From Wikipedia, the free encyclopedia
2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் (2015 Sri Lankan parliamentary election) 2015 ஆகத்து 17 இல் நடைபெற்றது. 10 மாதங்களுக்கு முன்கூட்டியே நடைபெற்ற இத்தேர்தலில் இலங்கையின் 15வது நாடாளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவாகவுள்ளனர்.[3][4][5] 2015 சூன் 26 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.[6] தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2015 சூலை 6 முதல் 13 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[7][8][9][10]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 11,166,975 (77.66%) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி[1] 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியது.[11] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும்,[11] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் கைப்பற்றின.[11] மீதியான எட்டு இடங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (6), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[12] (1) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (1) ஆகியன கைப்பற்றின.
கடைசி நாடாளுமன்றத் தேர்தல் 2010 ஏப்ரலில் நடைபெற்றது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளைப் போரில் வெற்றி கொண்ட பின்னர் இத்தேர்தலில் 144 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்தது.[13] 2010 செப்டம்பரில் சில சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் அரசமைப்புச் சட்டத்தின் 18வது திருத்தத்தை நிறைவேற்றியது. அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் நிறைவேற்றதிகாரங்களை அதிகரிக்கவும் அரசுத்தலைவருக்கான அதிகபட்சம் இரண்டு தவணைக்காலங்களை நீக்கவும் இத்திருத்தம் வழிவகுத்தது.[14] அத்துடன் தலைமை நீதிபதியை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவியில் இருந்து அகற்றியது.[15]
அரசுத்தலைவர் ராசபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்கூட்டியே 2014 நவம்பரில் அரசுத்தலைவர் தேர்தலை நடத்த அறிவித்தார்.[16] ராசபக்சவின் அமைச்சரவையில் மூத்த உறுப்பினராக இருந்த மைத்திரிபால சிறிசேன எவரும் எதிர்பார்க்காத நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[17] 2015 சனவரியில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் சிறிசேன ராசபக்சவை வென்று புதிய அரசுத் தலைவர் ஆனார்.[18] சிறிசேன எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசை அமைத்தார்.[19] 2015 மார்ச்சில் தேசிய அரசாங்கம் ஒன்றை அறிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முக்கிய கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரை அமைச்சரவையில் சேர்த்தார்.[20]
தனது தேர்தல் அறிக்கையில் மைத்திரிபால சிறிசேன 100-நாள் வேலைத்திட்டத்தை அறிவித்து, அதன் பின்னர் நாடாளுமன்றம் 2015 மார்ச் 27 இல் கலைக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.[21] தனது 100-நாள் திட்டத்திற்கு அரசில் இருந்த ராசபக்சவின் ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார். ஆனாலும், அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைக்கவும், பதவிக்காலத்தை இரண்டு தவணைகளுக்குக் குறைக்கவும் வழிவகுக்கக்கூடிய 19வது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினார்.[22] சிறிசேன 2015 சூன் 26 அன்று நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.[23]
பல-அங்கத்தவர்கள் கொண்ட 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் போட்டியிடும் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[24][25] ஏனைய 29 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.[26]
18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 அன்று எந்த இடத்தில் சாதாரண வதிவாளராக இருக்கின்றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம்.[27] தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமல்ல. ஒவ்வொரு வாக்காளரும் தத்தம் ஆளடையாளத்தை செல்லுபடியான ஆளடையாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூபிக்க வேண்டும்.[27] வாக்காளர் ஒருவர் தமக்கு விருப்பமான ஒரு கட்சிக்கும், அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக்கூடியது மூவருக்கு தனது விருப்பத்தேர்வுகளையும் இடலாம். ஆனாலும் வேட்பாளர் விருப்பத்தேர்வு கட்டாயமானது அல்ல.[27]
தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2015 சூலை 6 முதல் 13 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.[3][10] தபால் மூல வாக்கெடுப்பு 2015 ஆகத்து 5 முதல் ஆகத்து 6 வரை நடைபெற்றன. பாடசாலை ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் அரச ஊழியர்கள் 2015 ஆகத்து 3 இல் தபால் மூலம் வாக்களித்தனர்.[28][29] பொதுமக்கள் ஆகத்து 17 திங்கட்கிழமை அன்று வாக்களித்தனர்.[7]
மாகாணம் | தேர்தல் மாவட்டம் | ஒதுக்கப்பட்ட இடங்கள்[30] |
---|---|---|
வடக்கு | யாழ்ப்பாணம் | 07
06 |
வடமத்தி | அனுராதபுரம் | 09
05 |
வடமேல் | குருநாகல் | 15
08 |
கிழக்கு | மட்டக்களப்பு | 05
07 04 |
மத்திய | கண்டி | 12
05 08 |
மேல் | கொழும்பு | 19
18 10 |
ஊவா | பதுளை | 08
05 |
சப்ரகமுவ | இரத்தினபுரி | 11
09 |
தென் | காலி | 10
08 07 |
மொத்தம் | 196 |
நாடாளுமன்றத்தின் 196 இடங்களுக்கு 21 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் இருந்து 3,653 பேரும், சுயேட்சைக் குழுக்களில் இருந்து 2,498 பேரும் போட்டியிட்டனர்.[10][31] 12 கட்சிகள், 24 குழுக்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.[32] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆகியன அனைத்து 22 மாவட்டங்களிலும் போட்டியிட்டன.[10]
2015 சூன் 29 அன்று ஐதேக ஆதரவாளர் ஒருவர் இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகலையில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[39][40] அனுராதபுரம், குருணாகல், மகியங்கனை, வெலிகமை ஆகிய இடங்களில் ஐதேக, ஐமசுகூ ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்புகள் இடம்பெற்றன.[41][42] 2015 சூலை 31 இல் கொட்டாஞ்சேனையில் ஐதேக வேட்பாளரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க கலந்து கொண்ட கூட்டம் ஒன்றை நோக்கி இரண்டு வாகனங்களில் வந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.[43][44] 2015 ஆகத்து 15 அன்று மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி வீதி ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[45]
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 45.66% வாக்குகளுடன் 106 இடங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 42.38% வாக்குகளுடன் 95 இடங்களைக் கைப்பற்றியது.[46][47] ராசபக்ச பிரதமராக வரும் தனது முயற்சியைக் கைவிட்டு தோல்வியை ஒப்புக் கொண்டார்.[48][49]
ஐதேக தலைமையிலான நஐதேமு ஆட்சி அமைக்க 7 இடங்கள் தேவையாக இருந்தது.[50][51] 2015 ஆகத்து 20 ஆம் நாள் இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசு அமைக்க ஒப்புக் கொண்டது.[52][53] ரணில் விக்கிரமசிங்க 2015 ஆகத்து 21 அன்று இலங்கையின் 22வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.[54][55] புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, ஐதேக பொதுச் செயலர் கபீர் ஹாசிம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.[56][57]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இருக்கைகள் | |||
---|---|---|---|---|---|---|
மாவட்டம் | தேசியப் பட்டியல் | மொத்தம் | ||||
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி[58]
|
5,098,916 | 45.66% | 93 | 13 | 106 | |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
|
4,732,664 | 42.38% | 83 | 12 | 95 | |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[63] | 515,963 | 4.62% | 14 | 2 | 16 | |
மக்கள் விடுதலை முன்னணி | 543,944 | 4.87% | 4 | 2 | 6 | |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[12] | 44,193 | 0.40% | 1 | 0 | 1 | |
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 33,481 | 0.30% | 1 | 0 | 1 | |
சுயேட்சைகள் | 42,828 | 0.38% | 0 | 0 | 0 | |
அகில இலங்கை மக்கள் காங்கிரசு[59] | 33,102 | 0.30% | 0 | 0 | 0 | |
சனநாயகக் கட்சி | 28,587 | 0.26% | 0 | 0 | 0 | |
பௌத்த மக்கள் முன்னணி
|
20,377 | 0.18% | 0 | 0 | 0 | |
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி[64] | 18,644 | 0.17% | 0 | 0 | 0 | |
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[60] | 17,107 | 0.15% | 0 | 0 | 0 | |
முன்னிலை சோசலிசக் கட்சி | 7,349 | 0.07% | 0 | 0 | 0 | |
ஐக்கிய மக்கள் கட்சி | 5,353 | 0.05% | 0 | 0 | 0 | |
ஏனையோர் | 24,467 | 0.22% | 0 | 0 | 0 | |
தகுதியான வாக்குகள் | 11,166,975 | 100.00% | 196 | 29 | 225 | |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 517,123 | |||||
மொத்த வாக்குகள் | 11,684,098 | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 15,044,490 | |||||
வாக்குவீதம் | 77.66% |
(நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி)
தேர்தல் மாவட்டம் | மாகாணம் | ஐதேக | ஐமசுகூ | ததேகூ | மவிமு | ஏனையோர் | மொத்தம் | % | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | |||
யாழ்ப்பாணம் | வடக்கு | 20,025 | 6.67% | 1 | 17,309 | 5.76% | 0 | 207,577 | 69.12% | 5 | 247 | 0.08% | 0 | 55,148 | 18.36% | 1 | 300,309 | 100.00% | 7 | 61.56% |
வன்னி | வடக்கு | 39,513 | 23.98% | 1 | 20,965 | 12.72% | 1 | 89,886 | 54.55% | 4 | 876 | 0.53% | 0 | 13,535 | 8.21% | 0 | 164,775 | 100.00% | 6 | 71.89% |
திருகோணமலை | கிழக்கு | 83,638 | 46.36% | 2 | 38,463 | 21.32% | 1 | 45,894 | 25.44% | 1 | 2,556 | 1.42% | 0 | 9,845 | 5.46% | 0 | 180,396 | 100.00% | 4 | 74.34% |
மட்டக்களப்பு | கிழக்கு | 32,359 | 13.55% | 1 | 32,232 | 13.49% | 0 | 127,185 | 53.25 | 3 | 81 | 0.03% | 0 | 38,477 | 16.11% | 1 | 238,846 | 100.00% | 5 | 69.11% |
அம்பாறை | கிழக்கு | 151,013 | 46.30% | 4 | 89,334 | 27.39% | 2 | 45,421 | 13.92% | 1 | 5,391 | 1.65% | 0 | 35,037 | 10.74% | 0 | 326,195 | 100.00% | 7 | 73.99% |
பொலன்னறுவை | வடமத்திய | 118,845 | 50.26% | 3 | 103,172 | 43.63% | 2 | - | - | - | 13,497 | 5.71% | 0 | 948 | 0.40% | 0 | 236,462 | 100.00% | 5 | 79.81% |
அனுராதபுரம் | வடமத்திய | 213,072 | 44.82% | 4 | 229,856 | 48.35% | 5 | - | - | - | 28,701 | 6.04% | 0 | 3,755 | 0.79% | 0 | 475,383 | 100.00% | 9 | 79.13% |
பதுளை | ஊவா | 258,844 | 54.76% | 5 | 179,459 | 37.97% | 3 | - | - | - | 21,445 | 4.54% | 0 | 12,934 | 2.74% | 0 | 472,682 | 100.00% | 8 | 80.07% |
மொனராகலை | ஊவா | 110,372 | 41.97% | 2 | 138,136 | 52.53% | 3 | - | - | - | 13,626 | 5.18% | 0 | 855 | 0.33% | 0 | 262,988 | 100.00% | 5 | 80.13% |
கேகாலை | சபரகமுவா | 247,467 | 49.52% | 5 | 227,208 | 45.47% | 4 | - | - | - | 18,184 | 3.64% | 0 | 6,789 | 1.37% | 0 | 499,694 | 100.00% | 9 | 79.81% |
இரத்தினபுரி | சபரகமுவா | 284,117 | 44.94% | 5 | 323,636 | 51.19% | 6 | - | - | - | 21,525 | 3.40% | 0 | 2,918 | 0.46% | 0 | 632,196 | 100.00% | 11 | 80.88% |
காலி | தெற்கு | 265,810 | 42.48% | 4 | 312,518 | 50.07% | 6 | - | - | - | 37,778 | 6.05% | 0 | 8,735 | 1.40% | 0 | 624,211 | 100.00% | 10 | 78.00% |
அம்பாந்தோட்டை | தெற்கு | 130,433 | 35.65% | 2 | 196,980 | 53.84% | 4 | - | - | - | 36,527 | 9.98% | 1 | 1,889 | 0.52% | 0 | 365,829 | 100.00% | 7 | 81.20% |
மாத்தறை | தெற்கு | 186,675 | 39.08% | 3 | 250,505 | 52.44% | 5 | - | - | - | 35,270 | 7.38% | 0 | 5,277 | 1.10% | 0 | 477,717 | 100.00% | 8 | 78.61% |
கொழும்பு | மேற்கு | 640,743 | 53.00% | 11 | 474,063 | 39.21% | 7 | - | - | - | 81,391 | 6.73% | 1 | 12,702 | 1.05% | 0 | 1,208,899 | 100.00% | 19 | 78.93% |
கம்பகா | மேற்கு | 577,004 | 47.13% | 9 | 549,958 | 44.92% | 8 | - | - | - | 87,880 | 7.18% | 1 | 9,507 | 0.78% | 0 | 1,224,401 | 100.00% | 18 | 78.21% |
களுத்துறை | மேற்கு | 310,234 | 44.47% | 4 | 338,801 | 48.56% | 5 | - | - | - | 38,475 | 5.52% | 1 | 10,125 | 1.45% | 0 | 697,635 | 100.00% | 10 | 80.13% |
புத்தளம் | வடமேற்கு | 180,185 | 50.40% | 5 | 153,130 | 42.83% | 3 | - | - | - | 12,211 | 3.42% | 0 | 11,982 | 3.35% | 0 | 357,508 | 100.00% | 8 | 68.83% |
குருணாகலை | வடமேற்கு | 441,275 | 45.85% | 7 | 474,124 | 49.26% | 8 | - | - | - | 41,077 | 4.27% | 0 | 5,947 | 0.62% | 0 | 962,423 | 100.00% | 15 | 79.63% |
கண்டி | மத்திய | 440,761 | 55.57% | 7 | 309,152 | 38.98% | 5 | - | - | - | 30,669 | 3.87% | 0 | 12,518 | 1.58% | 0 | 793,100 | 100.00% | 12 | 79.13% |
மாத்தளை | மத்திய | 138,241 | 49.84% | 3 | 126,315 | 45.54% | 2 | - | - | - | 10,947 | 3.95% | 0 | 1,877 | 0.68% | 0 | 277,380 | 100.00% | 5 | 78.73% |
நுவரெலியா | மத்திய | 228,920 | 59.01% | 5 | 147,348 | 37.98% | 3 | - | - | - | 5,590 | 1.44% | 0 | 6,088 | 1.57% | 0 | 387,946 | 100.00% | 8 | 78.77% |
தேசியப் பட்டியல் | 13 | 12 | 2 | 2 | 29 | |||||||||||||||
மொத்தம் | 5,098,916 | 45.66% | 106 | 4,732,664 | 42.38% | 95 | 515,963 | 4.62% | 16 | 543,944 | 4.87% | 6 | 275,488 | 2.47% | 2 | 11,166,975 | 100.00% | 225 | 74.23% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.