பி. வி. நரசிம்ம ராவ்
இந்திய விடுதலைப் போராட்டத் தெலுங்கர் (1921-2004) From Wikipedia, the free encyclopedia
பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.[3] இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.[4]இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.[5]
பி. வி. நரசிம்ம ராவ் | |
---|---|
![]() 1989 இல் ராவ் | |
9வது இந்தியப் பிரதமர் | |
பதவியில் 21 சூன் 1991 – 16 மே 1996 | |
குடியரசுத் தலைவர் | ரா. வெங்கட்ராமன் சங்கர் தயாள் சர்மா |
முன்னையவர் | சந்திரசேகர் |
பின்னவர் | அடல் பிகாரி வாச்பாய் |
பாதுகாப்புத் துறை அமைச்சர் | |
பதவியில் 6 மார்ச் 1993 – 16 மே 1996 | |
பிரதமர் | அவரே |
முன்னையவர் | எசு. பி. சவாண் |
பின்னவர் | பிரமோத் மகாஜன் |
பதவியில் 31 திசம்பர் 1984 – 25 செப்டம்பர் 1985 | |
பிரதமர் | ராஜீவ் காந்தி |
முன்னையவர் | ராஜீவ் காந்தி |
பின்னவர் | எசு. பி. சவாண் |
வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 31 மார்ச் 1992 – 18 சனவரி 1994 | |
பிரதமர் | அவரே |
முன்னையவர் | மாதவசிங் சோலான்கி |
பின்னவர் | தினேஷ் சிங் |
பதவியில் 25 சூன் 1988 – 2 திசம்பர் 1989 | |
பிரதமர் | ராஜீவ் காந்தி |
முன்னையவர் | ராஜீவ் காந்தி |
பின்னவர் | வி. பி. சிங் |
பதவியில் 14 சனவரி 1980 – 19 சூலை 1984 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | சியாம் நந்தன் பிரசாத் மிஸ்ரா |
பின்னவர் | இந்திரா காந்தி |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 12 மார்ச் 1986 – 12 மே 1986 | |
பிரதமர் | ராஜீவ் காந்தி |
முன்னையவர் | எசு. பி. சவாண் |
பின்னவர் | பூட்டா சிங் |
பதவியில் 19 சூலை 1984 – 31 திசம்பர் 1984 | |
பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி |
முன்னையவர் | பிரகாஷ் சந்திர சேத்தி |
பின்னவர் | எசு. பி. சவாண் |
4வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 30 செப்டம்பர் 1971 – 10 சனவரி 1973 | |
ஆளுநர் | கந்துபாய் கசஞ்சி தேசாய் |
முன்னையவர் | காசு பிரம்மானந்த ரெட்டி |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 15 மே 1996 – 4 திசம்பர் 1997 | |
முன்னையவர் | கோபிநாத் கஜபதி |
பின்னவர் | ஜெயந்தி பட்நாயக் |
தொகுதி | பெர்காம்பூர் |
பதவியில் 20 சூன் 1991 – 10 மே 1996 | |
முன்னையவர் | ஜி.பிரதாப் ரெட்டி |
பின்னவர் | பூமா நாகி ரெட்டி |
தொகுதி | நந்தியாலா |
பதவியில் 31 திசம்பர் 1984 – 13 மார்ச் 1991 | |
முன்னையவர் | பார்வே ஜாதிராம் சித்தாரம் |
பின்னவர் | தேஜ்சிங்ராவ் போஸ்லே |
தொகுதி | ராம்டேக் |
பதவியில் 23 மார்ச் 1977 – 31 திசம்பர் 1984 | |
முன்னையவர் | தாெகுதி ஆரம்பம் |
பின்னவர் | சேண்டுபட்லா ஜங்கா ரெட்டி |
தொகுதி | கனம்கொண்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லக்னேபள்ளி, நரசிம்பேட்டை,[1] ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியா இந்தியா (தற்போது தெலங்காணா, இந்தியா) | 28 சூன் 1921
இறப்பு | 23 திசம்பர் 2004 83) புது தில்லி, இந்தியா | (அகவை
காரணம் of death | மாரடைப்பு |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர்(கள்) | சத்யம்மா [2](தி. 1943; இற. 1970) |
பிள்ளைகள் | 8 |
முன்னாள் மாணவர் | உசுமானியா பல்கலைக்கழகம் (இளங்கலை) மும்பை பல்கலைக்கழகம் நாக்பூர் பல்கலைக்கழகம் (சட்ட முதுகலை) |
பணி |
|
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.
1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது.
மறைவு
டிசம்பர் 2004 இல், தனது 83 ஆம் வயதில் ராவ் மாரடைப்பால் காலமானார்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.