![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Ammonia-2D-dimensions.png/640px-Ammonia-2D-dimensions.png&w=640&q=50)
அமோனியா
நச்சில்லா வளி, காரமணம் கொண்டது. வெடிமருந்து உரம் முதலியவை செய்யப்பயன்படுதல் / From Wikipedia, the free encyclopedia
நவச்சாரியம், நவச்சாரகம் அல்லது அமோனியா (Ammonia) என்பது ஒரு நைதரசன் அணுவுடன் மூன்று ஐதரசன் அணுக்கள் இணைந்திருக்கும் ஒரு சேர்மமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு NH3. அறை வெப்ப அழுத்தநிலைகளில், அமோனியா ஒரு வளிமமாகும். நச்சுத்தன்மையும் அரிப்புத்தன்மையும் கொண்ட இவ்வளிமம் ஒருவகை கடும் நாற்றம் (நெடி) கொண்டது. அமோனியா காற்றைவிட இலேசானது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
அசேன் Azane | |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
7664-41-7 | |||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 222 | ||
வே.ந.வி.ப எண் | BO0875000 | ||
| |||
பண்புகள் | |||
NH3 | |||
வாய்ப்பாட்டு எடை | 17.0306 g/mol | ||
தோற்றம் | நிறமற்ற, கடும் நெடி வீசும் வளிமம் | ||
அடர்த்தி | 0.6942 [2] | ||
உருகுநிலை | -77.73 °C (195.42 K) | ||
கொதிநிலை | -33.34 °C (239.81 K) | ||
89.9 g/100 ml at 0 °C | |||
காடித்தன்மை எண் (pKa) | 9.25 | ||
காரத்தன்மை எண் (pKb) | 4.75 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | εr | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.42 D | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீநேர்வு தரவல்ல வளிமம், காரத்தன்மையான, அரிக்கவல்ல பொருள் | ||
R-சொற்றொடர்கள் | R10, R23, R34, R50 (S1/2), S16, S36/37/39, S45, S61 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | None[3] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஹைட்ராக்ஸைடு (NH4OH) | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | அமோனியம் (NH4+) | ||
தொடர்புடையவை |
குளோரைடு (NH4Cl) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | ஹைட்ராசைன் ஹைட்ராசாயிக் காடி ஹைட்ரோசைலமைன் குளோரோமைன் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அமோனியா 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வேதிப்பொருள். உலகின் மொத்த உற்பத்தியில் எடையளவில் (டன்னளவில்) இரண்டாவதாக உள்ள வேதிப்பொருள்[4]. உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்களில் மொத்த மதிப்பில் (பணம்), முதல் இடம் வகிக்கின்றது[4]. 1980களின் துவக்கத்தில் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உறபத்தி செய்யப்பட்டது. அமோனியா பயிர்களுக்கு இடும் உர உற்பத்தியில் பயனாகும் ஒரு பொருள். பல்வேறு வகையான மருந்துப்பொருட்கள் உற்பத்தியிலும் அமோனியா பயன்படுகின்றது.