![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/87/Dewan_Rakyat.svg/langta-640px-Dewan_Rakyat.svg.png&w=640&q=50)
மலேசிய மக்களவை
மலேசிய பாராளுமன்றத்தின் கீழவை / From Wikipedia, the free encyclopedia
மலேசிய மக்களவை அல்லது டேவான் ராக்யாட் (மலாய்:Dewan Rakyat, ஆங்கிலம்: House of Representatives) என்பது மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையைக் (கீழவை) குறிக்கும் மலாய்ச் சொல் ஆகும். டேவான் (Dewan) என்றால் அவை; ராக்யாட் (Rakyat) என்றால் மக்கள் என பொருள்படும். மலேசியாவின் அனைத்துச் சட்ட முன்வரைவுகளும் இங்கு விவாதிக்கப்பட்டு, பின்னர் சட்டங்களாக இயற்றப்படுகின்றன.
மலேசிய மக்களவை டேவான் ராக்யாட் Dewan Rakyat House of Representatives | |
---|---|
15-ஆவது மக்களவை | |
![]() | |
வகை | |
வகை | |
தலைமை | |
துணைப் பிரதமர் I | |
துணைப் பிரதமர் II | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 222 |
![]() | |
அரசியல் குழுக்கள் | (சூன் 1, 2024 நிலவரப்படி)
அரசாங்கம் (153)
சமூக ஜனநாயக நல்லிணக்கக் கட்சி (1)
எதிர்க்கட்சி (69)
|
செயற்குழுக்கள் | 5
|
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் வரை |
தேர்தல்கள் | |
வாக்களிப்பு முறைகள் | |
அண்மைய தேர்தல் | 19 நவம்பர் 2022 |
அடுத்த தேர்தல் | 17 பிப்ரவரி 2028 |
கூடும் இடம் | |
![]() | |
மக்களவை அறை மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், கோலாலம்பூர், மலேசியா | |
வலைத்தளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
அவ்வாறு இயற்றப்படும் சட்ட முன்வரைவுகள், மக்களவையில் இருந்து மலேசிய மேலவையின் ஒப்புதலுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அதன் பின்னர், மலேசிய அரசர் ஒப்புதல் அளித்த பின்னர், அந்த சட்ட முன்வரைவுகள் சட்டங்களாகின்றன. மலேசிய மேலவை டேவான் நெகாரா என்று அழைக்கப்படுகிறது.
டேவான் ராக்யாட் எனும் மக்களவை உறுப்பினர்களைப் பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றே அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.