கோத்தா கினபாலு
From Wikipedia, the free encyclopedia
கோத்தா கினபாலு; (மலாய்: Kota Kinabalu (KK); ஆங்கிலம்: City of Kota Kinabalu; சீனம்: 亚庇; ஜாவி: کوتا کينابالو) என்பது மலேசியா, சபா, மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டத்தில் அமைந்து உள்ள மாநகரம்; சபா மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரின் பழைய பெயர் ஜெசல்டன் (Jesselton). 1967 டிசம்பர் 22-ஆம் தேதி, கோத்தா கினபாலு என சபா மாநில சட்டமன்றம் மாற்றம் செய்தது.[3]
கோத்தா கினபாலு | |
---|---|
Kota Kinabalu Jesselton | |
சபா தலைநகரம் | |
குறிக்கோளுரை: இயற்கை உல்லாச நகரம் (Nature Resort City) (Bandaraya Peranginan Semula Jadi) | |
ஆள்கூறுகள்: 05°58′30″N 116°04′21″E | |
நாடு | மலேசியா மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | மேற்கு கரை |
புரூணை சுல்தானகம் | 15 –18 நூற்றாண்டு |
வடக்கு போர்னியோ நிறுவனம் | 1882 |
வடக்கு போர்னியோ தலைநகரம் | 1946 |
மாநகர்த் தகுதி | பிப்ரவரி 2, 2000 |
மாவட்டம் | கோத்தா கினபாலு |
அரசு | |
• மேயர் | நூர்லிசா அவாங் அலிப் (Noorliza Awang Alip) |
• மாநகராட்சி | கோத்தா கினபாலு மாநகராட்சி |
• தலைமை இயக்குநர் | டத்தோ இயோ பூன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 351 km2 (136 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 4,52,058 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 88xxx; 89xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 088, 087 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | EJ, EJA, EJB (1967–1980) SA (1980–2018) SY (2018–இன்று வரையில்)[1][2] |
இணையதளம் | dbkk.sabah.gov.my |
1 |
இந்த மாநகரம் போர்னியோ தீவின், வட மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்து உள்ளது. வடக்கே தென் சீனக் கடல் உள்ளது. துங்கு அப்துல் ரகுமான் வனப்பூங்கா (Tunku Abdul Rahman National Park), கோத்தா கினபாலு மாநகரத்திற்கு அருகாமையில் இருக்கிறது. கினபாலு மலையின் (Mount Kinabalu) பெயரைக் கொண்டு இந்த நகரத்திற்கும் ’கோத்தா கினபாலு’ என்று பெயர் வைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் முற்றாக அழிபட்டுப் போன ஒரு நகரம். அழிவின் சாம்பல்களில் இருந்து, இப்போது புதிய பரிமாணங்களைப் பதித்து வரும் ஒரு புதிய நகரம். அண்மைய காலங்களில் பார்ப்பவர்களின் கண்களில் இயற்கை அழகையும் இனிதான கலாசாரத்தையும் வழங்கி வருகிறது. கோத்தா கினபாலு இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று அறியப்படுகிறது.
மலேசியாவிலும், அனைத்துலக ரீதியிலும் கோத்தா கினபாலுவை கே.கே. என்று அழைக்கிறார்கள். சபாவையும் போர்னியோவையும் பார்க்க வரும் சுற்றுப் பயணிகளுக்கு இந்த நகரம் ஒரு சுற்றுலா சொர்க்கபுரியாக விளங்குகிறது. கோத்தா கினபாலுவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் கினபாலு பூங்கா இருக்கிறது.[4]
இந்த நகரத்தைச் சுற்றிலும் பல சுற்றுலா மையங்கள் உள்ளன. இதைத் தவிர, முக்கிய தொழில்துறை, வாணிபத் தளங்களும் கோத்தா கினபாலுவின் புறநகர்ப் பகுதிகளில் உருவாக்கம் பெற்று வருகின்றன. ஆகவே, இந்த நகரம் கிழக்கு மலேசியாவில் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் முக்கியமான நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.