இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885–இல் தொடங்கப்பட்ட இக்கட்சி இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் | |
---|---|
भारतीय राष्ट्रीय कांग्रेस | |
தலைவர் | மல்லிகார்ஜுன கார்கே |
நிறுவனர் | |
நாடாளுமன்ற குழுத்தலைவர் | சோனியா காந்தி |
மக்களவைத் தலைவர் | அதிர் ரஞ்சன் சௌத்திரி |
மாநிலங்களவைத் தலைவர் | மல்லிகார்ஜுன கார்கே |
தொடக்கம் | 28 திசம்பர் 1885 |
தலைமையகம் | 24, அக்பர் தெரு, புது தில்லி 110 001 |
இளைஞர் அமைப்பு | இளைஞர் காங்கிரசு |
பெண்கள் அமைப்பு | மகிளா காங்கிரசு |
உறுப்பினர் | ~20 மில்லியன்[1] |
கொள்கை |
|
நிறங்கள் |
|
இ.தே.ஆ நிலை | தேசியக்கட்சி[2] |
கூட்டணி |
|
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 101 / 543 [3](தற்போது (இந்தியா கூட்டணி) சார்ந்த 234 உறுப்பினர்கள்)
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 30 / 245 }[4](தற்போது 243 உறுப்பினர்கள்)
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவை) | 686 / 4,036
(தற்போது 4025 உறுப்பினர்கள் 11 காலியிடங்கள்) |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டமன்ற மேலவை) | 59 / 426
(தற்போது 390 உறுப்பினர்கள் 36 காலியிடங்கள்) |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
வரலாறு
இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
விடுதலைக்கு முன்பான காலப் பகுதி
1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 திசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
இதன் இரண்டாம் கூட்டம் 1886 திசம்பர் 27-ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.
முன்றாவது மாநாடு சென்னையில் 1887 திசம்பர் 27-ல் நடைபெற்றது.
பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரசின் கொள்கையில் மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907 -ல் காங்கிரசில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரசு இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது. இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.
இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரசு கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை பட்டாபி சித்தராமையா எழுதி உள்ளார். இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டுள்ளார். உமேசு சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory"-யில் கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "ஆலன் ஆக்ட வின் ஹியூம் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.
காந்தியின் கால பகுதி
காந்தி 1915 ல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் காந்தியின் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். திரும்பர் 1917ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக காந்தி ஓராண்டிற்குத் தெரிவானார்.
விடுதலைக்கு பிந்தைய காலப் பகுதி
இந்திரா காந்தி காலப் பகுதி
- நேருவின் மறைவுக்குப் பின் இவர் லால் பகதூர் சாசுத்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சராகப் பணியாற்றினார். லால் பகதூர் சாசுத்திரியின் திடீர் மறைவை ஒட்டிப் பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் கு. காமராசின் முயற்சியும் காரணமாகும். பின் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாகக் கூறி காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரிக் கொள்கையுடன் இருந்த அவர்கள் பொருளாதாரக் திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இதனால் காங்கிரசு இரு குழுக்களாக இந்திரா காங்கிரஸ் ,எனவும் நிறுவன காங்கிரசு எனவும் பிரிந்தது.மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசியக் காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர்க் குழுவான நிறுவன காங்கிரசு தனி கட்சியானது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் பசுமைப் புரட்சி நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்று வங்காள தேசம் உருவாகக் காரணமாக இருந்தார். 1974ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார்.
- இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1971 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற்றுப் பிரதமரான போதிலும் காங்கிரஸ் கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல மாநில கட்சிகளின் ஆதரவு அளித்தனர்.
- அரசாங்க அதிகாரிகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி கொண்ட தவறான முறைகேடு செயல்களால். நீதிமன்றம் இந்திரா காந்திக்கு எதிராக பிரதமர் பதவியில் இருந்து விலகி சிறை தண்டனை பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
- இந்திரா காந்தி தான் மீதுள்ள தவறுகளை மறைப்பதற்கு இந்திய நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார்.
- ஆனால் அதை காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும் தலைவர்களும் அக்கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுத்த சில கட்சிகளும் இணைந்து பலமான எதிர்கட்சியான பாரதிய ஜன சங்கம், பாரதிய லோக் தளம் போன்ற கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஜனதா கட்சி என்ற ஒரு புதிய கட்சியை உருவாக்கினார்.
- 1977 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முதலாக காங்கிரஸ் கட்சியையும் இந்திரா காந்தியையும் தொற்கடிக்கபட்டு ஜனதா கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
- 1980 ஆம் ஆண்டு எதிர்கட்சியான ஜனதா கட்சியில் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் மூன்றே வருடங்களில் ஆட்சி கவிழ்ந்தது.
- பின்பு 1980 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இந்திரா காந்தி மூன்றாவது முறையாக பிரதமரானார்.
- ஆனால் அக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அவர்கள் முந்தைய ஆட்சி காலத்தில் வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்க்கு கிழக்கு பாகிஸ்தான் என்ற பங்களாதேஷ் தனிநாடு பெற்று கொடுத்ததை போல் பஞ்சாப் தனிநாடு சுதந்திரம் கேட்டு சீக்கியர்கள் காலிஸ்தான் அமைப்பை கொண்டு ஆயுதம் ஏந்திய போராடிய போராளிகள் இந்திரா காந்தி நோக்கி பஞ்சாப் தனிநாடு கேட்டு பெரும் போராட்டம் செய்தனர்.
- ஆனால் பஞ்சாப் தனிநாடு கேட்டு போராடிய சில சீக்கிய போராளிகளை இந்திரா காந்தி வன்மையாக கண்டித்தார். சீக்கியர்களின் புனித வழிபாட்டு தலமான அமிர்தசரஸ் பொற்கோயில்க்குள் இந்திய ராணுவ படையை ஏவி சில காலிஸ்தான் போராளிகளை கொன்ற கோபத்தால்.
- ஒட்டுமொத்த பஞ்சாப் சீக்கியர்களின் கோபம் பிரதமர் இந்திரா காந்தி நோக்கி இருந்ததால். அவரது மெய்க்காப்பாளர் ஒருவரால் இந்திரா காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சின்னம்
- பூட்டிய இரட்டை மாடுகள் இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது.
- இதை எதிர்த்து ஸ்தாபன காங்கிரசு (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.[5][6]
- இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதையடுத்து.
- ஆளும் எதிர்கட்சியான ஜனதா கட்சி 1979ல் இரண்டாக பிளவுபட்டது. இதில் ஜனதா கட்சி பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் செயல்பட்டது.
- ராஜ் நாராயணன் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி சார்பாக சரண் சிங் பிரதமராக பதவி வகித்தார். அதற்கு இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சரண் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். பிரதமர் சரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது.
- பின்பு சரண் சிங் அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதால். இது பின்பு சரண் சிங் தலைமையில் ஜனதா கட்சி (எஸ்) என அழைக்கப்பட்டது.
- பின்பு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது.
- இந்த கை சின்னம் ஆனது காங்கிரஸ் கட்சியின் பிரதான தேர்தல் சின்னமாக மாறியது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிற மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்றுள்ளது.[7]
கொள்கை மாற்றம்
- காங்கிரஸ் கட்சி இந்தியாவிற்கு அகிம்சா முறையில் சுதந்திரம் பெற்று கொடுத்த சோசலிசம் கட்சி என்று பார்த்தாலும் அதன் அடிப்படை கொள்கையானது இந்தியாவின் அடிப்படை மதமான இந்து மதம் சார்ந்த இந்து தேசியம் கொள்கை உடையது.
- ஆனால் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் நேருவின் மரணத்திற்கு பிறகு அவரது மகள் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்த போது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு எதிராக பல செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதும் வாரிசு அரசியல் சர்வதிகார போக்கில் இந்திரா காந்தி நடந்து கொண்டதால், காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு காமராஜர் தலைமையில் நிறுவன காங்கிரஸ் என்றும் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரசு என்று செயல்பட்டபோது பிரதமர் இந்திரா காந்தி தனது கட்சியின் ஆட்சிக்கு பிற கட்சிகளின் ஆதரவு பலத்தை பெறுவதற்கு தனது கட்சியின் கொள்கைகளான சமூக மக்களாட்சி, பழமைவாதம், இந்து தேசியம் கொள்கை உடன் மதச்சார்பின்மை என்ற கொள்கையை சேர்த்து கொண்டு அன்றைய காங்கிரசின் பிரதான எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு அவ்வாறு இந்திரா காந்தி கொள்கை சமரசம் செய்து கொண்டார்.
மாநில அரசுகளில் காங்கிரஸ்
- இந்தியாவில் தற்போது காங்கிரஸ் கட்சி இமாச்சல பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நேரடியாக ஆளும் கட்சியாக உள்ளது.
- மேலும் தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் அசாத்தியமான வெற்றிக்கு காரணமானது கடந்த 2014 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி அவர்கள் அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கின மக்களின் வெகுநாள் கோரிக்கை போராட்டமான தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை ஏற்று ஆந்திரா பிரதேசத்தில் இருந்து வடக்கு மாகாணமான தெலுங்கானாவை தனி மாநிலமாக அங்கிகாரம் கொடுத்ததால். தற்போது காங்கிரஸ் கட்சி பலமான வெற்றி பெற்றுள்ளது.
- அதனால் முதல் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் 10 வருடங்கள் கழித்து காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையோடு அம்மாநில மக்கள் வெற்றி பெற வைத்து சோனியா காந்தியை அன்னை பராசக்தியாகவும், மகாகாளி, துர்காதேவியாக போற்றி வணங்கி வருகின்றனர்.
- மேலும் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி அம்மாநில கட்சிகளுடன் கூட்டணியில் ஆட்சி செய்துவருகிறது.
- தற்போது ஜம்மு காஷ்மீரில் 10 வருட காலம் மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தபடாமல் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தொடர் வெற்றி பெற்று இந்தியாவை ஆளும் பாஜகவின் இரண்டாவது ஆட்சி காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது ஆர்எஸ்எஸ்சின் உயிர்நாடி கொள்கையான ஜம்மு காஷ்மீர் தனி மாநில சிறப்பு உரிமை அந்தஸ்து 370 நீக்கப்பட்டு நடந்த முதல் மாநில தேர்தலான 2024 ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி–காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியே வெற்றி பெற்றது.
- மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமுள்ள 114 சட்டமன்றத் தொகுதியில் 90 தொகுதிகளிலே தேர்தல் நடத்தப்பட்டு அதில் பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றிய போதிலும் மீதமுள்ள 24 சட்டமன்றத் தொகுதியானது பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருப்பதால் தற்போது அங்கு தேர்தல் நடத்தாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- அதை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி செய்து வந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் கடந்த ஆட்சி காலத்தில் செய்த சொத்து குவிப்பு ஊழல் வழக்கின் விசாரணையில் சிறை சென்று மீண்டும் வந்து முதல்வரான பிறகும் எதிர்கட்சி பாஜகவினரால் பல அவதூறுகள் கூறப்பட்ட போதிலும் அதையும் கடந்து தற்போது அம்மாநில மக்கள் ஹேமந்த் சோரனை 2024 சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றி பெற செய்து மீண்டும் முதல்வராக்கி அவரது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா–காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில் தொடர் ஆட்சி அமைக்க செய்துள்ளனர்.
- மேலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தற்போது பல மாநிலங்களில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், பிற மாநில கட்சிகளுக்கும் பலமான எதிர்கட்சியாக செயல்பட்டுவருகிறது.
- இந்திய விடுதலை பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி இதுவரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெருபான்மையாக ஆட்சி புரிந்துள்ளது.
- ஆனால் பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணத்திற்கு பிறகு வந்த அவரது மகளும், பிரதமருமான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி காலத்தில் காங்கிரஸ் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் சறுக்கலை கண்டது.
- குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இறுதி ஆட்சி காலத்தில் நடந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் இந்திய அரசியலில் அதுவரை இல்லாத நாட்டின் பொருளாதார குறைப்பாடுகள் மற்றும் கூட்டணி ஆட்சி முறையால் பல நல்ல திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு செயல்படுத்த முடியாமல் அந்த ஆட்சி காலத்தில் போனதால் இன்று தற்போது பல மாநிலங்களிலும் இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சி பலமான பின்னடைவும், தேர்தல்களில் தொடர் தோல்வியும் அடைந்து வருகிறது.
தற்போது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள்
வரிசை எண் | மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் | முதலமைச்சர் | கட்சி / கூட்டணி கட்சி | பதவியேற்ற நாள் | சட்டமன்ற பலம் / காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் | தேர்தல் காலம் |
---|---|---|---|---|---|---|
1 | இமாச்சலப் பிரதேசம் | சுக்விந்தர் சிங் சுகு (இதேகா) | இதேகா (40) | 11 டிசம்பர் 2022 | 40/68 | 11 டிசம்பர் 2027 |
2 | கர்நாடகம் | சித்தராமையா (இதேகா) | இதேகா (135) | 20 மே 2023 | 137/224 | 13 மே 2028 |
3 | தெலுங்கானா | அனுமுலா ரேவந்த் ரெட்டி (இதேகா) | இதேகா (64) சிபிஐ (1) | 7 டிசம்பர் 2023 | 75/119 | 3 டிசம்பர் 2028 |
காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் ஆளும் மாநிலங்கள்
வரிசை எண் | மாநிலங்கள் | மாநில முதலமைச்சர்கள் | கூட்டணி கட்சிகள் | பதவியேற்ற நாள் | சட்டமன்ற பலம் / காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் | தேர்தல் காலம் |
---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு | மு. க. ஸ்டாலின் | திராவிட முன்னேற்றக் கழகம் | 7 மே 2021 | 18/234 | மே 2026 |
2 | ஜம்மு காஷ்மீர் | உமர் அப்துல்லா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | 16 அக்டோபர் 2024 | இம்மாநிலத்தில் மொத்தம் 114 சட்டமன்றத் தொகுதிகளில் மீதமுள்ள 24 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருப்பதால் தற்போது 6/90 | அக்டோபர் 2029 |
3 | ஜார்கண்ட் | ஹேமந்த் சோரன் | ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா | நவம்பர் 2024 | 16/81 | நவம்பர் 2029 |
காங்கிரசின் பிரதான எதிர்கட்சிகள்
வரிசை எண் | ஆளும் கட்சி | பிரதான எதிர்கட்சிகள் | வருடங்கள் |
---|---|---|---|
1 | காங்கிரஸ் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | (1947–1971) (24–வருடம்) |
2 | இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி | (1964–1996) (32–வருடம்) | |
3 | நிறுவன காங்கிரஸ் | (1969–1977) (8–வருடம்) | |
4 | ஜனதா கட்சி | (1977–1988) (11–வருடம்) | |
5 | ஜனதா தளம் | (1988–1996) (8–வருடம்) | |
6 | பாரதிய ஜனதா கட்சி | (1996–இன்று வரை) |
காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள்
வரிசை எண் | பிரதமர் | ஆட்சிக்காலம் | ஆட்சி நிலவரம் | ஆண்டுகள் |
---|---|---|---|---|
1 | ஜவஹர்லால் நேரு | 1947 முதல் 1964 முடிய | 1947 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக தேர்வு 1951, 1957, 1962 நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நான்கு முறையும் பெரும்பான்மையான அரசு | 17–வருடம் |
2 | குல்சாரிலால் நந்தா | 1965 மே மற்றும் ஜீன், மீண்டும் ஜனவரி 11, 1966 முதல் ஜனவரி 24, 1966 முடிய | இடைக்கால பிரதமராக இரண்டு முறை பெரும்பான்மையான அரசு | 26–நாட்கள் |
3 | லால் பகதூர் சாஸ்திரி | ஜூன் 9, 1964 முதல் ஜனவரி 11, 1966 முடிய | இடைக்கால பிரதமர் பெரும்பான்மையான அரசு | 2–வருடம் |
4 | இந்திரா காந்தி | ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 முடிய மீண்டும் ஜனவரி 14, 1980 – அக்டோபர் 31, 1984 | 1966 நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று 1967, 1971, 1980 மூன்று நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான அரசு | 15–வருடம் |
5 | ராஜீவ் காந்தி | அக்டோபர் 31, 1984 முதல் டிசம்பர் 2, 1989 முடிய | 1984 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையான அரசு | 5–வருடம் |
6 | பி. வி. நரசிம்ம ராவ் | ஜீன் 21 1991 முதல் மே 16 1996 முடிய | 1991 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பான்மை பெறாததால் மற்ற மாநில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி அரசு | 5–வருடம் |
7 | மன்மோகன் சிங் | 22 மே 2004 முதல் 25 மே 2014 முடிய | 2004, 2009 இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் இருமுறையும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பான்மை பெறாததால் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) தலைமையில் முதல் ஆட்சி காலத்தில் இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகள் ஆதரவிலும் இரண்டாவது ஆட்சி காலத்தில் பிற மாநில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி அரசு | 10–வருடம் |
காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் பிரதமர்கள்
வரிசை எண் | ஆதரவு | காங்கிரஸ் கட்சி ஆதரவு தலைவர்கள் | கூட்டணி ஆதரவில் ஆண்ட கட்சிகள் | கூட்டணி நிலைப்பாடு | பிரதமர்கள் | ஆண்டுகள் |
---|---|---|---|---|---|---|
1 | காங்கிரஸ் கட்சி | இந்திரா காந்தி | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | காங்கிரஸ் கட்சி+சிபிஐ+பிற மாநில கட்சிகள் | சரண் சிங் | (1979–1980) 1–வருடம் |
2 | இராஜீவ் காந்தி | சமாஜ்வாடி ஜனதா கட்சி | காங்கிரஸ் கட்சி+பாஜக+பிற மாநில கட்சிகள் | சந்திரசேகர் | (1990–1991) 1–வருடம் | |
3 | சீதாராம் கேசரி/சோனியா காந்தி | ஜனதா தளம் | (ஐக்கிய முன்னணி) தலைமையிலான காங்கிரஸ் கட்சி+சிபிஐ+சிபிஎம்+பிற மாநில கட்சிகள் | தேவ கவுடா | (1996–1997) 1–வருடம் | |
4 | ஐ. கே. குஜ்ரால் | (1997–1998) 1–வருடம் |
(மேலும் இந்த பட்டியலில் உள்ள 4 பிரதமர்களும் மக்களால் நேரடியாக தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படாமல் காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம் என இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகளின் ஆதரவு நிலைபாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் ஆவர்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.