Remove ads
இந்தியாவில் பொதுத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் பதினோறாவது நாடாளுமன்றத் தேர்தல் 1996 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினோராவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆளும் இந்திய தேசிய காங்கிரசு தோல்வியடைந்தது. ஆனால் எக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதலில் தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அடல் பிகாரி வாச்பாய் பிரதமரானார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாததால் 13 நாட்களில் அவர் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் மாநிலக் கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஐக்கிய முன்னணியின் தேவகவுடா காங்கிரசின் ஆதரவுடன் பிரதமரானார்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 543 தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 592,572,288 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 57.94% 1.21pp | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். ஆட்சியில் இருந்த பி. வி. நரசிம்ம ராவ் அரசு ஆட்சியாளர் எதிர்ப்பு காரணமாக குறைவான இடங்களிலேயே வென்றது. எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு நாடாளுமன்றம் ஆக உருவானது. அதிக இடங்களை வென்ற கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வாஜ்பாயை அரசமைக்க இந்தியக் குடியரசுத் தலைவர் அழைத்தார். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லையென்பதால் தேவையான ஆதரவைத் திரட்ட வாஜ்பாய்க்கு 13 நாட்கள் தரப்பட்டன. ஆனால் பிறகட்சிகள் பாஜகவை மதவாத கட்சி என்ற தவறான பார்வையால் அதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன. வாஜ்பாய் பதவி விலகினார். அதன் பிறகு எதிர் கட்சியான காங்கிரசுக்கும் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி. ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க வைத்தனர். இக்கூட்டணிக்கு காங்கிரசு (அமைச்சரவையில் சேராமல்) வெளியிலிருந்து ஆதரவு தர முன்வந்தது. பிரதமர் பதவிக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவரும் அன்றைய கர்நாடக மாநில முதல்வருமான தேவகவுடா தேர்ந்தெடுக்கபபட்டார்.
கட்சி | % | இடங்கள் |
பாஜக | 20.29 | 161 |
பாஜக கூட்டணிக் கட்சிகள் சமதாக் கட்சி சிவ சேனா ஹிமாச்சல் முன்னேற்றக் கட்சி | 4.01 2.17 1.49 0.35 | 26 8 15 3 |
காங்கிரசு | 28.8 | 140 |
தேசிய முன்னணி ஜனதா தளம் சமாஜ்வாதி கட்சி தெலுங்கு தேசம் | 14.33 8.08 3.28 2.97 | 79 46 17 16 |
இடதுசாரி முன்னணி சிபிஎம் சிபிஐ புரட்சிகர சோசலிசக் கட்சி ஃபார்வார்டு ப்ளாக் | 9.10 6.12 1.97 0.63 0.38 | 52 32 12 5 3 |
தமாக | 2.19 | 20 |
திமுக | 2.14 | 17 |
பகுஜன் சமாஜ் கட்சி | 4.02 | 11 |
மற்றாவை அகாலி தளம் அசாம் கன பரிசத் திவாரி காங்கிரசு இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன் சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு மத்திய பிரதேச முன்னேற்றக் காங்கிரசு சிக்கிம் ஜனநாயக முன்னணி ஐக்கிய கோவர்கள் ஜனநாயகக் கட்சி கேரள காங்கிரசு (மணி) ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கர்நாடக காங்கிரசு கட்சி மகாராஷ்டிரவாடி கோமாந்தக் கட்சி | 4.23 0.76 0.76 1.46 0.23 0.10 0.05 0.10 0.04 0.03 0.11 0.38 0.17 0.04 | 28 8 5 4 2 1 1 1 1 1 1 1 1 1 |
வெற்றி பெறாத கட்சிகள் | 4.61 | 0 |
சுயெட்சைகள் | 6.28 | 9 |
நியமிக்கப்பட்டவர்கள் | — | 2 |
மொத்தம் | 100.00% | 545 |
தேர்தலுக்குப் பின் உருவான கூட்டணி ஆட்சி நிலவரம்:
அரசமைத்த கூட்டணி |
---|
ஐக்கிய முன்னணி (192) காங்கிரசு (வெளியிலிருந்து அதரவு) (140) |
மொத்தம்: 332 உறுப்பினர்கள்(61.1%) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.