தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட ஒரு சாதியினர் From Wikipedia, the free encyclopedia
மாதிகா (Madiga) இனத்தவர்கள் தெலுங்கானா மக்கள் தொகையில் 12% பேர் உள்ளனர்.[1][2] தெலுங்கானாவில் பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்களே. மாதிகா இனத்தவர்கள் தாய் மொழி தெலுங்கு ஆகும்.[3][4][5] இவர்கள் தங்களை அருந்ததியலூ என்று அழைப்பதையே பெருமைப்படுகிறார்கள்.[6][7][8]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா | |
மொழி(கள்) | |
தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
அருந்ததியர், ஜம்புவுலு |
தெலுங்கானா மாநில பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் 61% பேர் மாதிகா இனத்தவர்கள் உள்ளனர்.[9][10] அடுத்ததாக ஆந்திரா பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் 42% பேர் மாதிகா இனத்தவர்கள் உள்ளனர். கர்நாடகாவிலும் தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவர்கள் வசிக்கின்றனர். ஆந்திரா மாநில எல்லையை ஒட்டிய கர்நாடகா மாவட்டங்களில் பெரும் அளவு தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவர்கள் வசிக்கின்றனர்[11] [12]சென்னை மாகாணத்தில் 1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 130,386 பேர் மாதிகா இனத்தவர்கள் இருந்தனர்.[13] 1931 கணக்கெடுப்பின்போது சென்னை மாகாணத்தில் 17,396 பேர் மாதிகா என்ற பெயரைப் புறக்கணித்துவிட்டு அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்தனர் [14].தற்போது ஜனார்த்தனன் குழு அறிக்கை (2008) படி தமிழகத்தில் மாதிகா இனத்தவர்கள் 5,103 பேர் உள்ளனர். அதாவது மாதிகா இனத்தை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் மாதிகா என்ற பெயரைப் புறக்கணித்துவிட்டு தங்களை அருந்ததியர் என்ற பெயரிலேயே பதிவு செய்ததால் 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 7,71,659 பேர் அருந்ததியர்கள் உள்ளனர் [15].அருந்ததியர் என்ற பெயர் 1920-ஆம் ஆண்டுக்குப்பின் உருவானது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.