மார்ச்சு 3 (March 3) கிரிகோரியன் ஆண்டின் 62 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 63 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 303 நாட்கள் உள்ளன.
- 1790 – ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர் (இ. 1859)
- 1839 – ஜம்சேத்ஜீ டாட்டா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904)
- 1845 – கியார்கு கேன்ட்டர், உருசிய-செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1918)
- 1847 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1922)
- 1860 – அலெக்சி பேவர்ஸ்கி, உருசிய வேதியியலாளர் (இ. 1945)
- 1882 – சார்லசு பொன்சி, இத்தாலியத் தொழிலதிபர் (இ. 1949)
- 1906 – யெவ்கேனி கிரினோவ், சோவியத்-உருசிய வானியலாளர், புவியியலாளர் (இ. 1984)
- 1924 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர் (இ. 1996)
- 1931 – குலாம் முஸ்தபா கான், இந்திய இசையமைப்பாளர்
- 1941 – பங்காரு அடிகளார், தமிழக ஆன்மீக குரு (இ. 2023)
- 1943 – சங்கர் கணேஷ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்
- 1944 – ஜெயச்சந்திரன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
- 1950 – திக்குவல்லை கமால், இலங்கை எழுத்தாளர்.
- 1955 – கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இ. 2002)
- 1955 – தோர்ச்யீ காண்டு, இந்திய அரசியல்வாதி (இ. 2011)
- 1955 – ஜஸ்பால் பட்டி, இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2012)
- 1958 – லதா ரஜினிகாந்த், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகி
- 1970 – இன்சமாம் உல் ஹக், பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்
- 1982 – ஜெசிக்கா பைல், அமெரிக்க நடிகை, பாடகி
- 1985 – வரலட்சுமி சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகை
- 1644 – குரு அர்கோவிந்த், ஆறாவது சீக்கிய குரு (பி. 1595)
- 1703 – ராபர்ட் ஹூக், ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், மெய்யியலாளர் (பி. 1635)
- 1707 – ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (பி. 1618)
- 1900 – பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1847)
- 1940 – கடம்பி மீனாட்சி, இந்திய வரலாற்றாய்வாளர் (பி. 1905)
- 1944 – குமாரதுங்க முனிதாச, சிங்களக் கவிஞர், பத்திரிகையாளர் (பி. 1887)
- 1985 – யோசிப் சுக்லோசுகி, சோவியத்-உக்கிரைனிய வானியலாளர் (பி. 1916)
- 1996 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1924)
- 2010 – குருவிக்கரம்பை வேலு, சுயமரியாதை இயக்கத் தலைவர் (பி. 1930)
- 2011 – வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (பி. 1929)
- 2016 – பெர்த்தா காசிரீஸ், ஒந்துராசு சூழலியலாளர் (பி. 1973)
- 2016 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்து துடுப்பாளர் (பி. 1962)
- 2018 – ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய தடகள வீரர் (பி. 1929)