From Wikipedia, the free encyclopedia
நந்தி விருது என்பது தெலுங்குத் திரைத்துறையினருக்காக ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் உயரிய விருது ஆகும். நந்தி என்பது காளையை குறிக்கும் சொல்லாகும், இவ்விருதுகள், லெபாக்ஷி என்னும் ஆந்திராவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு வகை நந்தியை குறிப்பிடுவதாகும்.
நந்தி விருதுகள் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | திரைப்படம் | |
நிறுவியது | 1964 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2010 | |
வழங்கப்பட்டது | ஆந்திரப் பிரதேச அரசு, இந்தியா | |
விவரம் | தெலுங்குத் திரைத்துறையினருக்கான உயரிய விருது |
நந்தி விருதுகள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன: தங்கம், வெள்ளி, வெண்கலம், மற்றும் செப்பு.
ஆண்டுதோறும் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குழுவானது இவ்விருதினை பெறும் திரைத்துறையினரைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் விழாவில் ஆந்திர முதலமைச்சரால் இவ்விருது வழங்கப்படும்.
இவ்விருதினைப் பெற அத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவால் அதற்கு முந்தைய வருடத்தின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-க்குள் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
Seamless Wikipedia browsing. On steroids.