கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி (Kotla Vijaya Bhaskara Reddy) (16 ஆகஸ்ட் 1920 – 27 செப்டம்பர் 2001) 1983 பின்னர் 1992 முதல் 1994 வரையிலும் ஐக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். ரெட்டி இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். மக்களவைக்கு ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சரவையில் அமைச்சராகவும் பல நாடாளுமன்றக் குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். 1999 தேர்தலில் தோல்வியடைந்த இவர், பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.[2] ஐதராபாத்தில் உள்ள ஐதராபாத்து தாவரவியல் பூங்கா இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி, ஐக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் 9வது முதலமைச்சர் ...
கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி | |
---|---|
![]() | |
ஐக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் 9வது முதலமைச்சர் | |
பதவியில் 9 அக்டோபர் 1992 – 12 டிசம்பர் 1994 | |
ஆளுநர் | கிருஷண் காந்த் |
முன்னையவர் | நெ. ஜனார்த்தன ரெட்டி |
பின்னவர் | என். டி. ராமராவ் |
பதவியில் 20 செப்டம்பர் 1982 – 9 ஜனவரி 1983 | |
ஆளுநர் | கே. சி. ஆபிரகாம் |
முன்னையவர் | பவனம் வெங்கடராமி ரெட்டி |
பின்னவர் | என். டி. ராமராவ் |
நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) | |
பதவியில் 1977–1979, 1984–1989, 1989–1991, 1991–1992, 1996–1998 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1920-08-16)16 ஆகத்து 1920
[1] அமகதாடு, லத்தகிரி கிராமம், கர்நூல் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 27 செப்டம்பர் 2001(2001-09-27) (அகவை 81) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கே. சியாமளா |
பிள்ளைகள் | இரு மகன்கள், மூன்று மகள்கள் |
முன்னாள் கல்லூரி | பெசன்ட் பிரம்மஞான சபைக் கல்லூரி, மதனப்பள்ளி மற்றும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை (தமிழ்நாடு) |
தொழில் | விவசாயி, வழக்கறிஞர், விளையாட்டு வீரர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர் |
மந்திரி சபை | மத்திய அமைச்சர், இந்திய அரசு (1983–1984 and 1991–1992) |
செயற்குழு | தலைவர், பொதுக் கணக்குக் குழு (1961-1962), உறுப்பினர், மதிப்பீடுகளுக்கான குழு (1977-1982), உறுப்பினர், துணைச் சட்டத்திற்கான குழு (1990-1991), உறுப்பினர், ஆலோசனைக் குழு, நீர்வள அமைச்சகம் (1990-1991) |
உடைமைத்திரட்டு | துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இந்தியா , சாலைப் போக்குவரத்து , தொழில் துறை, நிறுவன விவகாரங்கள் (1983–1984), சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் (1991–1992) |
மூடு