1976 குமரன்தமிழ்எஸ். ஏ. கண்ணன்
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது 1976 ரவிதமிழ்எசு. பி. முத்துராமன்
உணர்ச்சிகள் 1976 செல்வம்தமிழ்ஆர். சி. சக்தி
குட்டவும் சிக்ஸயும் 1976 மலையாளம்எம். மஸ்தான்
குமார விஜயம் 1976 குமார்தமிழ்ஏ. ஜெகந்நாதன் (இயக்குநர்)
இதயமலர் 1976 மோகன்தமிழ்ஜெமினி கணேசன்
பொண்ணி 1976 மாரண்மலையாளம்தோப்பில் பாசி
நீ என்டி லகாரி 1976 மலையாளம்பி. ஜி. விஸ்வம்பரன்
மூன்று முடிச்சு 1976 பாலாஜிதமிழ்கே. பாலச்சந்தர்
மோகம் முப்பது வருஷம் 1976 ரமேஷ்தமிழ்எசு. பி. முத்துராமன்
லலிதா 1976 பாலுதமிழ்வலம்புரி சோமநாதன்
ஆய்ணா 1977 பிரேம் கபூர்இந்திகே. பாலச்சந்தர்சிறு வேட சிறப்புத் தோற்றம் (இந்தி மொழி அறிமுகம்)
உயர்ந்தவர்கள் 1977 ஆருமுகம்தமிழ்டி. என். பாலு
சிவ தாண்டவம் 1977 மலையாளம்என். சங்கரன் நாயர்
ஆஸீர்வாதம் 1977 மலையாளம்ஐ. வி. சசி
அவர்கள் 1977 ஜனார்த்தன் (ஜானி)தமிழ்கே. பாலச்சந்தர்
மதுரசுவப்ணம் 1977 மலையாளம்எம். கிருஷ்ணன் நாயர்
ஸ்ரீதேவி 1977 வேணுகோபால்மலையாளம்என். சங்கரன் நாயர்
உன்னை சுற்றும் உலகம் 1977 ராஜாதமிழ்ஜி. சுப்பிரமணிய ரெட்டியார்
கபிடா 1977 கோபால்பெங்காலிபாரத் ஸாமஸெர்
அஷ்டமாங்கல்யம் 1977 மலையாளம்பி. கோபிகுமார்
நிரகுடம் 1977 தேவன்மலையாளம்ஏ. பீம்சிங்
ஒர்மகல் மரிக்குமொ 1977 சந்திரசேகரன்மலையாளம்கே. எஸ். சேதுமாதவன்
16 வயதினிலே 1977 கோபாலகிருஷ்ணன் (சப்பாணி) தமிழ் பாரதிராஜா
ஆடு புலி ஆட்டம் 1977 மதன்தமிழ்எசு. பி. முத்துராமன்
ஆனந்தம் பரமானந்தம் 1977 பாபு / சேகரன்குட்டிமலையாளம்ஐ. வி. சசி
நாம் பிறந்த மண் 1977 ரஞ்சித்தமிழ்அ. வின்சென்ட்
கோகிலா 1977 விஜயகுமார்கன்னடம்பாலு மகேந்திரா
சத்யவான் சாவித்திரி 1977 சத்தியவான்மலையாளம்பி. ஜி. விஷ்வாம்பரன்
ஆத்ய பாடம் 1977 மலையாளம்அடூர் பாசி
அவளுடெ ராவுகள் 1978 மலையாளம் ஐ. வி. சசி சிறப்புத் தோற்றம்
நிழல் நிஜமாகிறது 1978 சஞ்சீவிதமிழ்கே. பாலச்சந்தர்
சக்கைப்போடு போடு ராஜா 1978 தமிழ்எசு. பி. முத்துராமன்சிறப்புத் தோற்றம்
பருவ மழை (மடணோல்சவம்) 1978 ராஜூமலையாளம்என். சங்கரன் நாயர்தமிழில் பருவ மழை எனும் பெயரில் வெளியிடப்பட்டது
காத்திருண்ண நிமிஷம் 1978 ராஜுமலையாளம்பேபி
அவள் விஸ்வாஸதாயிருண்ணு 1978 மலையாளம்ஜெஸ்ஸிசிறப்புத் தோற்றம்
அனுமோதணம் 1978 மலையாளம்ஐ. வி. சசி
மரோ சரித்திரா 1978 பாலுதெலுங்குகே. பாலச்சந்தர்
இளமை ஊஞ்சலாடுகிறது 1978 பிரபுதமிழ்ஸ்ரீதர் (இயக்குநர்)
சட்டம் என் கையில் 1978 பாபு, ரத்தினம்தமிழ்டி. என். பாலு
வயசு பிலிசிண்டி 1978 ராஜாதெலுங்குஸ்ரீதர் (இயக்குநர்)இளமை ஊஞ்சலாடுகிறது படம் தெலுங்கில் மீண்டும் எடுக்கப்பட்டது.
தப்பிட்த தள 1978 அமிர்ட் லால்கன்னடம்கே. பாலச்சந்தர்சிறப்புத் தோற்றம்
படகுதிர 1978 மலையாளம்பி. ஜி வாசுதேவன்
வயணடன் தம்பண் 1978 வயணடன் தம்பண்மலையாளம்ஏ. வின்சென்ட்
அவள் அப்படித்தான் 1978 அருண்தமிழ்சி. ருத்ரைய்யா
சிகப்பு ரோஜாக்கள் 1978 திலீப் (முத்து)தமிழ்பாரதிராஜா
மனிதரில் இத்தனை நிறங்களா 1978 வேலுதமிழ்ஆர். சி. சக்தி
தப்பு தாளங்கள் 1978 அமிர்ட் லால்தமிழ்கே. பாலச்சந்தர்சிறப்புத் தோற்றம்
இன்பதாகம்
(ஈட்டா)
1978 ராமுமலையாளம்ஐ. வி. சசி
இரு நிலவுகள் (சொம்மொகடிதை சொக்கடிதை) 1979 ரங்கடு, சேகர்தெலுங்குசிங்கீதம் சீனிவாசராவ்தமிழில் இரு நிலவுகள் எனும் பெயரில் வெளியிடப்பட்டது
சிகப்புக்கல் மூக்குத்தி 1979 தமிழ்வலம்புரி சோமநாதன்
நீயா 1979 கமல்தமிழ்துரை
அலாவுதீனும் அல்புத விலக்கும் 1979 அலாவுதீன்மலையாளம் / தமிழ்ஐ. வி. சசிஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழியில் எடுக்கப்பட்டது (தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும் என பெயர் வைக்கப்பட்டது.)
தாயில்லாமல் நானில்லை 1979 ராஜாதமிழ்ஆர். தியாகராஜன்
நினைத்தாலே இனிக்கும் 1979 சந்துருதமிழ்கே. பாலச்சந்தர்
அந்தமைண அனுபவம் 1979 சந்துருதெலுங்குகே. பாலச்சந்தர்
இதி கத காடு 1979 Janardhanதெலுங்குகே. பாலச்சந்தர்
நூல் வேலி 1979 தமிழ்கே. பாலச்சந்தர்சிறப்புத் தோற்றம்
குப்பெடு மனசு 1979 கமல்தெலுங்குகே. பாலச்சந்தர்சிறப்புத் தோற்றம்
கல்யாணராமன் 1979 கல்யாணம், ராமன்தமிழ்ஜி. என். ரங்கராஜன்
பசி 1979 கமல்தமிழ்துரைசிறப்புத் தோற்றம்
மங்களவாத்தியம் 1979 தமிழ்கே. சங்கர்
நீலமலர்கள் 1979 டாக்டர் சந்திரன்தமிழ்கிருஷ்ணன் பஞ்சு
அழியாத கோலங்கள் 1979 கௌரிசங்கர்தமிழ்பாலு மகேந்திராசிறப்புத் தோற்றம்
உல்லாசப்பறவைகள் 1980 ரவி (எ) ரஜினிகாந்த்தமிழ்சி. வி. இராசேந்திரன்
குரு 1980 அசோக் (குரு)தமிழ்ஐ. வி. சசி
வறுமையின் நிறம் சிவப்பு 1980 ரங்கன்தமிழ்கே. பாலச்சந்தர்தெலுங்கில் ஆகலி ராச்சியம்
மரியா மை டார்லிங் (கன்னடம்) 1980 ரகுகன்னடம்துரைதமிழ் கன்னடம் என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது
மரியா மை டார்லிங் 1980 ரகுதமிழ்துரை
சரணம் ஐயப்பா 1980 தமிழ்தசரதன்சிறப்புத் தோற்றம்
நட்சத்திரம் 1980 கமல்தமிழ்தாசரி நாராயணராவ்சிறப்புத் தோற்றம்
தில்லு முல்லு 1981 சாருஹாஸன்தமிழ்கே. பாலச்சந்தர்சிறப்புத் தோற்றம்
ஆகலி ராஜ்யம் 1981 ஜெ. ரங்கராவ்தெலுங்குகே. பாலச்சந்தர்தமிழில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது
மீண்டும் கோகிலா 1981 மணியன்தமிழ்ஜி. என். ரங்கராஜன்
ராம் லட்சுமண் 1981 ராம்தமிழ்ஆர். தியாகராஜன்
ராஜ பார்வை 1981 ரகுதமிழ்சிங்கீதம் சீனிவாசராவ்
ஏக் தூஜே கே லியே 1981 வாசுஇந்திகே. பாலச்சந்தர்
கடல் மீன்கள் 1981 செல்வநாயகம், ராஜன்தமிழ்ஜி. என். ரங்கராஜன்
சவால் 1981 'பிக்பாக்கெட்' ராஜாதமிழ்ஆர். கிருஷ்ணமூர்த்தி
சங்கர்லால் 1981 தர்மலிங்கம், மோகன்தமிழ்டி. என். பாலு
டிக் டிக் டிக் 1981 திலீப்தமிழ்பாரதிராஜா
எல்லாம் இன்பமயம் 1981 வேலுதமிழ்ஜி. என். ரங்கராஜன்
வாழ்வே மாயம் 1982 ராஜாதமிழ்ஆர். கிருஷ்ணமூர்த்தி
அந்திவெய்யிலிலே பொண்ணு 1982 மலையாளம்இராதாகிருஷ்ணன்
மூன்றாம் பிறை 1982 சீனிவாசன் (சீனு)தமிழ்பாலு மகேந்திரா
நீதி தேவன் மயக்கம் 1982 ராணுவ வீரர் தமிழ் பாப்பு
மாட்டுவின் சட்டங்களே 1982 மலையாளம்கே. ஜி. ராஜசேகரன்சிறப்புத் தோற்றம்
சிம்லா ஸ்பெஷல் 1982 கோபுதமிழ்முக்தா சீனிவாசன்
பாடகன்
(சனம் தெரி கசம்)
1982 சுனில் சர்மாஇந்திநரேந்திரா பேடி
சகலகலா வல்லவன் 1982 வேலுதமிழ்எசு. பி. முத்துராமன்
ஏழாவது இரவில்
(ஏழாம் ராத்திரி)
1982 மலையாளம்கிருஷ்ணகுமார்
ராணி தேனி 1982 மில்லர்தமிழ்ஜி. என். ரங்கராஜன்சிறப்புத் தோற்றம்
ஏ தோ கமால் ஹோகயா 1982 ரத்தன் சந்தர், ரஜய் சாக்சனாஇந்திதத்திநேரி ராம ராவ்
பகடை பனிரெண்டு 1982 ஆனந்த்தமிழ்என். தாமோதரன்
அக்னி சாட்சி 1982 கமல்ஹாசன்தமிழ்கே. பாலச்சந்தர்சிறப்புத் தோற்றம்
சாரா சி சிந்தகி 1983 ராகேசு குமார் சாத்திரிஇந்திகே. பாலச்சந்தர்
உருவங்கள் மாறலாம் 1983 கமல்ஹாசன்தமிழ்எஸ். வி. ரமணன்சிறப்புத் தோற்றம்
சட்டம் 1983 ராஜா (காவல் ஆய்வாளர்)தமிழ்கே. விசயன்
சலங்கை ஒலி 1983 பாலகிருஷ்ணாதெலுங்குகே. விஸ்வநாத்
சத்மா 1983 சோமுஇந்திபாலு மகேந்திரா
பொய்க்கால் குதிரை 1983 கமல்ஹாசன்தமிழ்கே. பாலச்சந்தர்சிறப்புத் தோற்றம்
பெங்கியல்லி அரலிட கூவூ 1983 பேருந்து நடத்துனர்கன்னடம்கே. பாலச்சந்தர்சிறப்புத் தோற்றம்
தூங்காதே தம்பி தூங்காதே 1983 கோபி, வினோத் தமிழ் எசு. பி. முத்துராமன்
யேக் தேஸ் 1984 மதுர் (காவல் ஆய்வாளர்)இந்திடடிநெனி ராமராவ்சிறப்புத் தோற்றம்
ஏக் நய் பகெலி 1984 சந்தீப்இந்திகே. பாலச்சந்தர்
யாட்கர் 1984 ராஜ்நாத் (ராஜூ)இந்திதேசாரி நாராயணராவ்
ராஜ் திலக் 1984 சுராஜ்இந்திராஜ்குமார் கோலி
எனக்குள் ஒருவன் 1984 மதன், யுபெந்திராதமிழ்எசு. பி. முத்துராமன்
கரிஷ்மா 1984 சண்ணிஇந்திஐ. வி. சசி
ஒரு கைதியின் டைரி 1985 டேவிட், சங்கர்தமிழ்பாரதிராஜா
காக்கிசட்டை 1985 முரளிதமிழ்ராஜசேகர்
அந்த ஒரு நிமிடம் 1985 குமார்தமிழ்மேஜர் சுந்தரராஜன்
உயர்ந்த உள்ளம் 1985 ஆனந்த்தமிழ்எசு. பி. முத்துராமன்
சாகர் 1985 ராஜாஇந்திரமேஷ் சிப்பி
ஜிராப்டார் 1985 கிஷான் குமார் கண்ணாஇந்திபிரயாக் ராஜ்
மங்கம்மா சபதம் 1985 அசோக், ராஜாதமிழ்கே. விசயன்
ஜப்பானில் கல்யாண ராமன் 1985 கல்யாணம், ராமன்தமிழ்எசு. பி. முத்துராமன்
தேக் பியர் தும்காரா 1985 விஷால்இந்திவிரேந்திர சர்மா
விக்ரம் 1986 விக்ரம்தமிழ்ராஜசேகர்
சிப்பிக்குள் முத்து 1986 சிவய்யாதெலுங்குகே. விஸ்வநாத்
நானும் ஒரு தொழிலாளி 1986 பரத்தமிழ்ஸ்ரீதர் (இயக்குநர்)
மனக்கணக்கு 1986 திரைப்பட இயக்குநர் தோற்றம்தமிழ்ஆர். சி. சக்திசிறப்புத் தோற்றம்
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
(ஒக ராதா இத்துரு கிருஷ்ணலு)
1986 கிருஷ்ணாதெலுங்குஏ. கொதண்டரமனி ரெட்டிதமிழில் ஹரே ராதா ஹரே கிருஷ்ணா எனும் பெயரில் வெளியிடப்பட்டது
புன்னகை மன்னன் 1986 சேது,
சாப்ளின் செல்லப்பா
தமிழ்கே. பாலச்சந்தர்
காதல் பரிசு 1987 மோகன்தமிழ்ஏ. ஜெகந்நாதன்
விருதம் 1987 பாலுமலையாளம்ஐ. வி. சசி
கடமை கண்ணியம் கட்டுப்பாடு 1987 கமல்ஹாசன்தமிழ்சந்தான பாரதிசிறப்புத் தோற்றம்
பேர் சொல்லும் பிள்ளை 1987 ராமுதமிழ்எசு. பி. முத்துராமன்
பேசும் படம்
(புஷ்பக விமானம்)
1987 ஊமைப்படம்சிங்கீதம் சீனிவாசராவ்தமிழில் பேசும் படம் என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.
நாயகன் 1987 சக்திவேல் "வேலு நாயக்கர்" தமிழ் மணி ரத்னம்
டெய்ஸி 1988 ஜேம்ஸ்மலையாளம்பிரதாப் போத்தன்சிறப்புத் தோற்றம்
சூரசம்ஹாரம் 1988 பாண்டியன்தமிழ்சித்ரா லஷ்மண்
உன்னால் முடியும் தம்பி 1988 உதயமூர்த்திதமிழ்கே. பாலச்சந்தர்
சத்யா 1988 சத்தியமூர்த்திதமிழ்சுரேஷ் கிருஷ்ணா
அபூர்வ சகோதரர்கள் 1989 சேதுபதி,
ராஜா,
அப்பு
தமிழ் சிங்கீதம் சீனிவாசராவ்
சாணக்கியன் 1989 ஜான்சன்மலையாளம்டி. கே. ராஜீவ் குமார்
வெற்றி விழா 1989 வெற்றிவேல்தமிழ்பிரதாப் போத்தன்
இந்திரன் சந்திரன் (இந்திருடு சந்துருடு) 1989 ஜி. கே. ராயுடு, சந்துருதெலுங்குசுரேஷ் கிருஷ்ணாதமிழில் இந்திரன் சந்திரன் எனும் பெயரில் வெளியிடப்பட்டது
மைக்கேல் மதன காமராஜன் 1990 மைக்கேல்,
மதனகோபால்,
காமேஷ்வரன்,
சுப்பிரமணியம் ராஜூ
தமிழ் சிங்கீதம் சீனிவாசராவ்
குணா 1991 குணசேகரன்தமிழ்சந்தான பாரதி
சிங்கார வேலன் 1992 சிங்காரவேலன்தமிழ்ஆர். வி. உதயகுமார்
தேவர் மகன் 1992 சக்திவேல்தமிழ்பரதன்
மகராசன் 1993 வடிவேலுதமிழ்ஜி. என். ரங்கராஜன்
கலைஞன் 1993 இந்திரஜித்தமிழ்ஜி. பி. விஜய்
மகாநதி 1994 கிருஷ்ணசுவாமிதமிழ்சந்தான பாரதி
மகளிர் மட்டும் 1994 தமிழ்சிங்கீதம் சீனிவாசராவ்சிறப்புத் தோற்றம்
நம்மவர் 1994 செல்வம்தமிழ்கே. எஸ். சேதுமாதவன்
சதி லீலாவதி 1995 சக்திவேல் கவுண்டர்தமிழ்பாலுமகேந்திரா
சுப சங்கல்பம் 1995 தாசுதெலுங்குகே. விஸ்வநாத்
குருதிப்புனல் 1995 ஆதி நாராயணன்தமிழ்பி. சி. ஸ்ரீராம்
இந்தியன் 1996 சேனாபதி, சந்திரபோஷ்தமிழ்ஷங்கர்
அவ்வை சண்முகி 1996 பாண்டியன்
(அவ்வை சண்முகி)
தமிழ்கே. எஸ். ரவிக்குமார்
சாச்சி 420 1997 ஜெய்பிரகாஷ் பஸ்வான்
(லஷ்மி கட்போலெ)
இந்திகமல்ஹாசன்
காதலா காதலா 1998 ராமலிங்கம்தமிழ்சிங்கீதம் சீனிவாசராவ்
ஹேராம் 2000 சாகித்யம் ராம்தமிழ்கமல்ஹாசன்தமிழ் இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது
ஹேராம் 2000 சாகேத் ராம் இந்தி கமல்ஹாசன்
தெனாலி 2000 தெனாலி சோமன்தமிழ்கே. எஸ். ரவிக்குமார்
ஆளவந்தான் 2001 விஜய், நந்துதமிழ்சுரேஷ் கிருஷ்ணாதமிழ் இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது
அபேய் 2001 விஜய், அபெய் இந்தி சுரேஷ் கிருஷ்ணா
பார்த்தாலே பரவசம் 2001 கமல்ஹாசன்தமிழ்கே. பாலச்சந்தர்சிறப்புத் தோற்றம்
பம்மல் கே. சம்பந்தம் 2002 பம்மல் கல்யாண சம்பந்தம்தமிழ்மௌலி
பஞ்சதந்திரம் 2002 ராமசந்திரமூர்த்தி (ராம்)தமிழ்கே. எஸ். ரவிக்குமார்
அன்பே சிவம் 2003 நல்லசிவம்தமிழ்சுந்தர் சி.
நளதமயந்தி 2003 கமல்ஹாசன் தமிழ் T. S. B. K. Moulee சிறப்புத் தோற்றம்
விருமாண்டி 2004 விருமாண்டிதமிழ்கமல்ஹாசன்
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் 2004 ராஜாராம்தமிழ்சரண்
மும்பை எக்ஸ்பிரஸ் 2005 அவினாசிதமிழ்சிங்கீதம் சீனிவாசராவ்
மும்பை எக்ஸ்பிரஸ் 2005 அவினாஷ்இந்திசிங்கீதம் சீனிவாசராவ்
ராமா சாமா பாமா 2005 டாக்டர் ஷாம் சஜ்ஜன்கன்னடம்ரமேஷ் அரவிந்த்
வேட்டையாடு விளையாடு 2006 ராகவன்தமிழ்கௌதம் மேனன்
தசாவதாரம் 2008 கோவிந்தராஜன் ராமசாமி,
ரங்கராஜன் நம்பி,
கிருஷ்டியன் பிளெட்சர்,
பல்ராம் நாயுடு,
கிருஷ்ணவேணி பாட்டி,
வின்சென்ட் பூவராகன்,
கலிபுல்லா காண்,
அவதார் சிங்,
சிங்கென் நரகாசி,
ஜார்ஜ் வாக்கர் புஷ்
தமிழ்கே. எஸ். ரவிக்குமார்
உன்னைப்போல் ஒருவன் 2009 பெயரில்லாத ஒரு நபர்தமிழ்சக்ரி டொலெட்டி
ஈநாடு 2009 "பெயரில்லாத ஒரு நபர்"தெலுங்கு சக்ரி டொலெட்டி
ப்போர் பிரண்ட்ஸ் 2010 கமல்ஹாசன்மலையாளம்சஜி சுரேந்திரன்சிறப்புத் தோற்றம்
மன்மதன் அம்பு 2010 ராஜ மன்னார்தமிழ்கே. எஸ். ரவிக்குமார்
விஸ்வரூபம் 2013 விஸாம் அகமது காஸ்மீரிதமிழ்கமல்ஹாசன்தமிழ் இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது
விஸ்வரூப் 2013 விஸாம் அகமது காஸ்மீரிஇந்தி கமல்ஹாசன்
உத்தம வில்லன் 2015 மனோரஞ்சன், உத்தமன்தமிழ்ரமேஷ் அரவிந்த்லாஸ் ஏஞ்சல்சு சர்வதேச திரைப்பட விழாவில் (LAIFFA) சிறந்த நடிகர் விருது
பாபநாசம் 2015 சுயம்புலிங்கம் தமிழ் ஜித்து ஜோசப்
தூங்காவனம் 2015 சி. கே. திவாகர்தமிழ்ராஜேஷ் செல்வாதமிழ் தெலுங்கு என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது
சீகட்டி ராஜ்யம் 2015 சி. கே. திவாகர்தெலுங்கு ராஜேஷ் செல்வா
மீன் குழம்பும் மண் பானையும் 2016 சுவாமி தமிழ் அமுதேஷ்வர் சிறப்புத் தோற்றம்
விஸ்வரூபம் II 2018 விஸாம் அகமது காஸ்மீரி தமிழ் கமல்ஹாசன்தமிழ் இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது
விஸ்வரூப் II 2018 விஸாம் அகமது காஸ்மீரி இந்தி கமல்ஹாசன்
இந்தியன் 2dagger 2022 சேனாபதிதமிழ்ஷங்கர்படம் எடுக்கப்பட்டு வருகிறது
விக்ரம் 2022 விக்ரம் தமிழ் லோகேஷ் கனகராஜ்
மூடு

வெளிவராத படம்

மேலதிகத் தகவல்கள் சபாஷ் நாயுடு ...
சபாஷ் நாயுடு 2017 விக்ரம் தமிழ், தெலுங்கு, இந்தி லோகேஷ் கனகராஜ் தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் படம் எடுப்பது நிறுத்தப்பட்டது
மூடு

தயாரித்த திரைப்படங்கள்

Films that have not yet been released இன்னும் வெளியாகாத திரைப்படங்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
ஆண்டு திரைப்படம் இயக்குநர் மொழி குறிப்புகள் சான்று
1981 ராஜ பார்வை சிங்கீதம் சீனிவாசராவ் தமிழ் மற்றும் தெலுங்கு கமல்ஹாசன் நடித்த 100வது திரைப்படம்.
1986 விக்ரம் இராஜசேகர் தமிழ் தெலுங்கில் ஏஜென்ட் விக்ரம் எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு சந்தான பாரதி தமிழ் பாடல்கள் இல்லாத திரைப்படம்
1988 சத்யா சுரேஸ் கிருஷ்ணா தமிழ் தெலுங்கில் இதே பெயரில் வெளியிடப்பட்டது.
1989 அபூர்வ சகோதரர்கள் சிங்கீதம் சீனிவாசராவ் தமிழ் தெலுங்கு மொழியில் விசித்திர சகோதரலு மற்றும் இந்தியில் அப்பு ராஜா எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
1992 தேவர் மகன் பரதன் தமிழ் தெலுங்கில் க்ஷத்திரிய புத்ருடு எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
1994 மகளிர் மட்டும் சிங்கீதம் சீனிவாசராவ் தமிழ் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
1995 குருதிப்புனல் பி. சி. ஸ்ரீராம் தமிழ் மற்றும் தெலுங்கு தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டது, தெலுங்கில் துரோகி எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
1997 சாச்சி 420 கமல்ஹாசன் இந்தி கமல்ஹாசன் இயக்கிய முதல் திரைப்படம்.
2000 ஹே ராம் கமல்ஹாசன் தமிழ் மற்றும் இந்தி ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழியில் உருவாக்கப்பட்டது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இதே பெயரில் திரையிடப்பட்டது.
2003 நள தமயந்தி மௌலி தமிழ்
2004 விருமாண்டி கமல்ஹாசன் தமிழ் தெலுங்கில் போத்திராஜீ எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
2005 மும்பை எக்ஸ்பிரஸ் சிங்கீதம் சீனிவாசராவ் தமிழ் மற்றும் இந்தி ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வேறு வேறு துணை நடிகையர்களை நடிக்க வைத்து ஒரே திரைப்பட பெயரில் எடுக்கப்பட்ட இரு மொழி படமாகும்.
2009 உன்னைப்போல் ஒருவன் சக்ரி டொலெட்டி தமிழ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழில் நடிகர் மோகன்லால் நடித்தார் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்தார்.
2009 ஈநாடு சக்ரி டொலெட்டி தெலுங்கு
2013 விஸ்வரூபம் கமல்ஹாசன் தமிழ் மற்றும் இந்தி இந்தியில் விஸ்வரூப் எனும் பெயரில் திரையிடப்பட்டது.
2015 உத்தம வில்லன் ரமேஷ் அரவிந்த் தமிழ் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
2015 தூங்காவனம் ராஜேஸ் எம்.செல்வா தமிழ் மற்றும் தெலுங்கு தெலுங்கில் சீகட்டி ராஜ்ஜியம் எனும் பெயரில் திரையிடப்பட்டது.
2018 விஸ்வரூபம் 2 கமல்ஹாசன் தமிழ் மற்றும் இந்தி இந்தியில் விஸ்வரூப் 2 எனும் பெயரில் திரையிடப்பட்டது.
2019 கடாரம் கொண்டான் ராஜேஸ் எம்.செல்வா தமிழ் தெலுங்கில் மிஸ்டர் கே.கே. எனும் பெயரில் திரையிடப்பட்டது.
மூடு

குறிப்பு:கமல்ஹாசன் அவர்களின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மூலம் கமல் தயாரித்த மற்றும் தயாரிக்காத பல படங்கள் விநியோகமும் செய்துள்ளது.

வெளியாகாத அல்லது பாதியில் கைவிடப்பட்ட திரைப்படங்கள்

எழுதிய திரைக்கதைகள்

இயக்கிய திரைப்படங்கள்

1: 1997 – மருதநாயகம் (திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது)
2: 2017 – சபாஷ் நாயுடு (திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது)

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்

( பாடலாசிரியர்)

இதர பங்களிப்புகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
ஆண்டுதிரைப்படம்மொழிபங்காற்றியது
1971நூற்றுக்கு நூறுதமிழ்உதவி இயக்குநர்,
துணை நடன இயக்குநர்
1971சவாலே சமாளிதமிழ்துணை நடன இயக்குநர்
1971சிறீமந்துடுதெலுங்குதுணை நடன இயக்குநர்
1971அன்னை வேளாங்கண்ணிதமிழ்உதவி இயக்குநர்,
துணை நடன இயக்குநர்
1972சங்கே முழங்குதமிழ்துணை நடன இயக்குநர்
1972நான் ஏன் பிறந்தேன்தமிழ்துணை நடன இயக்குநர்
1972நிருதசாலா  மலையாளம்துணை நடன இயக்குநர்
1973காசி யாத்திரை தமிழ்துணை நடன இயக்குநர்
1973சூரியகாந்தி தமிழ்துணை நடன இயக்குநர்
1974வெள்ளிக்கிழமை விரதம் தமிழ்துணை நடன இயக்குநர்
1976உணர்ச்சிகள் தமிழ்உதவி இயக்குநர்
1977அவர்கள்தமிழ்நடன ஆசிரியர்
1977அய்னா  இந்திஉதவி இயக்குநர்,
நடன ஆசிரியர்
1982சிம்லா ஸ்பெஷல் தமிழ்நடன ஆசிரியர்
1983உருவங்கள் மாறலாம் தமிழ்நடன ஆசிரியர்
1983சணம் டெரி கேசாம் (பாடகன்இந்திநடன ஆசிரியர்
1988ராம்போ 3ஆங்கிலம்உதவி ஒப்பனை
1996ஸ்டார் ரெக், பர்ஸ்ட் கான்டாக்ட்  ஆங்கிலம்உதவி ஒப்பனை
2000ஹேராம்தமிழ்நடன ஆசிரியர்
2004விருமாண்டி தமிழ்நடன ஆசிரியர்
2013விஸ்வரூபம்தமிழ்நடன ஆசிரியர்
2015உத்தம வில்லன்தமிழ்நடன ஆசிரியர்
2015தூங்காவனம்தமிழ்ஒப்பனை
மூடு

வெளியாகாத திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் சான்றுகள்
1986 கபார்தர்இந்திடி. ராமராவ்[37]
1996 கண்டேன் சீதையைதமிழ்பாலச்சந்திர மேனன்[38]
1997 லேடிசு ஒன்லிஇந்திதினேஷ் சைலேந்திரா[37]
1997 மருதநாயகம்தமிழ்கமல்ஹாசன்[39]
மூடு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

விருதுகள்

Thumb
மார்ச் 31, 2014 அன்று புதுடில்லியில் ராகுபிரதி பவனில் உள்ள ஒரு பொதுப்பணித்துறை விழாவில் ஸ்ரீ கமல் ஹாசனுக்கு பத்ம பூஷண் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
  • மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)
  • சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)
  • சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர் மகன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசனுக்கு ஓர் இந்திய தேசிய விருது.
  • 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்.
  • மூன்று முறை, ஆந்திரா அரசின் நடிப்புக்கான நந்தி விருதுகள். (திரைப்படங்கள் - சாகர சங்கமம், சுவாதி முத்யம், இந்திருடு சந்திருடு)
  • 19 பிலிம்பேர் விருதுகள்.
  • 50 வருடம் திரைத்துறையில் பணியாற்றியமைக்காக கேரளா அரசின் சிறப்பு விருது.
  • பத்மசிறீ விருது (1990)
  • சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)
  • பத்ம பூசன் விருது (2014)[41]
  • தென் இந்திய நடிகர்களிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற்றுள்ளார்.[42]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.