கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சொல்லத்தான் நினைக்கிறேன் (Sollathaan Ninaikkiren) என்பது 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். இப்படத்தில் இடம்பெறும் சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் துடிக்கிறேன் என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
சொல்லத்தான் நினைக்கிறேன் | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | மணியன் (உதயம் புரொடக்ஷன்ஸ்) |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவகுமார் கமல்ஹாசன் ஸ்ரீவித்யா ஜெயசித்ரா |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
வெளியீடு | திசம்பர் 7, 1973 |
நீளம் | 4590 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படமானது மணியன் எழுதிய இலவு காத்த கிளி என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[1][2][3]
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
சிவகுமார்[4] | ராகவன் |
கமல்ஹாசன்[5] | கமல் |
ஜெயசித்ரா[4][6] | புஷ்பா |
ஸ்ரீவித்யா | கமலா |
சுபா | மஞ்சுளா |
ஜெயசுதா | சுதா |
பூர்ணம் விஸ்வநாதன் | விஸ்வநாத் |
எஸ். வி. சுப்பையா | சிவராமன் |
மாஸ்டர் சேகர் | - |
உசிலமணி | - |
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் | - |
எம். எஸ். விஸ்வநாதனால் பாடல், இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கவிஞர் வாலியால் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "கல்யாணம் கச்சேரி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி | கவிஞர் வாலி | 03:32 |
2 | "மலர் போல் சிரிப்பது" | வாணி ஜெயராம் | 04:27 | |
3 | "பல்லவி என்று" | பி. சுசீலா, எஸ். ஜானகி | 05:06 | |
4 | "சொல்லத்தான் நினைக்கிறேன்" | எம். எஸ். விஸ்வநாதன், எஸ். ஜானகி | 03:13 | |
5 | "சொல்லத்தான் நினைக்கிறேன்" (சோகம்) | எம். எஸ். விஸ்வநாதன் | 02:00 |
இந்து தமிழ் நாளிதழில் வந்த விமர்சனமானது - 'இப்படத்தில் மூன்று நாயகிகள் என்றாலும் ஜெயசித்ராவின் பாத்திர வார்ப்பும் அவரின் அலட்சியமான சவால் விடுகிற மேனரிஸப் பேச்சும் ரொம்பவே கொள்ளைகொண்டன. கமலும் ஜெயசித்ராவும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்தார்கள்'.[7]
Seamless Wikipedia browsing. On steroids.