![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/4/4c/Filmfare_Awards_South.png/640px-Filmfare_Awards_South.png&w=640&q=50)
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்திய பிரிவாகும். தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் திரைப்பட கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 1953ஆவது ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு 1954ஆம் ஆண்டு முதலாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.[1] தொடக்க காலத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இவ்விருது 1967ஆம் ஆண்டு முதல் மலையாளம், மற்றும் 1970ஆம் ஆண்டு முதல் கன்னட மொழித் திரைப்படங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி திரைப்படத்துறைக்கும் தனித்தனியான விருதுகளும், அனைத்திற்கும் சேர்த்து பொதுவான விருதுகளும் வழங்கப்படுகின்றன. பொதுவாக இவ்விருது வழங்கும் விழாக்கள் சென்னை அல்லது ஐதராபாத்து நகரங்களில் நடைபெறுகின்றன.
விரைவான உண்மைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் Filmfare Awards South, விளக்கம் ...
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் Filmfare Awards South | |
---|---|
தற்போதைய: 62ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | |
![]() | |
விளக்கம் | தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவதற்காக |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | பிலிம்பேர் |
முதலில் வழங்கப்பட்டது | |
இணையதளம் | http://awards.filmfare.com/ awards.filmfare.com |
Television/radio coverage | |
நெட்வொர்க் |
மூடு