எல். ஆர். ஈசுவரி
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எல். ஆர். ஈசுவரி (பிறப்பு:7 திசம்பர் 1939) என்பவர் தமிழ்நாட்டின் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1958 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.[1]
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
இலூர்து மேரி ஈசுவரி பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்குச் சென்னையில் பிறந்தார். இவரது தாயார் எம். ஆர். நிர்மலா, ஜெமினி சுடூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "இலூர்துமேரி இராஜேஸ்வரி". எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உள்ளனர்.
Remove ads
திரையுலகில்
மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழுவினருடன் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் சேர்ந்து பாடினார்.[2] அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் வாய்ப்பு நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதற் பாடலாகும்.
1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயோ தோழி வாராயோ என்ற பாடல் இவருக்கு பரவலான புகழைத் தேடித் தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும். "எலந்தைப் பழம்", முத்துக்குளிக்க வாரியளா, தட்டட்டும் கை தழுவட்டும், நதியே மதுவானால், பத்து பதினாறு முத்தம் முத்தம், பட்டத்து இராணி பார்க்கும் பார்வை, குடிமகனே பெரும் குடிமகனே, அதிசய உலகம் ரகசிய இதயம் போன்ற பாடல்கள் இவருக்குப் பரவலான புகழைத் தேடித்தந்தன.
Remove ads
மறு நுழைவு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2011ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த ஒஸ்தே திரைப்படத்தில் "கலாசலா கலாசலா" என்ற பாடலைப் பாடியதில் மீண்டும் பிரபலமானார். இப்பாடல் வெளியான சில நாட்களிலேயே அதிகமானோரைச் சென்றடைந்தது. அடுத்த ஆண்டு தடையறத் தாக்க படத்தில் "நா பூந்தமல்லிடா" என்ற பாடலைப் பாடினார். இவர் சமீபத்தில் விக்டரி படத்திற்காக கைலாஷ் கெருடன் "யக்கா நின் மகளு நானகே" என்ற கன்னடப் பாடலைப் பாடியுள்ளார், இதுவும் சிறந்த பாடலானது. 2013-இல், ஆர்யா சூர்யா படத்தில் டி. ராஜேந்தருடன் இணைந்து "தகடு தகடு" என்ற இணைப் பாடலைப் பாடினார். 2014-இல் பரத்வாஜ் இசையமைத்த அதிதி திரைப்படத்தில் "ஜெய்பூரில் ஜெய்பூரில்" பாடலைப் பாடினார். 2020ஆம் ஆண்டில், நயன்தாரா நடித்த திரைப்படமான "மூக்குத்தி அம்மன்" படத்திற்காக ஆதி குத்து என்ற பாடலைப் பாடியுள்ளார்.
ஈஸ்வரி பாடிய தமிழ்த் திரைப்படப் பாடல்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads