இவர் 2005 ஆம் ஆண்டில் பர்சானியா என்னும் ஆங்கில திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைகான தேசிய விருதினைப் பெற்றார்.
சரிகா தாக்கூர் புதுதில்லியில் பிறந்தவர், இவர் பாதி மராத்தியர் மற்றும் பாதி இராசபுத்திரர் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1] சரிகாவின் இளம்வயதிலேயே இவரது தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது. இதனால் இவர் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இவர் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பையும் பெறவில்லை. இவரின் தாயார் இவரிடம் கடுமையாக வேலை வாங்கினார். இவர் தன் வாழ்வில் உச்சநிலையில் இருந்தபோது, இவரது தாயாரால் பொது இடத்தில் தாக்கப்பட்டார்.[2]
சரிகா குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் மும்பை பாலிவுட்டில் தன் திரைப்பட வாழ்வைத் துவக்கினார்,[2] இவர் 1960 இல் தன் முதல் படத்தில் மாஸ்டர் சூரஜ் என்ற சிறுவனாக நடித்தார். 1967 இல் இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமான ஹமாராஜ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரின் நடிப்பு கவணிக்க வைத்தது. இப்படத்தின் தலைப்பில் பேபி சரிகா என குறிப்பிடப்பட்டார். இதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வளர்ந்த பிறகும், இவர் பல இந்தி, மராத்தி, திரைப்படங்களில் நடித்தார். நடிகர் கமல்ஹாசனைத் திருமணம் செய்தார், பின் மணவிலக்குப் பெற்றார்.
பார் பார் தேகோ (2016)
டேவிட் (2013) ..
கிளப் 60 (2013) .... டாக்டர். சய்ரா
ஜப் தக் ஹை ஜான் (2012) .... டாக்டர் ஜோயா அலி கான்
ஷூபைட் (2012) .... அதிதி
சொசைட்டி (2010)
கச்சா லிம்பு (2009)
ஹாரி புட்டர்: எ காமெடி ஆப் திரோஸ் (2008) .... ஹரி புட்டரின் தாயார்
Y.M.I. யே மேரா இந்தியா (2008) .... சுஷ்மா தல்ரிஜா
தஹான் (2008) .... தஹான் தாயார்
மனோரமா சிக்ஸ் பீட் அண்டர் (2007) .... மனோரமா
பேஜா ஃப்ரை (2007) .... ஷீத்தல் ஆர் தடனி
புனித ஈவில் (2006) .... இப்சிதா
கல்: நேற்று மற்றும் நாளை (2005) .... இரா ஹக்சர்
பர்ஜானியா (2005) .... ஸ்னெஹ்னாஜ்
அமெரிக்க பகல் (2004) .... டோலி
ரகு ரோமியோ (2003) .... கட்சி விருந்தினர்
புன்னகை பூவே (2003)
ஆக்ரி சங்குரஷ் (1997) .... சீத்தா
சந்தோஷ் (1989) .... முன்னி / சாரிகா
அஜீப் இத்தாப்A (1989) .... அபர்ணா / அர்பனா
காரிடர் (1988)
ஸ்வாடீ (1986) .... நடன மாது / பாடகி
ஷர்ட் .... ரூஹி
தில்வாலா (1986) .... சப்னா
மங்கள் தாதா (1986)
ஜிந்தா லாஷ் (1986)
ஏக் தாக்கு சாகிர் மெயின் (1985) .... ரஞ்சனா
ராம் தேரே கிட்னி நாம் (1985) .... லில்லி ( "தேவதை" காட்சியில்)