![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9f/KgKuaiKandazon_Sabah_Monsopiad-Cultural-Village-23.jpg/640px-KgKuaiKandazon_Sabah_Monsopiad-Cultural-Village-23.jpg&w=640&q=50)
மூருட்டு
தென்கிழக்கு ஆசியா நாடுகளில் வாழும் பூர்வீகப் பழங்குடி மக்கள் / From Wikipedia, the free encyclopedia
மூருட்டு அல்லது மூருட் (மலாய்: Kaum Murut அல்லது Bangsa Murut; ஆங்கிலம்: Murut; சீனம்: 穆鲁特) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியா, நாடுகளில் வாழும் பூர்வீகப் பழங்குடி மக்களாகும். முக்கியமாக இவர்களை மலேசியாவின், சபா, சரவாக் மாநிலங்கள்; புரூணை; இந்தோனேசியாவின் கலிமந்தான் உள்ளிட்ட இடங்களில் காணலாம்.[1]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
![]() மான்சோபியாட் கலாசார கிராமத்தில் பாரம்பரிய உடையில் ஒரு மூருட்டு மனிதர் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
120,000 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() சபா லபுவான்: 100,631 (2010) சரவாக்: 9,500 (1980) ![]() நுனுக்கான், வடக்கு கலிமந்தான்: 56 513 (2016), கிழக்கு கலிமந்தான் ![]() தெம்புரோங் மாவட்டம் | |
மொழி(கள்) | |
மூருட்டு மொழி; ஆங்கிலம்; புரூணை மலாய்; இந்தோனேசிய மொழி (கலிமந்தான்); | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம் (80%), இசுலாம் (18%), ஆன்ம வாதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
டயாக் மக்கள், திடோங் மக்கள் கெலாபிட், காயான் மக்கள், கென்னியா, மெலனாவ், லுன் பாவாங், பிடாயூ, பெனான், புனான், தகால், ஓராங் உலு, ஆஸ்திரோனீசிய மக்கள் |
மூடு
போர்னியோவின் வடக்கு உள்நாட்டுப் பகுதிகளில் வசிக்கும் 29 துணை இனக் குழுக்களில் (Sub-ethnic Groups) மூருட்டு மக்களும் ஒரு குழுவினர் ஆகும். மூருட்டு மக்கள் பேசும் மூருட்டு பேச்சு மொழிகள் (Murutic Languages) என்பது ஆசுத்திரோனேசிய மொழிகளுக்குள் (Austronesian Languages) வகைப்படுத்தப் பட்டுள்ளன. மூருட்டு என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு ’மலை மக்கள்’ என்பதாகும்.[2]