ஐக்கிய சபா கட்சி
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய சபா கட்சி (மலாய் மொழி: Parti Bersatu Sabah; ஆங்கிலம்: United Sabah Party; சீனம் 沙巴联合党) என்பது கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் தோழமைக் கட்சிகளில் மிக முக்கியமானக் கட்சியாகக் கருதப் படுகின்றது.
ஐக்கிய சபா கட்சி United Sabah Party Parti Bersatu Sabah 沙巴团结党 | |
---|---|
![]() | |
தலைவர் | ஜோசப் பைரின் கித்திங்கான் Joseph Pairin Kitingan |
தொடக்கம் | 5 மே 1985 |
தலைமையகம் | ![]() |
இளைஞர் அமைப்பு | PBS Youth Section பிபிஎஸ் இளைஞர் அணி |
கொள்கை | மைய அதிகார ஒருமிப்புக்கொள்கை, தேசியவாதம் |
தேசியக் கூட்டணி | பாரிசான் நேசனல் |
நிறங்கள் | நீலம், சிகப்பு |
இணையதளம் | |
http://www.pbs-sabah.org/ |
ஐக்கிய சபா கட்சியை பிபிஎஸ் என்று சுருக்கமாகவும் அழைப்பார்கள். 5 மே 1985இல் உருவாக்கப்பட்டது.[1] முன்பு சபாவின் ஆளும் கட்சியாக இருந்த பெர்ஜாயா கட்சியில் (ஆங்கில மொழி: Berjaya Party) இருந்து பிரிந்து வந்த கட்சியாகும். இந்தக் கட்சியைத் தோற்றுவித்தவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ பாங்லிமா ஜோசப் பைரின் கித்திங்கான்.[2]
சபா மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்களான கடாசான் டூசுன் இன மக்களைப் பிரதிநிதிக்கும் முக்கியக் கட்சியாக இருந்தாலும். தன்னை ஒரு பல்லினச் சமுதாயக் கட்சியாகக் கூறி வருகிறது. சபா மாநிலத்தில் தன்னாட்சியை நிலைப்படுத்துவது; பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பது; ஜனநாயக கோட்பாடுகளையும், மனித உரிமைகளைப் பாதுகாப்பது; நீதித் தன்மைகளை மேம்படுத்துவது போன்றவை அதன் அரசியல் நோக்கங்களாக உள்ளன.