இந்தியத் தலைமை அமைச்சர் From Wikipedia, the free encyclopedia
இந்தியப் பிரதமர் அல்லது இந்தியத் தலைமை அமைச்சர் (ஆங்கிலம்: Prime Minister of India) என்பவர் இந்திய அரசின் செயலாக்கத் தலைவர் ஆவார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமை ஆலோசகரும் மத்திய அமைச்சரவையின் தலைவரும் ஆவார். இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமராக நரேந்திர மோதி பதவியில் உள்ளார்[2].
இந்தியப் பிரதமர்
Bhārat ke Pradhānamantri | |
---|---|
பிரதமர் அலுவலகம் | |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | PM |
உறுப்பினர் | |
அறிக்கைகள் | |
வாழுமிடம் | 7, லோக் கல்யாண் மார்க், புது தில்லி, இந்தியா |
அலுவலகம் | பிரதமர் அலுவலகம், தெற்கு கட்டிடம், புது தில்லி, இந்தியா
|
பரிந்துரையாளர் | மக்களவை உறுப்பினர்கள் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (மக்களவையில் பெரும்பான்மை இழந்து கலைக்கப்படாத வரை) |
அரசமைப்புக் கருவி | இந்திய அரசியலமைப்பு |
முதலாவதாக பதவியேற்றவர் | ஜவகர்லால் நேரு (1947–64) |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
அதிகாரப்பூர்வமற்ற பெயர்கள் | PM |
துணை பிரதமர் | காலியிடம், (இந்திய துணைப் பிரதமர்) |
ஊதியம் | ₹2,80,000 (US$3,500) (மாதம்) (₹3,360,000 ஆண்டு)[1] |
இணையதளம் | pmindia |
பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மாநிலங்களவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் ஆறு மாதத்திற்குள் மக்களவை\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரு பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.[3].
பிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்[4].
பிரதமர் அலுவலக முகவரி:
இந்தியாவின் இரு முக்கியச் செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு போன்ற பிரிவுகளை உள்ளடக்கியது[6].
1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[7].
இந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.
இந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[7].
|
பாஜக (2)[lower-alpha 1] இதேகா/இதேகா(I)/இதேகா(ஆர்)[lower-alpha 2] (6+1 தற்காலிகம்[lower-alpha 3]) ஜ.த (3) ஜ.க (1) ஜ.க(ம) (1) சஜக(ரா) (1) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வ. எண் | படம் | பெயர்
(பிறப்பு–இறப்பு) |
தொகுதி | கட்சி (கூட்டணி) |
பதவிக் காலம்[10] | மக்களவை[lower-alpha 4] | அமைச்சரவை | நியமித்தவர் | |||
1 | ஜவஹர்லால் நேரு (1889–1964) |
புல்பூர், உத்தரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு | 15 ஆகத்து 1947 | 15 ஏப்ரல் 1952 | 16 ஆண்டுகள், 286 நாட்கள் | அரசியலமைப்பு மன்றம்[lower-alpha 5] | நேரு I | மவுண்ட்பேட்டன் பிரபு | ||
15 ஏப்ரல் 1952 | 17 ஏப்ரல் 1957 | 1ஆவது | நேரு II | இராசேந்திர பிரசாத் | |||||||
17 ஏப்ரல் 1957 | 2 ஏப்ரல் 1962 | 2ஆவது | நேரு III | ||||||||
2 ஏப்ரல் 1962 | 27 மே 1964† | 3ஆவது | நேரு IV | ||||||||
தற்காலிகம் | குல்சாரிலால் நந்தா (1898–1998) |
சபர்காந்தா, குசராத்து | இந்திய தேசிய காங்கிரசு | 27 மே 1964 | 9 சூன் 1964 | 13 நாட்கள் | நந்தா I | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | |||
2 | லால் பகதூர் சாஸ்திரி (1904–1966) |
அலகாபாத்து, உத்தரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு | 9 சூன் 1964 | 11 சனவரி 1966† | 1 ஆண்டு, 216 நாட்கள் | சாஸ்திரி | ||||
தற்காலிகம் | குல்சாரிலால் நந்தா (1898–1998) |
சபர்காந்தா, குசராத்து | இந்திய தேசிய காங்கிரசு | 11 சனவரி 1966 | 24 சனவரி 1966 | 13 நாட்கள் | நந்தா II | ||||
3 | இந்திரா காந்தி (1917–1984) |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு | 24 சனவரி 1966 | 4 மார்ச் 1967 | 11 ஆண்டுகள், 59 நாட்கள் | இந்திரா I | ||||
ரெய்பரேலி, உத்தரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு (ஆர்) | 4 மார்ச் 1967 | 15 மார்ச் 1971 | 4ஆவது | |||||||
15 மார்ச் 1971 | 24 மார்ச் 1977 | 5ஆவது | இந்திரா II | வி. வி. கிரி | |||||||
4 | மொரார்ஜி தேசாய் (1896–1995) |
சூரத், குசராத்து | ஜனதா கட்சி | 24 மார்ச் 1977 | 28 சூலை 1979[RES] | 2 ஆண்டுகள், 126 நாட்கள் | 6வது | தேசாய் | பசப்பா தனப்பா ஜாட்டி (தற்காலிகம்) | ||
5 | சரண் சிங் (1902–1987) |
பாகுபத், உத்தரப் பிரதேசம் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | 28 சூலை 1979 | 14 சனவரி 1980[RES] | 170 days | சரண் | நீலம் சஞ்சீவ ரெட்டி | |||
(3) | இந்திரா காந்தி (1917–1984) |
மெதக், ஆந்திர பிரதேசம் |
இந்திய தேசிய காங்கிரசு (I) | 14 சனவரி 1980[§] | 31 அக்டோபர் 1984† | 4 ஆண்டுகள், 291 நாட்கள் | 7ஆவது | இந்திரா III | |||
6 | ராஜீவ் காந்தி (1944–1991) |
அமேதி, உத்தரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு (I) | 31 அக்டோபர் 1984 | 31 திசம்பர் 1984 | 5 ஆண்டுகள், 32 நாட்கள் | ராஜீவ் | ஜெயில் சிங் | |||
31 திசம்பர் 1984 | 2 திசம்பர் 1989 | 8ஆவது | |||||||||
7 | வி. பி. சிங் (1931–2008) |
பதேபூர், உத்தரப் பிரதேசம் | ஜனதா தளம் (தேசிய முன்னணி) |
2 திசம்பர் 1989 | 10 நவம்பர் 1990[NC] | 343 நாட்கள் | 9ஆவது | வி. பி. சிங் | ரா. வெங்கட்ராமன் | ||
8 | சந்திரசேகர் (1927–2007) |
பல்லியா, உத்தரப் பிரதேசம் | இதேகா(I) | 10 நவம்பர் 1990 | 21 சூன் 1991[RES] | 223 நாட்கள் | சந்திரசேகர் | ||||
9 | பி. வி. நரசிம்ம ராவ் (1921–2004) |
நந்தியாலா, ஆந்திரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு (I) | 21 சூன் 1991 | 16 மே 1996 | 4 ஆண்டுகள், 330 நாட்கள் | 10ஆவது | ராவ் | |||
10 | அடல் பிஹாரி வாஜ்பாய் (1924–2018) |
லக்னோ, உத்தரப் பிரதேசம் | பாரதிய ஜனதா கட்சி | 16 மே 1996 | 1 சூன் 1996[RES] | 16 நாட்கள் | 11ஆவது | வாஜ்பாய் I | சங்கர் தயாள் சர்மா | ||
11 | தேவகவுடா (1933–) |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், கருநாடகம் | ஜனதா தளம் (ஐக்கிய முன்னணி) |
1 சூன் 1996 | 21 ஏப்ரல் 1997[RES] | 324 days | தேவகவுடா | ||||
12 | ஐ. கே. குஜரால் (1919–2012) |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், பீகார் | ஜனதா தளம் (ஐக்கிய முன்னணி) |
21 ஏப்ரல் 1997 | 19 மார்ச் 1998 | 332 நாட்கள் | குஜரால் | ||||
(10) | அடல் பிஹாரி வாஜ்பாய் (1924–2018) |
லக்னோ, உத்தரப் பிரதேசம் | பாரதிய ஜனதா கட்சி (தே.ச.கூ) |
19 மார்ச் 1998[§] | 10 அக்டோபர் 1999 | 6 ஆண்டுகள், 64 நாட்கள் | 12ஆவது | வாஜ்பாய் II | கே. ஆர். நாராயணன் | ||
10 அக்டோபர் 1999 | 22 மே 2004 | 13ஆவது | வாஜ்பாய் III | ||||||||
13 | மன்மோகன் சிங் (1932–) |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், அசாம் | இந்திய தேசிய காங்கிரசு (ஐ.மு.கூ) |
22 மே 2004 | 22 மே 2009 | 10 ஆண்டுகள், 4 நாட்கள் | 14ஆவது | மன்மோகன் சிங் I | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் | ||
22 மே 2009 | 26 மே 2014 | 15ஆவது | மன்மோகன் சிங் II | பிரதிபா பாட்டில் | |||||||
14 | நரேந்திர மோதி (1950–) |
வாரணாசி, உத்தரப் பிரதேசம் | பாரதிய ஜனதா கட்சி (தே.ச.கூ) |
26 மே 2014 | 30 மே 2019 | 10 ஆண்டுகள், 145 நாட்கள் | 16ஆவது | மோதி I | பிரணப் முகர்ஜி | ||
30 May 2019 | தற்போது பதவியில் | 17ஆவது | மோதி II | ராம் நாத் கோவிந்த் |
துணை பிரதமர், இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் ஒரு உறுப்பினர் ஆவார். பொதுவாக ஒரு துணை பிரதமர், உள்துறை அமைச்சகம் அல்லது நிதி அமைச்சகம் போன்ற ஒரு முக்கிய அமைச்சரவையை தன் இலாகாவாக வைத்திருப்பார். துணை பிரதம மந்திரி பதவி அதிகாரப்பூர்வமற்றது, இருப்பினும் இது ஒரு கூட்டணி அரசாங்கத்தின் போதும் அல்லது தேசிய அவசர காலங்களிலும், அரசியல் ஸ்திரத்தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பதவியை முதலில் வகித்தவர் வல்லபாய் படேல் ஆவார், இவர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.