![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/39/Penampang_Sabah_Dusun-Tindal-02.jpg/640px-Penampang_Sabah_Dusun-Tindal-02.jpg&w=640&q=50)
டூசுன்
சபா மாநிலத்தின் பூர்வீகப் பழங்குடி மக்கள் / From Wikipedia, the free encyclopedia
டூசுன் (மலாய்: Kaum Dusun அல்லது Bangsa Dusunik; ஆங்கிலம்: Dusun; சீனம்: 杜顺) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியா, வடக்கு போர்னியோ, சபா மாநிலத்தில் வாழும் பூர்வீகப் பழங்குடி மக்களாகும். இவர்கள் சபாவில் மிகப்பெரிய இனக்குழுவினராக உள்ளனர்.
விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மலேசியா (சபா) ...
![]() கோத்தா பெலுட் டூசுன் மக்கள் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
![]() (சபா) | 1,100,283 |
மொழி(கள்) | |
டூசுன் மொழி, சபா மலாய் மொழி, ஆங்கிலம் | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம் (பெரும்பான்மை), இசுலாம், மோமோலியனிசம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மூருட், இடான், லுன் பாவாங், ஆஸ்திரோனீசிய மக்கள் |
மூடு
டூசுன் இனத்தவர், 2004-ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பால் (UNESCO); போர்னியோவில் ஒரு பாரம்பரியப் பழங்குடி சமூகத்தவராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.[1]
டூசுன் இனத்தவரைப் போல் சமூகத் தொடர்புகள் இல்லாத பிற இனக் குழுவினர்களும் புரூணை மற்றும் இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (West Kalimantan), மத்திய கலிமந்தான் (Central Kalimantan) பகுதிகளில் காணப் படுகின்றனர்.