மு. சரவணன்
மலேசிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
டத்தோ முருகன் சரவணன் எனும் எம். சரவணன் (ஆங்கிலம்: Murugan Saravanan அல்லது M. Saravanan), மலேசியத் தமிழ் அரசியல்வாதி ஆவார். மலேசியா, பேராக், தாப்பா மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற 12-ஆவது பொதுத் தேர்தலில் இருந்து 2022-ஆம் ஆண்டு 15-ஆவது பொதுத் தேர்தல் வரையில் இந்தத் தொகுதியைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.
விரைவான உண்மைகள் மலேசிய மனிதவள அமைச்சர், ஆட்சியாளர் ...
2020-இல் சரவணன் | |
மலேசிய மனிதவள அமைச்சர் | |
பதவியில் 30 ஆகஸ்டு 2021 – 24 செப்டம்பர் 2022 | |
ஆட்சியாளர் | சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | இசுமாயில் சப்ரி யாகோப் |
பின்னவர் | வி. சிவகுமார் |
தொகுதி | தாப்பா மக்களவைத் தொகுதி |
பதவியில் 10 மார்ச் 2020 – 16 ஆகஸ்டு 2021 | |
ஆட்சியாளர் | சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | முகிதீன் யாசின் |
முன்னையவர் | எம். குலசேகரன் |
தொகுதி | தாப்பா மக்களவைத் தொகுதி |
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் | |
பதவியில் 16 மே 2013 – 9 மே 2018 | |
பிரதமர் | நஜீப் ரசாக் |
தொகுதி | தாப்பா மக்களவைத் தொகுதி |
மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் துணை அமைச்சர் | |
பதவியில் 9 ஏப்ரல் 2009 – 15 மே 2013 | |
பிரதமர் | நஜீப் ரசாக் |
தொகுதி | தாப்பா மக்களவைத் தொகுதி |
மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் துணை அமைச்சர் | |
பதவியில் 19 மார்ச் 2008 – 9 ஏப்ரல் 2009 | |
பிரதமர் | அப்துல்லா அகமது படாவி (2008–2009) நஜீப் ரசாக் (2009) |
தொகுதி | தாப்பா மக்களவைத் தொகுதி |
தாப்பா மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 மார்ச் 2008 | |
பெரும்பான்மை | 3,020 (2008) 7,927 (2013) 614 (2018) 5,064 (2022) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சரவணன் முருகன் 4 பெப்ரவரி 1968 (1968-02-04) (அகவை 56) செந்தூல், கோலாலம்பூர், மலேசியா |
அரசியல் கட்சி | மஇகா (MIC) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் நேசனல் (BN) பெரிக்காத்தான் நேசனல் (PN) பாக்காத்தான் அரப்பான்] (PH) |
துணைவர் | கவிதா விவேகானந்தன்[1] |
பிள்ளைகள் | 3 |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | msaravanan68 |
மூடு
1 மார்ச் 2020 -இல் நடந்த மலேசிய அரசியல் மாற்றத்தினால், முகிதீன் யாசின் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 9 மார்ச் 2020 அன்று டத்தோ மு. சரவணன் மலேசிய மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதுவே அவர் அமைச்சர் பதவிக்கான முதல் நியமனமாகும்.