![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/Vanadium_etched.jpg/640px-Vanadium_etched.jpg&w=640&q=50)
வனேடியம்
From Wikipedia, the free encyclopedia
வனேடியம் (ஆங்கிலம்: Vanadium, (IPA: /vəˈneɪdiəm/) என்னும் வெண்-சாம்பல் நிற வேதிப்பொருள் உலகில் அதிக அளவில் காணப்படாத, மென்மையான, வளையக்கூடிய, தகடாககூடிய மாழை ஆகும். இத் தனிமத்தின் அணுவெண் 23 ஆகும். இது இயற்கையில் கிடைக்கும் கனிமப்பொருட்களில் இருந்து பிரிக்கப்படுவது. வனேடியம் பெரும்பாலான உயிரினங்களில் இருக்கும் 26 தனிமங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பிற மாழைகளுடன் கலந்து மாழைக்கலவையாகப் பயன்படுகின்றது.
வனேடியம் | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
23V | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||||||||
நீல-வெள்ளி-சாம்பல் உலோகம்![]() | ||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | வனேடியம், V, 23 | |||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /vəˈneɪdiəm/ və-NAY-dee-əm | |||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | தாண்டல் உலோகம் | |||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 5, 4, d | |||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
50.9415(1) | |||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Ar] 3d3 4s2 2, 8, 11, 2 | |||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 6.0 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 5.5 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 2183 K, 1910 °C, 3470 °F | |||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 3680 K, 3407 °C, 6165 °F | |||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 21.5 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 459 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 24.89 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 5, 4, 3, 2, 1, -1 (ஈரியல்பு ஒக்சைட்டு) | |||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 1.63 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 650.9 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||
2வது: 1414 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||
3வது: 2830 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 134 பிமீ | |||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 153±8 pm | |||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | body-centered cubic | |||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | paramagnetic | |||||||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) 197 nΩ·m | |||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 30.7 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (25 °C) 8.4 µm·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (20 °C) 4560 மீ.செ−1 | |||||||||||||||||||||||||||||||||
யங் தகைமை | 128 GPa | |||||||||||||||||||||||||||||||||
நழுவு தகைமை | 47 GPa | |||||||||||||||||||||||||||||||||
பரும தகைமை | 160 GPa | |||||||||||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் | 0.37 | |||||||||||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
6.7 | |||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7440-62-2 | |||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: வனேடியம் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
·சா |
வனேடியம், கார்னோடைட், ரோச்கோலைட், வனாடினைட், பாட்ரோனைட், போன்று 65 வகையான தாதுக்களில் கிடைக்கின்றது.[1] பாஸ்பேட் பாறை மற்றும் ஒரு சில இரும்புத் தாதுக்களிலும் காணப்படுகின்றது. கச்சா எண்ணெயில் கனிம -கரிம மூலக் கூறுகளாகவும் உள்ளது. வனேடியத் தாதுக்கள் அமெரிக்கா, ரஷ்யா,பின்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வாடா ரொடீசியா, பெரு, வெனிசுலா, பிரான்சு போன்ற நாடுகளில் அதிகம் கிடைக்கின்றது.[2] மக்னீசியம் அல்லது மக்னீசியம்- சோடியக் கலவையால் வனேடியம் ட்ரை குளோரைடை ஆக்ஸிஜனீக்க வினைக்கு உட்படுத்தி, தூய வனேடியத்தைப் பெறலாம். இயற்கையில் காணப்படும் வனேடியத்தில், ௦.24 விழுக்காடு வனேடியம்-50 ம் , 99.76 விழுக்காடு வனேடியம்-51ம் உள்ளன.[3] இதில் வனேடியம்-50 கதிரியக்கமுடையது. இதன் அரை வாழ்வு 6 x 1015 ஆண்டுகள். பூமியின் புறவோட்டுப் பகுதியில் இதன் செழுமை ௦.02 விழுக்காடாகும். இது ஈயத்தின் செழுமையை விட 15 மடங்கும் வெள்ளியின் செழுமையை விட 2000 மடங்கும் அதிகமானது.
எரிகற்களில் வனேடியத்தின் செழுமை அதிகமுள்ளது.[4] முதிர்ந்த உறுதியான மரங்களின் அடிப்பகுதிகளில் வனேடிய உப்புகள் உள்ளன. கடல் தாவர இனங்களிலும், கடல் வாழ் உயிரினகளின் உடலிலும் வனேடியம் அதிகம் இருக்கின்றது.[5] வனேடியம் உயிரினகளின் வளர் சிதை மாற்ற வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுகின்றது. ஜப்பான் நாட்டில் அசிடியா (ascidia) என்ற கடல் வாழ் சிற்றுயிரியின் பண்ணைகளை அமைந்து அதன் உடலில் செறிவுற்றுள்ள 18.5 சதவீதம் வனேடியத்தைப் பிரித்தெடுக்க முயன்று வருகின்றார்கள். மரப் பிசின்களின் உதவியுடன் அயனிப் பரிமாற்ற வினை வழி வனேடியத்தைப் பிரித்தெடுக்கும் நவீன முறையை அமெரிக்கர்கள் கையாளுகின்றார்கள்