கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நான் அவனில்லை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், லட்சுமி, கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1962 ஆம் ஆண்டய மராத்திய நாடகமான டு மீ நவ்ஹெச்சியை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். பலவிதமான வேடமிட்டு பல பெண்களை வசீகரித்து திருமணம் செய்யும் ஒருவனின் கதையாகும்.
நான் அவனில்லை | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஜெமினி கணேசன் (ஸ்ரீ நாராயணி பிலிம்ஸ்) |
திரைக்கதை | கே. பாலச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் லட்சுமி கமல்ஹாசன் ஜெயசுதா |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | சூன் 7, 1974 |
நீளம் | 4386 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் தயாரித்த ஒரே திரைப்படம் இதுவாகும்.[1]
எம். எஸ். விஸ்வநாதனால் பாடல்களுக்கு இசை இயற்றப்பட்டது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய "ராதா காதல் வராதா" எனும் பாடல் வரவேற்பைப் பெற்றது.[2]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "எங்கிருந்தோ வந்தால்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கண்ணதாசன் | 03:46 |
2 | "ராதா காதல் வராதா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 06:17 | |
3 | "மந்தார மலரே" | பி. ஜெயச்சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி | கண்ணதாசன், பி. பாஸ்கரன் (மலையாளம் வரிகள்) | 04:43 |
4 | "நான் சின்னஞ்சிறு" | பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ் | கண்ணதாசன், குமார மித்ரா (இந்தி வரிகள்) | 03:20 |
5 | "இங்கே நான்" | எல். ஆர். ஈஸ்வரி, சாய்பாபா | கண்ணதாசன் | 05:37 |
2007 ஆம் ஆண்டில் இதே பெயரில் இதே கதையில் நான் அவனில்லை (2007 திரைப்படம்) எனும் திரைப்படம் மறுபடியும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது, அத்திரைப்படத்தில் ஜீவன், சினேகா, நமிதா, மாளவிகா, ஜோதிமயி, கீர்த்தி சாவ்லா, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை இலட்சுமி அவர்கள் மறுபடியும் அத்திரைப்படத்தில் நடித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.