From Wikipedia, the free encyclopedia
மார்ட்டின் டேவிட் குரோவ் (Martin David Crowe, 22 செப்டம்பர் 1962 - 3 மார்ச் 2016) நியூசிலாந்து துடுப்பாட்ட அணியில் விளையாடிய முன்னாள் துடுப்பாட்டக்காரர். 1985ஆம் ஆண்டுக்கான விசுடன் துடுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் "உலகின் சிறந்த இளைஞர் துடுப்பாட்டாளர்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார்.[1] 1980கள் முதலே நியூசிலாந்து அணியில் பங்கேற்ற மார்ட்டின் 1996ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.[1] தனது துவக்க ஆட்டங்களில் மிதவேகப் பந்துவீச்சாளராகவும் பங்காற்றியுள்ளார். 1990களில் நியூசிலாந்தின் அணித்தலைவராக பொறுப்பேற்றிருந்த வேளையில் சுழற்பந்து வீச்சாளர்களை ஆட்டத்தின் முதலில் வீசச்சொல்வது, அதிரடி துடுப்பாளர்களை பயன்படுத்திக் கொள்வது என்ற புதுமைகளைக் கையாண்டார். 1992 உலகக்கிண்ணப் போட்டிகளில் 456 ஓட்டங்கள் எடுத்து உலகக்கிண்ண நாயகனாக தெரிந்தெடுக்கப்பட்டார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மார்ட்டின் டேவிட் குரோவ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டக்காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | டேவ் குரோவ் (தந்தை) ஜெஃப் குரோவ் (உடன்பிறப்பு) ரசல் குரோவ் (ஒன்றுவிட்ட உடன்பிறப்பு) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் | 26 பெப்ரவரி 1982 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 12 நவம்பர் 1995 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | 13 பெப்ரவரி 1982 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 26 நவம்பர் 1995 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1979-1983 | ஆக்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1983-1990 | நடு மாவட்டங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1984-1988 | சாமர்செட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1990-1995 | வெல்லிங்டன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, 30 மே 2009 |
1982ஆம் ஆண்டு நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் சார்பாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[2] ஈடன் பார்க் துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் அதே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[3] அந்த சமயத்தில் மிக இளம் வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய ஆறு வீரர்களில் ஒருவராக இருந்தார்.[4] 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்னத் தொடரில் இவர் விளையாடினார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவர் 97 ஓட்டங்கள் எடுத்தார். இந்தத் தொடரின் இவரின் அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். 1984ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார்.[5]
குரோவ் ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான ஹென்டர்சனில் துடுப்பாட்ட வீரர்கள் குடும்பத்தில் பிறந்தார்.[6] அவரது தந்தை, டேவ் குரோவ், கேன்டர்பரி மற்றும் வெலிங்டன் [7] ஆகிய அணிகளுக்காக முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார், மேலும் அவரது மூத்த சகோதரர் ஜெஃப் குரோவ் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[8] நடிகர் ரசல் குரோவ் இவரின் உறவினர் ஆவார்.[9] 1968 ஆம் ஆண்டில், மார்ட்டின் குரோவ் தனது தந்தை மற்றும் சகோதரருடன் கார்ன்வால் துடுப்பாட்ட சங்கத்தில் சேர்ந்தார்.[10][11] 1976 முதல் 1980 வரை இவர் படித்த ஓக்லாந்து கிறம்மர் பாடசாலையில் தனது இறுதி ஆண்டில் பள்ளித் துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவராக இருந்தார். மேலும் இரக்பியும் விளையாடினார்.[10]
1991 ஆம் ஆண்டில், குரோ உள்ளறை வடிவமைப்பாளரான சிமோன் கர்டிஸை மணந்தார். இந்தத் தம்பதி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1996 இல் திருமணமுறிவு பெற்ற பின்னர் க்ரோவ் சுசேன் டெய்லருடன் வாழ்ந்து வந்தார். இந்தத் தம்பதியினருக்கு எம்மா க்ரோவ் எனும் மகள் 2003 ஆம் ஆண்டில் பிறந்தார்.[12][13][14] இந்தத் தம்பதி 2005 இல் பிரிந்தனர்.[15] 2009 ஆம் ஆண்டில், குரோவ் மூன்றாவது முறையாக, முன்னாள் உலக அழகியான லோரெய்ன் டவுனஸை மணந்தார். வாழ்நாள் இறுதிவரை அவருடன் இணைந்து வாழ்ந்து வந்தார் .[16]
1985 ஆம் ஆண்டில், குரோவ் 188 ஓட்டங்களை இரண்டு முறை எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது 462 பந்துகளைச் சந்தித்து இவர் 188 ஓட்டங்களை எடுத்தார்.இவர் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக களத்தில் மட்டையாடினார்.[17] இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது எடுத்தார். அந்தத் தொடரின் போது தான் ரிச்சர்ட் ஹாட்லி எனும் வீரர்15 இலக்குகளைக் கைப்பற்றினார்.[18] பிப்ரவரி 1987 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு தேர்வுப் போட்டியில் குரோவ் மற்றும் ஜான் ரைட் ஆகியோர் மூன்றாவது இணைக்கு 241 ஓட்டங்கள் எடுத்தனர். இது நியூசிலாந்திற்கான மூன்றாவது இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையை படைத்தது.[19] ஆண்டின் பிற்பகுதியில், குரோவ் இந்தியாவில் 1987 உலகக் கோப்பையில் விளையாடினார். அந்தத் தொடரில் ஆறு போட்டிகளில் இருந்து மூன்று அரை நூறு ஓட்டங்களை எடுத்தார். மேலும், நியூசிலாந்துத் துடுப்பாட்ட வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார். ஆனால் இந்த அணி ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டுமே வென்றது[20]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.