Remove ads
From Wikipedia, the free encyclopedia
இலங்கை வர்த்தமானி (The Sri Lanka Gazzette) அல்லது அரச வர்த்தமானி என இலங்கைத் தமிழ் ஊடகங்களில் அறியப்பட்ட சாதாரண மக்களினால் கசெட் அல்லது கெசட் என்றவாறு அழைக்கப்படும் வர்த்தமானப் பத்திரிகை இலங்கை அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், அமைச்சர்கள், செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல், ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளியிடல் ஆகியவற்றுக்குக்குப் பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும். இதன் முதலாவது பதிப்பானது மார்ச் 15, 1802 இல் வெளியிடப்பட்டதுடன்[1] இது 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து 15011 ஆவது பதிப்புடன் இடைநிறுத்தப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் 1 ஆவது இலக்கத்துடன் மீள் ஆரம்பிக்கபட்டது [2]. இது சிங்களம், தமிழ்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும்,பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும்.
இலங்கை வர்த்தமானி (சிறப்பு) | |
வகை | வர்த்தமானி |
---|---|
வெளியீட்டாளர் | இலங்கை அரசு அரசு அச்சகத் திணைக்களம் |
நிறுவியது | 1802 |
மொழி | ஆங்கிலம், சிங்களம், தமிழ் |
தலைமையகம் | 118, டொக். டனிஸ்டர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 8, இலங்கை |
இணையத்தளம் | documents.gov.lk |
பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை 1796 ஆம் ஆண்டில் கைப்பற்றினர்.[3] தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பிரித்தானிய அரசின் செய்திகளைக் கொண்டு செல்வதற்காக 1802 ஆம் ஆண்டில் இலங்கை அரச வர்த்தமானி (The Ceylon Government Gazette) என்ற பத்திரிகையை முதன் முதலாக ஆங்கிலத்தில் வெளியிட்டனர். தமது குடியேற்ற நாடுகளில் இவ்வாறான பத்திரிகைகள் பிரித்தானிய அரசால் வெளியிடப்பட்டு வந்துள்ளன. 1784 இல் கல்கத்தா வர்த்தமானி (Calcutta Gazette), 1780 இல் சென் லூசியா வர்த்தமானி (St. Lucia Gazette), 1800 இல் கேப்டவுன் வர்த்தமானி (Cape Town Gazette), ஆப்பிரிக்க வர்த்தமானி (African Advertiser) போன்றவை இவற்றில் சிலவாகும்.[4] இலங்கை வர்த்தமானியின் முதல் இதழ் 1802 மார்ச்சு 15 இல் வெளிவந்தது.[5] இது டச்சு இலங்கைக் காலத்தில் 1737 இல் நிறுவப்பட்ட பதிப்பகத்தில் பிரான்சு டி புருயின் என்பவரால் அச்சிடப்பட்டது.[6][7] இதன் தமிழ்ப் பதிப்பு 1806 இலும் சிங்களப் பதிப்பு 1814 இலும் ஆரம்பிக்கப்பட்டது.[1]
1972 ஆம் ஆண்டில் இலங்கையில் பதவியில் இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசு இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை அறிவித்ததோடு இலங்கை மேலாட்சியை இல்லாதொழித்தார். இதனையடுத்து அரச வர்த்தமானி 15,011 வது இதழுடன் நிறுத்தப்பட்டது. பின்னர் பதவிக்கு வந்த செயவர்தனா அரசு 1978 இல் புதிய அரசியலமைப்பை நிறுவியதை அடுத்து வர்த்தமானி மீண்டும் வெளியிடப்பட்டது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.