இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes)[2] என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டன.
மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என். எம். ஆர். சுப்பராமன் போன்றவர்கள், நாடு முமுவதும் அரிசன சேவை சங்கம் என்ற அமைப்பை நிறுவி, ஹரிசனங்களின் கல்வி மற்றும் சமூகத் தரம் மேம்பட உண்டு உறைவிடப்பள்ளிகள் மற்றும் கோயிலில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தினர்.
பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களை இந்திய அரசியலமைப்பு அங்கீகரித்துள்ளது.[3]
இந்திய அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, ஆண்டு 1950இன் படி, இந்தியாவில் 1,108 பட்டியல் சாதிகளையும்,[4] 744 பட்டியல் பழங்குடியினங்களையும் அடையாளம் கண்டுள்ளது.[5]
பட்டியல் மக்கட்தொகைக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும் பட்டியல் சாதி மக்களுக்கு 15% இட ஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடும் வழங்கியுள்ளது.[6][7]
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் இந்திய அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்றத்திற்கு, பட்டியல் சாதியினர்க்கு 79 தொகுதிகளும், பட்டியல் பழங்குடியினர்க்கு 40 தேர்தல் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.[8] மேலும் இந்திய மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு போதிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.[9]
பட்டியல் சாதி மக்கள், பட்டியல் பழங்குடி மக்களின் நலன் காக்க இந்திய அரசியலமைப்பு மூன்று உத்திகளை இந்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வலியுறுத்துகிறது.[10] அவைகள்:
பட்டியல் மக்களின் நலன் காத்திட இந்திய அரசு, அரசியல் அமைப்பு சட்டப்படி இரண்டு சட்டபூர்வமான ஆணையங்கள் ஏற்படுத்தியுள்ளது.
பட்டியல் மக்களின் மனித உரிமைகளை காத்திட, இவ்விரு ஆணையத்தின் தலைவர்கள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிமுறை உறுப்பினர்களாக செயல்படுகின்றனர்.
இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1990இன் படி, (Constitution (Scheduled Castes) Orders (Amendment) Act, 1990) பட்டியல் சாதியினர் இந்து, சீக்கியம், அல்லது பௌத்த சமயத்தை மட்டும் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.[18][19] பட்டியல் பழங்குடியினர்கள் எச்சமயத்தையும் சார்ந்தவராகவும் இருக்கலாம்.[20][21] 61வது சுற்று தேசிய புள்ளியியல் சர்வே அறிக்கையின்படி, இந்தியாவில் பௌத்த சமய மக்கட்தொகையில் 90%, சீக்கிய சமய மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கும், கிறித்தவ மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பட்டியல் பழங்குடியினர் உள்ளனர்.[22][23]
சமயத்தவர் | பட்டியல் சாதியினர் (SC) | பட்டியல் பழங்குடியினர் (ST) | இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) | மற்றவர்கள் | மொத்தம் |
---|---|---|---|---|---|
இந்து | 22.2 | 9 | 42.8 | 26.0 | 100 |
முஸ்லீம் | 0.8 | 0.5 | 39.2 | 59.5 | 100 |
கிறித்தவர் | 9.0 | 32.8 | 24.8 | 33.3 | 100 |
சீக்கியர் | 30.7 | 0.9 | 22.4 | 46.1 | 100 |
சமணர் | 0.0 | 2.6 | 3.0 | 94.3 | 100 |
பௌத்தர் | 89.5 | 7.4 | 0.4 | 2.7 | 100 |
பார்சி | 0.0 | 15.9 | 13.7 | 70.4 | 100 |
பிறர் | 2.6 | 82.5 | 6.2 | 8.7 | 100 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.