மலேசிய இசுலாமிய கட்சி
From Wikipedia, the free encyclopedia
மலேசிய இசுலாமிய கட்சி (பாசு) (மலாய்: Parti Islam Se-Malaysia) (சாவி: ڤرتي اسلام س-مليسيا) என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் எதிர்க் கட்சியாகும். பொதுவாக, இதனைப் பாசு கட்சி என்று அழைப்பார்கள். இது இசுலாமிய சமயம் சார்ந்த கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக இடத்தோ சிறீ அத்துல் ஆடி அவாங்கு இருக்கிறார். இசுலாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் தலையாயக் கோட்பாடு ஆகும்.[1]
மலேசிய இசுலாமிய கட்சி Pan-Islamic Malaysian Party Parti Islam Se-Malaysia ڤرتي اسلام س-مليسيا | |
---|---|
ஆலோசகர் | நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் |
தலைவர் | அப்துல் அடி அவாங் |
துணை தலைவர் | முகமட் சாபு |
பொது செயலாளர் | முசுதாபா அலி |
தொடக்கம் | ஏப்ரல் 4, 1939 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
செய்தி ஏடு | அராக்கா நாளிதழ் |
இளைஞர் அமைப்பு | பாஸ் இளைஞர் அணி |
கொள்கை | இசுலாமியம், இசுலாமிய சனநாயகம், சமயப் பழைமைவாதம் |
தேசியக் கூட்டணி | பாரிசான் நேசனல் (1974–78) ஐக்கிய உம்மா அணி (1989–1996) மாற்று முன்னணி (1999–2004) பாக்காத்தான் ராக்யாட் (2008-2015)சர்ச்சைக்குரிய |
நிறங்கள் | வெள்ளை, பச்சை |
டேவான் ராக்யாட்: | 23 / 222 |
இணையதளம் | |
www.pas.org.my |
சமய அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாகவும் இந்த மலேசிய இசுலாமிய கட்சி விளங்கி வருகிறது.[2] தீபகற்ப மலேசியாவின் வட பகுதியில் இருக்கும் பழைமைவாத மாநிலங்களான கிளாந்தான், திரங்கானு ஆகியவற்றின் வலுவான ஆதரவுகளை இந்தக் கட்சி பெற்றுள்ளது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, மலேசிய மக்களின் பேரதரவைப் பெற்று விளங்கிய பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் அரசியல் கட்சியும் இதுவே ஆகும்.
2008ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்குப் பின், பி.கே.ஆர் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிக் கட்சி, சனநாயக செயல் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து பாக்காத்தான் இராக்கியாட்டு எனும் ஓர் அரசியல் எதிர் அணியை உருவாக்கியது. இப்போது மலேசியாவின் கிளாந்தான், திரங்கானு, சிலாங்கூர், பினாங்கு ஆகிய மாநிலங்களை பாக்காத்தான் இராக்கியாட்டு தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது.