![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/72/Green_Bee-eater_%2528Merops_orientalis%2529_in_Hyderabad%252C_AP_W_IMG_1351.jpg/640px-Green_Bee-eater_%2528Merops_orientalis%2529_in_Hyderabad%252C_AP_W_IMG_1351.jpg&w=640&q=50)
ஐதராபாத்து தாவரவியல் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி தாவரவியல் பூங்கா அல்லது ஐதராபாத் தாவரவியல் பூங்கா (Hyderabad Botanical Garden) என்பது ஒரு தாவரவியல் பூங்கா ஆகும். இது தெலங்காணாவின் ஐதராபாத்தின் கொத்தகுடா என்ற இடத்தில் அமைந்துள்ளது. [1] மாணவர்களுக்குக் கல்வி மற்றும் விழிப்புணர்வுணர்வினையும், ஆராய்ச்சியாளர் மற்றும் தாவரவியலாளர்கள், விலங்கியல் வல்லுநர்களுக்கு "வாழ்க்கை ஆய்வகமாக" இருப்பதற்காக இந்தப் பூங்கா தெலங்காணா மாநில வனத்துறையால் உருவாக்கப்பட்டது. இது ஐதராபாத் தொடருந்து நிலையத்திலிருந்து ஐதராபாத்-மும்பை பழைய நெடுஞ்சாலையில் 16 கிலோமீட்டர் (10 மைல்) தொலைவில் உள்ள மாதாபூரின் அருகில் உள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கோட்லா விஜய பாஸ்கர ரெட்டியின் பெயர் இந்தப் பூங்காவுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் தாவரவியல் பூங்கா, வகை ...
தாவரவியல் பூங்கா | |
---|---|
![]() தாவரவியல் பூங்காவில்பச்சைப் பஞ்சுருட்டான் | |
வகை | நகரப் பூங்கா |
அமைவிடம் | கொத்தகுடா, ஐதராபாத்து |
ஆள்கூறு | 17.455°N 78.357°E / 17.455; 78.357 |
பரப்பு | 270 ஏக்கர் |
நிலை | அனித்து நாட்களிலும் திறந்திருக்கும் |
மூடு