லீலாவதி (நடிகை)
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
லீலாவதி (Leelavathi ) (1937 இல் லீலா கிரண் என்ற பெயரில் பிறந்த [2] இவர் ஓர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் முக்கியமாக பணியாற்றினார். ராஜ்குமார், விஷ்ணுவர்தன், ம. கோ. இராமச்சந்திரன், என். டி. ராமராவ், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சங்கர் நாக், கமல்ஹாசன், இரசினிகாந்து, சிரஞ்சீவி, வீ. ரவிச்சந்திரன், சுதீப் போன்ற பல்வேறு புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தொழில் வாழ்க்கையில் 600க்கும் மேற்பட்ட படங்களில் (கன்னடத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட) நடித்துள்ளார். நாகரஹாவு, அவர்கள் போன்ற படங்களில் இவரது நடிப்பு மக்களால் நினைவு கூறப்படுகிறது.
லீலாவதி | |
---|---|
பிறப்பு | லீலா கிரண் 1937 மங்களூர், சென்னை மாகாணம் (தற்போதைய கருநாடகம்), பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
பணி | நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், அறப்பணி செய்பவர்.[1] |
செயற்பாட்டுக் காலம் | 1958 முதல் தற்போது வரை |
பிள்ளைகள் | வினோத் ராஜ் |
வலைத்தளம் | |
Personal website |
லீலாவதி தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இதில் 1999 ல் ராஜ்குமார் விருது, மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் போன்றவை அடங்கும்.