கனசதுரம் (படிக முறை)
From Wikipedia, the free encyclopedia
படிகவுருவியலில் கனசதுர படிக அமைப்பு என்பது கனசதுர வடிவ அலகுஅறை கொண்ட ஒரு படிக அமைப்பாகும். படிகங்களிலும் தனிமங்களிலும் காணப்படும் வடிவங்களில் மிக அதிகமாக காணப்படும் வடிவங்களில் இதுவும் ஒன்றாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3b/Kubisches_Kristallsystem.jpg/640px-Kubisches_Kristallsystem.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/86/FCC_primative-cubic_cells.svg/320px-FCC_primative-cubic_cells.svg.png)
இவ்வமைப்பில் மூன்று முக்கிய வகைகள் (ப்ராவை அணிக்கோவைகள்) உள்ளன:
- மூல கனசதுரம் (cP என்று குறிக்கப்படும், சாதரண கனசதுரம் என்றும் அறியப்படும்)
- பொருள்மைய கனசதுரம் (cI என்று குறிக்கப்படும்)
- முக மைய கனசதுரம் (cF என்று குறிக்கப்படும், கனசதுர நெருக்கப் பொதிவமைப்பு என்றும் அறியப்படும்)
இப்படிக அமைப்புகளில் அலகறைகள் கனசதுரம் என்று வழக்கத்தில் கொள்ளப்படும் பொழுதிலும், பெரும்பாலும் மூல அலகறை கனசதுரமாய் இருப்பதில்லை என்பது குறிக்கத்தக்கது. இதன் காரணம் பெரும்பான்மையான படிக அமைப்புகளின் அலகறைகள் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களை (அல்லது அணிக்கோவை புள்ளிகளை) கொண்டனவாய் இருக்கின்றன என்பதே ஆகும்.