சூன் 9 (June 9) கிரிகோரியன் ஆண்டின் 160 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 161 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 205 நாட்கள் உள்ளன.
- 1672 – முதலாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1725)
- 1781 – ஜார்ஜ் ஸ்டீபென்சன், ஆங்கிலேயப் பொறியியலாளர், நீராவிப் பொறியைக் கண்டுபிடித்தவர் (இ. 1848)
- 1812 – யோகான் கோட்பிரீடு கல்லே, செருமானிய வானியலாளர் (இ. 1910)
- 1845 – நான்காம் மிண்டோ பிரபு, இந்தியாவின் 36வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1914)
- 1898 – பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர், தமிழகப் புலவர் (இ. 1977)
- 1917 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய வரலாற்றாளர் (இ. 2012)
- 1931 – நந்தினி சத்பதி, ஒடிசாவின் 8வது முதலமைச்சர் (இ. 2006)
- 1937 – இராமச்சந்திர காந்தி, இந்திய மெய்யியல் அறிஞர் (இ. 2007)
- 1943 – சி. மௌனகுரு, இலங்கை அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், கல்வியாளர்
- 1949 – கிரண் பேடி, இந்தியக் காவல்துறை அதிகாரி, செயற்பாட்டாளர்
- 1951 – டி. சகுந்தலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2014)
- 1951 – ஜேம்ஸ் நியூட்டன் ஹவார்ட், அமெரிக்க இசையமைப்பாளர், தயாரிப்பாளர்
- 1952 – யூசஃப் ரசா கிலானி, பாக்கித்தான் அரசியல்வாதி
- 1954 – எலிசபெத் மே, அமெரிக்க-கனடிய சுற்றுச்சூழலியலாளர், அரசியல்வாதி
- 1963 – ஜானி டெப், அமெரிக்க நடிகர்
- 1975 – ஆன்ட்ரூ சைமன்ஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2022)
- 1977 – அமீஷா பட்டேல், இந்திய நடிகை
- 1977 – உஸ்மான் அப்சால், பாக்கித்தானிய-ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
- 1981 – நேடலி போர்ட்மன், இசுரேலிய-அமெரிக்க நடிகை
- 1981 – அனுஷ்கா சங்கர், ஆங்கிலேய-இந்திய சித்தார் கலைஞர்
- 1985 – சோனம் கபூர், இந்திய நடிகை
- 68 – நீரோ, உரோமைப் பேரரசர் (பி. 37)
- 373 – சிரியனான எபிரேம், துருக்கிய இறையியலாளர் (பி. 306)
- 1716 – பண்டா சிங் பகதூர், இந்தியத் தளபதி (பி. 1670)
- 1834 – வில்லியம் கேரி, ஆங்கிலேய மதப்பரப்புனர் (பி. 1761)
- 1870 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1812)
- 1871 – அன்னா அட்கின்சு, ஆங்கிலேயத் தாவரவியலாளர், ஒளிப்படக் கலைஞர் (பி. 1799)
- 1897 – ஆல்வன் கிரகாம் கிளார்க், அமெரிக்க வானியலாளர் (பி. 1832)
- 1900 – பிர்சா முண்டா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1875)
- 1959 – அடால்ஃப் வின்டாசு, நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1876)
- 1970 – எம். ஐ. எம். அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1919)
- 1981 – குடந்தை ப. சுந்தரேசனார், தமிழகப் பண்ணாராய்ச்சியாளர் (பி. 1914)
- 1995 – கொகினேனி ரங்க நாயுகுலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1909)
- 2011 – மக்புல் ஃபிதா உசைன், இந்திய ஓவியர், இயக்குநர் (பி. 1915)
- 2013 – கே. டி. பிரான்சிஸ், இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1939)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5