தூத்துக்குடி மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய தூத்துக்குடி கட்டுரையைப் பார்க்க.
தூத்துக்குடி மாவட்டம் (Thoothukudi district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தூத்துக்குடி ஆகும். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து அக்டோபர் 20, 1986 அன்று வ.உ. சிதம்பரனார் பெயரால் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மேற்கே திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும், வடக்கே இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும் அமைந்துள்ளன. நீர் நிறைந்த நிலத்தைத் தூர்த்து, துறைமுகமும், குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைகொண்டான் கல்வெட்டுக்களில், இவ்வூரைத் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
தூத்துக்குடி | |
மாவட்டம் | |
வ. உ. சிதம்பரனார் துறைமுகம் | |
தூத்துக்குடி மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | தூத்துக்குடி |
பகுதி | தென் மாவட்டம் |
ஆட்சியர் |
ஆ. ர. ராகுல் நாத், இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
எல். பாலாஜி சரவணன், இ.கா.ப. |
மாநகராட்சி | 1 |
நகராட்சிகள் | 3 |
வருவாய் கோட்டங்கள் | 3 |
வட்டங்கள் | 10 |
பேரூராட்சிகள் | 18 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 12 |
ஊராட்சிகள் | 403 |
வருவாய் கிராமங்கள் | 480 |
சட்டமன்றத் தொகுதிகள் | 6 |
மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | 4707 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
17,50,176 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
628 0xx |
தொலைபேசிக் குறியீடு |
0461 |
வாகனப் பதிவு |
TN-69, TN-92, TN-96 |
பாலின விகிதம் |
1023 ♂/♀ |
கல்வியறிவு |
86.16% |
இணையதளம் | thoothukudi |