நைட்ரசன்
7 ஆம் அணுவெண்ணைக் கொண்ட மூலகம் / From Wikipedia, the free encyclopedia
நைட்ரசன் (Nitrogen) (இலங்கை வழக்கு- நைதரசன்) ஒரு தனிமம் ஆகும். இதன் அணு எண் 7. இது ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவைற்ற ஒரு வாயு ஆகும். வளிமண்டலத்தில் 78.1% அளவிற்கு நைட்ரசன் வாயு நிரம்பியுள்ளது. பிரபஞ்சத்தில் நைட்ரசன் ஒரு பொதுவான தனிமமாகும். சூரிய மண்டலம் மற்றும் பால் வெளியில் உள்ள மொத்த பொருட்களில் நைட்ரசன் ஏழாவது இடத்தைப் பிடிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டவெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இரண்டு நைட்ரசன் அணுக்கள் சேர்ந்து டைநைட்ரசன் தோன்றுகிறது. இது நிறமும் நெடியும் அற்றதாக ஈரணு வளிமமாக N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் அறியப்படுகிறது. வளிமண்டலத்தில் இதன் பருமன் ஆக்சிசனை விட 4 மடங்கு அதிகமாய் உள்ளது .
நைட்ரசன் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
7N | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||
நிறமிலி வளிமம், திரவம், அல்லது திண்மம் திரவ நைட்ரசன் நைதரசனின் நிறமாலைக் கோடுகள் | |||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | நைட்ரசன், N, 7 | ||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈnaɪtr[invalid input: 'ɵ']dʒən/ NYE-trə-jən | ||||||||||||||||||||||||
தனிம வகை | அலோகம் | ||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 15, 2, p | ||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
14.0067(2) | ||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | 1s2 2s2 2p3 2, 5 | ||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | D. Rutherford (1772) | ||||||||||||||||||||||||
பெயரிட்டவர் | J. Chaptal (1790) | ||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||
நிலை | வளிமம் | ||||||||||||||||||||||||
அடர்த்தி | (0 °C, 101.325 kPa) 1.251 g/L | ||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி கொ.நி.யில் | 0.808 g·cm−3 | ||||||||||||||||||||||||
உருகுநிலை | 63.15 K, -210.00 °C, -346.00 °F | ||||||||||||||||||||||||
கொதிநிலை | 77.36 K, -195.79 °C, -320.33 °F | ||||||||||||||||||||||||
மும்மைப் புள்ளி | 63.1526 K (-210°C), 12.53 kPa | ||||||||||||||||||||||||
மாறுநிலை | 126.19 K, 3.3978 MPa | ||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | (N2) 0.72 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | (N2) 5.56 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (N2) 29.124 யூல்.மோல்−1·K−1 | ||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 5, 4, 3, 2, 1, -1, -2, -3 (வலுவான காடிய ஆக்ஸைடு) | ||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 3.04 (பாலிங் அளவையில்) | ||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 1402.3 kJ·mol−1 | ||||||||||||||||||||||||
2வது: 2856 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
3வது: 4578.1 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 71±1 pm | ||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 155 பிமீ | ||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||
படிக அமைப்பு | hexagonal | ||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | diamagnetic | ||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 25.83 × 10−3 W·m−1·K−1 | ||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் | (gas, 27 °C) 353 மீ.செ−1]] | ||||||||||||||||||||||||
CAS எண் | 7727-37-9 | ||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: நைட்ரசன் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
·சா |
தனிம அட்டவணையில் நைட்ரசன் தொகுதியில் (V. A) உள்ள எல்லாத் தனிமங்களும் உலோகம் அல்லது உலோகம் போன்றதாக இருக்க நைட்ரஜன் மட்டும் வளிம நிலையில் இருக்கின்றது. மனித உடலில் இடம்பெற்றுள்ள ஆக்சிசன், கார்பன், ஐதரசன் ஆகியனவற்றுக்கு அடுத்து அதிகமாக 3% அளவுக்கு நைட்ரசன் இடம்பிடித்துள்ளது. காற்றிலுள்ள நைட்ரசன் வாயு உயிர்க் கோளத்திற்குள் வந்து கரிமச் சேர்மங்கள் வழியாக மீண்டும் காற்றில் கலப்பதை நைட்ரசன் சுழற்சி விவரிக்கிறது.
தொழில்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சேர்மங்களான அமோனியா, நைட்ரிக் அமிலம், சயனைடுகள், அமினோ அமிலங்கள், நியூக்ளிக் அமிலங்கள், அடினோசின் முப்பாசுப்பேட்டு போன்றவை நைட்ரசனைக் கொண்டுள்ளன. தனிமநிலை நைட்ரசனில் வலிமையான முப்பிணைப்புகளும், ஈரணுமூலக்கூறுகளில் அனைத்திலும் இரண்டாவது வலிமையான பிணைப்பாகவும் கருதப்படுகிறது. N2 வை உபயோகமுள்ள சேர்மங்களாக மாற்ற முடியாமல் உயிரினம், தொழிற்சாலை இரு பிரிவுகளும் இதனால் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. ஆனால், அதேசமயத்தில் எரிதல், வெடித்தல், நைட்ரசன் சேர்மங்களை சிதைத்தல் போன்ற வேதியியல் செயல்முறைகளால் பயனுள்ளவகையில் அளப்பறிய ஆற்றலை பெற முடிகிறது. செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அமோனியாவும் நைட்ரேட்டுகளும் முக்கியமான உரவகைகளாகும். தண்ணிர் ஊற்றுகளை தூர்ந்து போகவைக்கும் மாசுபொருட்களில் ஒன்றாக நைட்ரேட்டுகள் கருதப்படுகின்றன.
உரங்கள் மற்றும் ஆற்றல் மூலங்களாக பயன்படுவதைத் தாண்டி கரிமச்சேர்மங்களின் பகுதிப்பொருளாக நைட்ரசன் விளங்குகிறது. உயர் வலிமை துணி மற்றும் உயர் பசையில் பயன்படும் சயனோஅக்ரிலேட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் கெவ்லார் இழையாகவும் நைட்ரசன் பயன்படுகிறது. மருந்தியல் துறையில் நுண்ணுயிர் கொல்லிகள் உட்பட ஒவ்வொரு முக்கிய மருந்திலும் நைட்ரசன் ஒரு முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது, மருந்துகள் போல தோற்றமளிக்கும் அல்லது இயற்கை நைட்ரசன் மூலக்கூறுகள் சுட்டி மூலக்கூறுகளாக உள்ளன: உதாரணமாக, கரிம நைட்ரேட்டுகள், நைட்ரோகிளிசரின், நைட்ரோபுருசைடு போன்றவை நைட்ரிக் ஆக்சைடாக வளர்சிதைமாற்றத்தின் போது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. காஃபின் மற்றும் மார்பின் அல்லது செயற்கை அம்படமைன்கள் போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நைட்ரஜன் மருந்துகள், கால்நடை நரம்புக்கடத்திகளின் ஏற்பிகளாக செயல்படுகின்றன.